Wednesday, September 2, 2026

94.கிருஷ்ண தரிசனம் -11 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் -11 (பகவத்கீதை)

---------------------------------------------------------

பகவத்கீதையில் அத்தியாயம் 2-இல் ஸ்லோகம் 57- இல் கிருஷ்ண பரமாத்மா என்ன கூறுகிறார்?

யார் எதிலும் பற்றில்லாதவனாக சுகத்தில் மகிழ்வதில்லையோ, துக்கத்தை வெறுப்பதில்லையோ, அவனுடைய புத்தி நிலைபெறுகிறதுஎன்கிறார்.

என்ன சார்.. போன ஸ்லோகத்தில் கூறப்பட்டதுதானே இது? மீண்டும் இதற்கு ஏன் மீண்டும் ஒரு ஸ்லோகம்?” என்று யோசிப்பதாக இருந்தால் அதற்கும் பதில் இருக்கிறது.

இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் “Cause(காரணி)” வரும்.

இந்த ஸ்லோகத்தில் ”concequence (விளைவு)” வருகிறது.

Concequence எனறால் என்ன?

முந்தைய ஸ்லோகத்தில்துக்கத்தில் துவளுவதில்லையோ..” என்றார். ஆனால், இந்த ஸ்லோகத்தில் (57) “துக்கத்தில் வெறுப்படைவதில்லையோ..” என்கிறார்.

துக்கத்தில் துவளுவது என்றால், உதாரனமாக காதல் தோல்வியை எடுத்துக்கொள்வோம்.

ஒருவன் காதலில் தோல்வியடைந்து விடுகிறான். தமக்கு இந்த உலகமே கைநழுவிப்போய்விட்டது என்கிற அளவிற்கு நொந்துபோய், தாடிவளர்த்து, கையில் மதுபாட்டிலுடன், ஒரு பழைய பைக்கை (இரு சக்கர வாகனம்) எடுத்துக் கொண்டு எங்காவது நாய் இருக்கும் இடமாகப் பார்த்து, அதன் அருகில் சென்று உட்கார்ந்து கொள்வது அல்லது நாயே இவன் அருகில் வந்து படுத்துக்கொள்வதுண்டு! அதாவது துக்கம் வந்துவிட்டால் அதனை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டே இருப்பது.

இன்னொரு பக்கம் துக்கத்தைப்பார்த்து வெறுப்படைவதில்லை. துவளுவது வேறு. வெறுப்படையாமல் இருப்பது வேறு. வந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்வது. அந்த துக்கம் தன்னை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது. அதற்காக எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது தன் போக்கில் போகட்டும் என்று விட்டுவிடுவது! இது “Cause(காரணி).”

அடுத்ததாக துக்கம் வந்துவிட்டது. ஆனால் அதைக்கண்டு பதற்றம் அடையாமல் இருப்பது. வெறுப்படையாமல் நடந்து கொள்வது.  [முந்தையநிலையில் சுக,துக்கத்தை விரும்புவதில்லை (“Cause(காரணி)”) தானாக தேடிச்செல்வதில்லை.

இங்கே concequence (விளைவு) –இல் மகிழ்ச்சியில் உற்சாகத்தில் திளைப்பது. ஒருவன் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது, அரசுத்தேர்வுக்கான முடிவு வெளியாகி அவன் பாஸாகி விட்டான் என்று தெரியவர, தன்னை மீறிய உற்சாகத்தில் அம்மாநான் பாஸாயிட்டேன்என்று தன் இரண்டு கைகளையும் விரிப்பதுண்டு. அப்போது குடித்துக்கொண்டிருந்த டீ அவன் அருகில் இருப்போர் உடைகள் மீதெல்லாம் தெறித்து விழுந்து கறைபடுத்தும். இதுபோன்ற அதீத மகிழ்ச்சியும் இல்லாத நிலைதான் concequence (விளைவு). இது concequence நிலையில் உள்ள அறிவு முதிர்ச்சி.

          அர்ஜுனர் கேட்ட கேள்விக்கு மூன்றாவதாக இந்த பதில் கிருஷ்ணபரமாத்மாவிடமிருந்து வெளிப்படுகிறது.

-------------------------------------------------------

 

 

 

No comments:

Post a Comment

99.கிருஷ்ண தரிசனம் -16 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -16 ( பகவத்கீதை )           ” பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது . பற்று ஆசையாக உருவெடுக்கிறது...