மனக்கவலையை நீக்க என்ன வழி? (குறளின்
குரல்- 9)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. (குறள்: 7)
தனக்கு உவமை இல்லாதவன், அதாவது இறைவன். இறைவனுக்கு நிகர் இறைவனே. இதை இரண்டுவிதமாகக் காணலாம். ஒரு சில மதங்களில், “இறைவன் ஒருவனே. அவனைத்தவிர வேறு யாருமில்லை”என்பார்கள்.
“பிரம்மம் ஒக்கடே” என்கிற ஒரு பாடல் உள்ளது. அந்தப் பாடலில் ”பரப்பிரம்மம்”
என்று சொல்லி முடித்து விடுவர்.
அதுபோல “இறைவன் ஒருவனே” என்று சொல்வது ஒருமுறை.
“இறைவனுக்கு நிகர் வேறு யாருமில்லை”என்பதே இன்னொரு முறை. எல்லா மதங்களின் கருத்துகளும் இதைத்தான் பிரதி பலிக்கின்றன.
உவமை என்றால் என்ன?
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவது ஆகும்.
தனக்கு உவமை இல்லாதான், அதாவது ”இறைவனுடன் ஒப்பிட வேறு யாருமே இல்லை” என்பதே இதன் கருத்து.
இது எப்படி ஒரு முடிவை எட்டுகிறது?
”தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு
அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”.
இறைவனுடய திருவடியைச் சரண்புகாமல் மனக்கவலையைப் போக்க முடியாது.
இங்குதான் “மனக்கவலை” என்னும் வார்த்தையை திருவள்ளுவர் குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இது மனிதர்களின் சோகம், மற்றும் உணர்ச்சிபூர்வமான
ஒன்று. அதை ”அழிக்க முடியாது” என்று கூறாமல், “மாற்ற முடியாது” என்கிறார் வள்ளுவர்.
மனக்கவலை என்பது 2000
ஆண்டுகளுக்கும் முன்னரே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.
ஆகவே, அதை மாற்ற வேண்டுமெனில் ”கடவுளின் அருள் தேவை” என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
-----------------------------------------------
No comments:
Post a Comment