Monday, September 7, 2026

115.மனதிற்கான அணிகலன்கள் எவை? (குறளின் குரல் - 15)

 

மனதிற்கான அணிகலன்கள் எவை? (குறளின் குரல் - 15)

 

திருக்குறளில் ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் இரண்டு முக்கியமான குறட்பாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பின் வரும் குறள்:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.   (குறள் - 95)

 

பணிவாக இருப்பது, இன்சொல் கூறுவது ஆகிய இரண்டும் மிகவும் முக்கியம். பணிவு என்பது ‘பயம்’ என்று  பொருள் கொள்ளக்கூடாது. அது போலியான விஷயமும் அல்ல. சிறையில் பணிவாக இருப்பது பெரிய விஷயமல்ல. வெற்றி பெற்றவர், ஒரு அரசன் பணிவாக இருப்பதே மாபெரும் விஷயமாகும். எவர் ஒருவரிடம் பலம் இருக்கிறதோ, பணம் இருக்கிறதோ, சிறந்த அறிவு இருக்கிறதோ.. அப்படிப்பட்டவர்களிடமிருந்து இந்த உலகிற்கு அவர்களின் ஆற்றல், திறமை திறமை தேவைப்படுகிறதோ அந்தத் தருணத்திலும், இருக்க வேண்டிய பண்பு ஆகும். அத்தகையப் பணிவு ஒருவர் தனியாக இருக்கும்போது புலப்படாது. மிகவும் அமைதியாக இருந்து, மென்மையாகப் பேசுபவர்கள் சில நேரங்களில் திடீரென கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். இதுவும் பயனற்றது. ஆக, பணிவு, அதில் ஒரு இன்சொல் தேவை. பணிவு என்பது ஒருவகை உடல்மொழி. இன்சொல் என்பது வாய் வெளிப்படுத்தும் மொழி. ஈவைஇ இரண்டும்தான் மந்தர்களுக்கு ஒருவகை அணி. அதாவது ஆபரணம் போன்று விளங்குவதாகும். அக்காலத்தில் உடலில் அணிவதை மட்டும் அணிகலன் என்றில்லாமல், மனதிற்கும் அணிகலன் தேவை என்பதைச் சொல்லிவைத்தனர். ஆனால், மக்கள் அதில் அக்கறை காட்டுவதில்லை. இங்கே, வள்ளுவர் பணிவு மற்றும் இன்சொல் ஆகிய இரண்டும் மனதிற்கான அணிகலன்கள் எனூம், இவை இருந்துவிட்டால் வேறெந்த அணிகலன்களும் மனதிற்கு மட்டுமல்ல.. உடலுக்கும் கூட தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்.  திருக்குறளின் இந்த அதிகாரம் முழுமையுமே இதனை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன.

--------------------------------------------------------------

No comments:

Post a Comment

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...