வள்ளுவனும் கடவுளும் (குறளின் குரல்
- 7)
திருக்குறளை எழுதியது
ஒருவரா?
திருக்குறளை இயற்றிய ‘திருவள்ளுவர்’ என்பவர் உண்மையில் இருந்தாரா? இல்லையா? அப்படி இருந்திருந்தால் அவர் ஒருவர்தானா? இப்போது திருவள்ளுவராக அறியப்படுவது உண்மையான திருவள்ளுவரின் முகம் கிடையாது. கடந்த1962 ஆம் ஆண்டில் ஒரு ஓவியரால் வரையபட்டதே இன்றைய திருவள்ளுவர்!
மற்றபடி திருவள்ளுவர் யார்? அவரைப்பற்றிய என்ன விவரங்கள் எவை? என்பதும் யாருக்கும் தெரியாது. அவர் ஒருவரா? பலரா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அது குறித்து எனக்கு என்ன வகையான சந்தேகம் வருமென்றால், ஒரே காலகட்டத்தில் ஒரே அலைவரிசையில் கருத்துகள் இருந்தாலுமே எப்படி அவர் மூன்று விஷயங்களிலுமே புத்துணர்ச்சியோடு இருந்தார் ?
இவ்வளவு ஞானமும் ஒரே நபருக்கு இருந்திருக்க முடியுமா? என்பது முக்கியமான ஒன்று. இதனாலேயே திருக்குறளானது பலரால் எழுதப்பட்டு பின் ஒன்றாக தொகுக்கப்பட்டு, பொதுப்பெயராக வழங்கப்பட்டிருக்கலாம். ஒரு குழுவின் முக்கிய நபரால் அல்லது அப்போதைய உயரிய சிந்தனாவாதிகளில் மிகச்சிறந்தவராக
இருந்திருக்கக்கூடும்.
திருவள்ளுவர் ஒருவர்தான் என்ற முடிவிற்கு வந்தால் அவர் ’ஆத்திகரா?
நாத்திகரா?’ என்கிற சந்தேகம் எழும். ’அவர் ஒருவரில்லை பலர்தான்’ என்கிற
முடிவெடுத்தால் அந்த பிரச்சினை இல்லை. ஏனெனில் அந்த பலரில்
ஆத்திகர்களும்,
நாத்திகர்களும் கலந்திருக்கலாம்.
திருவள்ளுவர் ஒருவர்தான் என் முடிவெடுத்தெடுத்தால்,
தமிழ்ச் சமுதாயத்தில் மிகப்பெரிய அறிவாளியாக, ஞானம் பெற்றவராகக் கருதினால் நிச்சயமாக அவர் ஆத்திகராகத்தான் இருக்க முடியும். அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதில்
பலவிதமான கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவர் நாத்திகரல்ல என்பது இந்த ”கடவுள் வாழ்த்து” என்பதை வைத்ததனால் இருக்கலாம். அந்தக் கடவுள் வாழ்த்துகூட பிற்காலத்தில் சொருகப்பட்டது
என்றும் சொல்வர். நாம் அதற்குள்
நுழைய வேண்டாம்.
ஏனென்றால் திருக்குறளின் நடை ஒரே மாதிரியாகத்தான்
இருக்கிறது.
இதற்குப்பின்னாலும் கடவுளைப்பற்றிய
நிறைய விஷயங்களைக் காணப்போகிறோம். ஆனால், இந்த அதிகாரத்தில் கடவுளைப்பற்றிய விஷயங்களை மிக அழகாக நமக்கு
வள்ளுவர் புரிய வைத்திருக்கிறார். அவர் கடவுளை மட்டும் வாழ்த்தவில்லை. அதன்மூலம் கடவுள் என்றால் என்ன? யார்? என்பதை மனிதர்களுக்கு உணர்த்தியுள்ளதாகவே
நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
முதல் குறளான “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே
உலகு”
என்னும் குறளில் இவ்வுலகத்தில் கடவுள்
எப்படி முதன்மையாக விளங்குகிறாரோ, அதுபோல் எழுத்துக்கள் முதலோ.. எழுத்து இல்லாமல் அதிலும் ”அ, ஆ” இல்லாமல் எழுத்துகள் வருவதில்லை. உயிரெழுத்துகளோ, மெய்யெழுத்துகளோ வரப்போவதில்லை. அவை வராமல் ஒரு மொழி இருப்பதில்லை. அதுபோல், ‘உலகிற்கு கடவுள்தான் முதன்மையானவர். அவரில்லாமல் இவ்வுலகில்லை’ என்கிற பொருளில் கூறியுள்ளார்.
உலகத்தின் தொடக்கம் ”முதற்றே உலகு” என்று முடித்திருக்கிறார். ”ஆதிபகவன்” என்கிற வார்த்தையில் பகவன் என்பது ஆதியாக
வந்துவிடுகிறது.
அதாவது, மனிதர்கள் மதங்களை தோற்றுவித்தார்கள்
என்பது உண்மை.
கடவுளை தோற்றுவிக்கவில்லை. கடவுள் அதற்கும் முன்னரே இருக்கிறார். ”கடவுள் உள்ளார்” என்பது ஆத்திகம். அவர் எந்தமதம் என்பது அந்தந்த மதங்களின்
ஆத்திகம்.
இந்து ஆத்திகமாகவோ, கிறிஸ்தவ ஆத்திகமாகவோ இருக்கலாம். கடவுள் ஒருவர்தான். கடவுளை மனிதர்கள் தோற்றுவிக்கவில்லை. கடவுள்தான் அனைத்தையும் தோற்றுவித்தார்.
அடுத்த குறளில்,
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 2)
பிற்காலத்தில் இது குறித்த விவாதங்கள்
வரும் என்று திருவள்ளுவர் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை!
’கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்று படிக்காத பாமரர்களா விவாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் சந்தோஷமாக
கடவுளை வணங்கிக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சிறிது படித்தவர்கள், ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள், வெளி சிந்தனைகளைப் பார்த்தவர்களிடம்தான் “உண்மையில் கடவுள் இருந்தால் இப்படி
நடக்குமா?
அப்படி இருக்குமா? என்கிற சிந்ந்தனை இருக்கிறது!
“கடவுள் இல்லையென்று கூறவில்லை. இருந்தால் நன்றாக இருக்குமே..”என்றெல்லாம் கூறும் பலவிதமான சிந்தனை
வந்துவிடுகிறது!
அதனால் வள்ளுவர் “கடவுளைக் கும்பிடவில்லையென்றால் நீ
படித்ததனால் என்ன பயன்?” என்று இரண்டாவது குறள் வருகிறது.
அடுத்ததாக வள்ளுவர் மூன்றாவது, நான்காவது குறள்களில் இறைவனைப் பற்றிய
விஷயங்களைப் பேசுகிறார். ”கடவுள் என்பவர் விருப்பு, வெறுப்பு இல்லாதவராக இருப்பவர்” அதன்பின் “நல்வினை, தீவினை” ஆகிய இரண்டும் கடவுளை வணங்குபர்களிடம்
அண்டாது என்கிறார். பகவத்கீதையின்
இறுதிக்கூற்றும் இதுதான்! பகவத்கீதையின் கருத்தை மீண்டும் மீண்டும் கூறுவதை குறள்களுக்கு
விளக்கமாகப் பார்த்தோம்.
”கடவுள் ஐம்புலன்களையும் ஒழித்தவர்!” என்கிறார் வள்ளுவர். ”பொறிவாயில் ஐந்தவித்தான்” அதாவது,”உடலின் பொறிகளால் விளையக்கூடிய ஆசைகளை
அறவே ஒழித்து ஒழுக்க நெறியில் நிற்பவன் கடவுள்!” என்று கூறுகிறார். அதன்பிறகு ”தனக்கு உவமை இல்லாதவன்” என்றும், அறத்தினுடைய கடவுள், அறவாழி அந்தணன்” என்பன போன்றவற்றைப் கடவுளின் பண்புகளாக
வள்ளுவர் காட்டுகிறார்.
ஒன்பதாவது குறளில் “எண்குணத்தான்” என்கிறார். சைவசித்தாந்தத்தில் இறைவனின் “எட்டு குணங்களாக”சொல்லப்படுவதே “எண்குணத்தான்” என்பதாகும். இவையெல்லாம் இறைவனின் பண்புகள்.
சரி.. இதனால் விளையும் பயன் என்ன? இது குறித்து பாத்தாவது குறளில் ”பிறவிப் பெருங்கடல் நீந்தமாட்டார்!” யார்? ”இறைவனைச் சேராதவர்கள்”என்கிறார்.
ஏழாவது குறளில், “கடவுளை வணங்காமல் மனக்கவலையைத் தீர்க்க
முடியாது”,
அதுமட்டுமின்றி “இறைவனைச் சேர்ந்துவிட்டால் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் வராது”என்கிறார்.
மூன்றாவதில் கடவுளின் ”மலர்மிசையை ஏகினான்” அப்படி ஏகினால், ”நிலமிசை நீடுவாழ்வர்” அதாவது இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்வார்கள்
என்கிறார்.
ஆக, கடவுளின் தொடக்கம், அவரின் குணம், அவரால் விளையும் பயன் ஆகிய மூன்றையும்
இந்த அதிகாரத்தில் அழகாக வள்ளுவர் தெளிவுறுத்துகிறார். ஆனால் ”கற்றதனாலய பயன் என்கொல்’ அதாவது, கல்வி அறிவு பெற்றுவிட்டு, கடவுளை நிரூபித்துக்காட்ட வேண்டும்
என்றால்,
விஞ்ஞான ரீதியாக நிச்சயம் முடியாது. அவரை ஐம்புலன்களால் காணமுடியாது. நவீனகால விஞ்ஞானக் கருவிகளாலும் காணமுடியாது. வரும் காலங்களிலும் காணமுடியுமா? என்றும் தெரியாது. ஆனால், இவை அனைத்தையும் கடந்து ”கடவுள் இருக்கிறான்” என்பதைத்தான் நம் வேதங்கள் கூறுகின்றன. இதைத்தான் வாக்கியங்களை நம்புவோம் என்பது. எல்லா மதங்களிலுமே வாக்யங்களையே, அவர்களின் புனிதநூலை மக்கள் நம்புகின்றார்கள். ஏன் இந்த வாக்கிய பிரமாணம்? ஏனென்றால் கடவுளைக் காண்பதற்கு வேறு வழியில்லை. அவர் பெயரைக்கூறிக்கொண்டே தவறான விஷயங்களைச்
செய்ய வேண்டாமென்றுதான் கூறுகிறோம். அதனால்தான் அந்த வாக்கியத்தை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அதேபோல்தான் வள்ளுவரின் வாக்கும்! நாம் எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றவர்களாக
இருந்தாலும்,
“கடவுள் இல்லை”என்று சொல்வதற்கும் முன்னர் கடவுளைப்பற்றி
படித்துபின்
“இல்லை” என்று கூறத்துணியலாம் என்பதே இந்த அதிகாரத்தின்
தீர்க்கமான முடிவு. இன்றைக்கு இருக்கக்கூடிய
அரசியல் பாணியாக தேவை என்கிறேன்.
---------------------------------------------------
No comments:
Post a Comment