Friday, September 4, 2026

101.அங்குசமும் மன உறுதியும் (குறளின் குரல் -1) (திருக்குறள்- நீத்தார் பெருமை)

 

 

அங்குசமும் மன உறுதியும் (குறளின் குரல் -1)

(திருக்குறள்- நீத்தார் பெருமை)


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.                                                                                                                                     (குறள் 24)

உரனென்னும் தோட்டியான்என்றால் யானையைக் கட்டுப்படுத்தக்கூடியஅங்குசம்ஆகும். ”ஓரைந்தும்என்பது நம் உடலின் ஐந்து பொறிகளான 1.கண் 2.காது 3. மூக்கு 4.நாக்கு 5.தோல்  ஆகியவற்றை குறிக்கும். திருவள்ளுவர் நம் உடலின் ஐம்பொறிகளையும் குறிப்பிடும் முன்னர் அங்குசத்தைக் குறிப்பிடுவதால், நமது ஐம்பொறிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு யானைக்கு சமமாக உருவகப்படுத்துகிறார். ஆக, ஐம்பொறிகள் என்பது ஐந்து யானைகளாகும். ஏன் ஐம்பொறிகளையும் யானையுடன் ஒப்புமைப்படுத்த வேண்டும்? யானையின் பலம் மிக மிக அதிகம். அதற்கு சற்றும் குறைவில்லாமல் நம் ஐம்பொறிகளும் அதீத பலத்துடன் செயல்படுகின்றன. ”கண்நம்மையும் மீறி வேறொன்றைப்பார்க்க முயற்சிக்கும். அதேபோல்தான் காது. அதற்கும் தனி சக்தி உண்டு. வகுப்பறையில் பாடத்தை கவனித்துக்கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ காற்றில் கலந்துவரும் திரைப்பட பாடலைக்கேட்டு நம்மையும் மீறி உள்வாங்கும். -அவற்றை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, நம்மையும் அறியாமல் தேவையற்ற சில வார்த்தைகளை கொட்டிவிடுகிறோம். இதனை ஆங்கிலத்தில் TOUNGE SLIP (பிறழ் நாக்கு ) என்கிறோம்.

ஆக, யானைக்கு சமமான பலத்துடன் செயல்படும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்த, “அங்குசம்போன்ற கருவியாகப் பயன்படுவது மன உறுதியாகும். மனம் உறுதியுடன் இருந்தால் ஐம்பொறிகளையும் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். திராவிடச் சித்தாந்தம் மற்றும் நாத்திகக்கொள்கையில் ஊறித்திளைத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த திருக்குறளுக்கான தனது உரையில், “துறவறம் என்பது மிகப்பெரிய விஷயம். ஐம்பொறிகளையும் அடக்கியாளக்கூடிய மன உறுதியைப்பெற்றவர்களே துறவு வாழ்க்கை எனும் நிலத்தில் ஊன்றுவதற்கு ஏற்ற சிறந்த விதையாவர். அப்படி விதைக்கப்பட்ட விதையே முளைத்து வரும்என்று ஆன்மீகத்தோடு ஒப்புமைப்படுத்துகிறார்.                                 -------------------

No comments:

Post a Comment

114.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...