Monday, September 7, 2026

116.பண்பு எப்படி இருக்க வேண்டும்? (குறளின் குரல் – 16)

 

பண்பு எப்படி இருக்க வேண்டும்? (குறளின் குரல் – 16)

 

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.   (குறள் - 97)

 

            அறம்என்னும் வார்த்தை போல் தமிழில் மிகச்சிறந்த ஒன்றுபண்புஆகும். சமுதாயத்தின் முன் ஒரு மனிதரின் வெளிப்பாடுஅறம்’. அது செயலாகச் செய்யப்படுவது. அந்த அறத்தின் பலன் வெளியிலிருக்கும். எப்பொழுது கதவு திறக்கும். உள்ளே நுழையலாம் என காத்திருக்கும். ஆனால், பண்பு எனப்படுவது ஆளுமை. இந்தப் பண்பு என்பது ஏதோ ஒரு விஷயத்திற்கானது அல்ல. அது பன்முகத்தன்மை கொண்டது. எப்பேர்ப்பட்ட மனிதர் இப்படி ஒரு தவறான வார்த்தையை விட்டுவிட்டாரே.. இவ்வளவு பெரிய சாதனயாளர் இப்படி அபத்தமாக பேசிவிட்டாரே.. எல்லா மக்களும் வணங்கக்கூடிய சுவாமிஜியாக இருப்பவர் ஒரே ஒரு வார்த்தை கெட்ட வார்ர்த்தை பேசிவிட்டாரென்றால் அதன் விளைவிற்கும், மது அருந்தி விட்டு சாலையோரம் சண்டயிட்டு வம்பு செய்பவன் கெட்டவார்த்தை  பேசுகிறான் என்றால் அதன் விளைவிற்கும் நிறைய வித்தியாசமுண்டு. அந்த வார்த்தை ஒரே வார்த்தையாக இருக்கலாம். அதன் உச்சரிப்பு ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதை எவர் சொல்கிறார் என்பதைப் பொறுத்து அதன் தாக்கம் வேறுபடுகிறது.

No comments:

Post a Comment

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...