பிறவிக்கடலைக் கடக்கும் வழி? (குறளின்
குரல்- 5)
கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி
நீந்தல் அரிது. (குறள் 8)
திருக்குறளில் நாம் பல குறள்களைப் பார்த்துவருகிறோம். அவ்வகையில் ”அறவாழி அந்தணன்”என்பதை நாம் பிராமணர்களைக்குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது அப்படியல்ல. “பிராமின்”என்பது வேதத்தில் பிரம்மன் என்பது கடவுள். பிரம்மத்துடன் நெருங்கிய நிலையில் இருப்பவர்களை அந்த பெயர் பயன்பாட்டில் இருந்துவந்தது. அது வர்ணாவில் வந்தது. பின்னர் அதுவே நிலைபெற்றுவிட்டது. அதைத்தான் இன்றும்கூட நாம் ஒரு வழக்குச் சொல்லாக பயன்படுத்தி வருகிறோம். அதே வார்த்தை சம தமிழ் வார்த்தையாக ”அந்தணன்” என்கிற வார்த்தை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அறவாழி அந்தணன் என்று சொல்கிறபோது ”அறத்திலே வாழக் கூடியவன்”, “அறம் என்கிற கடலைத்தாண்டி அவனால் இருக்க முடியாது”என்கிற பொருளில் இறைவனைக் குறிப்பிடுகிறார். அத்தகைய கடவுளின் திருவடிகளைச் சேராமல் ”பிறவாழி நீந்தல் அரிது” அதாவது அறத்திற்கு பொறுப்பாளராகிய கடவுளின்
துணையில்லாமல் வேறு எந்தக் கடலையுமே நம்மால் நீந்திக் கடக்க முடியாது. ”எந்தக் கடலையும்” என்றால் பிறவியாகிய பெருங்கடல்!
-------------------------
No comments:
Post a Comment