நீத்தார் என்பவர் யார்? (குறளின் குரல்-4)
நீத்தார் பெருமை – குறள் 22
துறந்தார்
பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை
எண்ணிக்கொண் டற்று. (குறள்
22)
இந்தக்குறள் ”நீத்தார் பெருமை” அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. நீத்தார் என்றால் தங்களின் ஆசைகளை நீக்கியவர்கள் எனலாம். ஆசை என்பது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு எப்படிப்பட்ட ஆசை ஏற்பட்டாலும், அவர் திடமான தீர்மானத்துடன் இருந்தால் நல்லொழுக்கத்தில்
இருந்து விலகாமல் இருக்க முடியும். சமஸ்கிருதத்தில் பதஞ்சலி முனிவர் ’ஏமம்..நியமம்”என்று குறிப்பிடுகிறார். யோகக்கலையில் முதல் இரண்டு நிலைகளில் ‘ஏமம், நியமம்’ ஆகும். இவையிரண்டுமே ஒழுக்கம் சார்ந்தது. ‘என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?’ (What to do? And what not to do?) ஆகிய இரண்டுமே அதில் இடம் பெற்றிருக்கும். அந்த மாதிரியான ஒரு கருத்தே தமிழில் ” ஆசைகளை நீத்தார்” ஆகும். இது துறவிகளுக்காக சொல்லப்பட்டதல்ல.
எளிய மனிதர்களுக்கும்
சொல்லப்பட்டது தான். அதில் எவ்வளவு தூரம் சாதிக்கிறார்களோ அது அந்த அளவிற்குப் பெரிய விஷயமாகும்.
ஆசைகளை நீத்தவர்களின் பெருமையை விளக்குவதற்காக திருவள்ளுவர் எப்படி உவமையாகத் தருகிறார் என்றால், இவ்வுலகில் இதுவரை இறந்துபோனவர்களின்
எண்ணிக்கையைக் கணக்கிட்டால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அந்த அளவிற்கு பெருமைகள் மிகுந்ததாகும் என்கிறார். உண்மையில் அந்த என்ணிக்கையை யாராலும் கணக்கிட முடியாது. யாருக்குமே தெரியாது. அதுபற்றிய கணக்கீடே கிடையாது. ’கடல் போன்ற புகழ், வான் போன்ற புகழ், அண்டம் போன்ற புகழ்’ என்பவற்றையெல்லாம் தாண்டி நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக்கூட
கணக்கிட்டுவிடலாம். ஆனால், அனைத்தையும் விட ஆசைகளை நீத்தவர்கள் புகழ் பெறுவர் என்கிற கருத்தை நிலைநாட்டும் குறளாக இது அமைந்துள்ளது.
--------------------
No comments:
Post a Comment