Monday, September 7, 2026

120.அன்றைய விருந்தோம்பல் இன்றைக்கு சாத்தியமா? (குறளின் குரல்- 19)

 

அன்றைய விருந்தோம்பல் இன்றைக்கு சாத்தியமா? (குறளின் குரல்- 19)

 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

            திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் இன்றைய வாழ்வியல் முறையோடு ஒப்பீடு செய்து வருகிறோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்க இருப்பது திருவள்ளுவரின் திருக்குறளில் ஒன்பதாவது அதிகாரமான ’விருந்தோம்பல்’. இதில் முதல் குறளாக வருவது,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

இந்தக் குறளில் விருந்தோம்பல் என்னும் அறத்தை வேளாண்மை என்கிற பொருளோடு காட்டுகிறார். கணவந் மனைவியாக பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்வது எதற்காக என்றால், ’விருந்தோம்பல்’ என்னும் வேளாண்மையைச் செய்வதற்குத்தான் என்கிறார் வள்ளுவர். அதாவது ’தங்கள் இல்லத்திற்கு வரக்கூடிய விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களை மரியாதையுடன் வரவேற்று, உணவு, பானங்கள், இன்னும் அவர்களுக்கு விருப்பமான பண்டங்கள் ஆகியவற்றை பரிமாறி, நன்கு  உபசரித்து, ஆத்மார்த்தமாக அளவளாவி, அவர்கள் மனம் மகிழும் வகையில் கொண்டாடி, அன்புடன் வழியனுப்புவதற்குத்தான் ஒரு குடும்பமே வாழ்கிறது’ என்கிற அளவிற்கு விருந்தோம்பலை உயரிய இடத்தில் வைத்துக்காட்டுகிறார். பொதுவாக பிறரை மகிழ்விப்பது மிகவும் நல்ல பண்பே. தத்துவம், மதம், வாழ்வியல் முறை இப்படி எதுவாயினும், நமக்கு பிரச்சினையை இழுத்துக்கொள்ளாமல் இன்னொருவரை மகிழச்செய்வது நல்ல நேர்மறையான விஷயமே. அக்கால தமிழர் மரபில் அதற்கான அமைப்பு எப்படி இருந்தது என யோசித்தோமானால், இந்த விருந்தோம்பலை மிகவும் உச்சநிலையில் அதற்கு மதிப்பு தந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆனால், இன்றைய அது அப்படியே இருக்கிறதா? நாம் அதனை முறையாக பின்பற்றமுடியுமா? என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.  

--------------------------------------

 

No comments:

Post a Comment

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...