ஒரு ஹெச்.ஆரின் பணி எப்படி அமைய வேண்டும்? (குறளின் குரல் –
19)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள்- 100)
இது மிகவும் பிரபலமான குறள். ஒரு மரத்தில் கனிகளும் இருக்கினான. காய்கள்ம் இருக்கின்றன. கனிகளை ஒருசிலரும், காய்களை வேறுசிலரும் சாப்பிடுவதுண்டு.
பெரும்பாலும் கனிகளைச் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இப்படியிருக்கும்போது, ஏன் காயைச் சாப்பிட வேண்டும்? இதேபோல் நல்ல இன்சொற்கள் இருக்கும்போது, ஏன் வன்சொற்களைப் பேச வேண்டும்? நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பருவகாலத்தில் (சீஸன்) ஓரு மரத்தில் எல்லாமே கனியாக இருப்பதில்லை. 75%, 50%, 25% என்கிற விகிதத்தில் கனியாகவும், சில காயாகவும், பூக்கள் பூத்திருப்பது போன்ற நிலையில் இருக்கும். எல்லாம் பரவலாக நிறைந்திருக்கும்.
இதே போல் மனிதர்களின் மனதிலும் இன்சொல், வன்சொல், இரண்டும் கடந்து சமமான தரமுடைய சொற்கள் என மூன்றும் கலந்தே இருக்கின்றன. இவற்றில் இன்சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்கிறோம். ’ஒரு அலுவலகத்தில் இருக்கிறோம். Hierarchy
யாக இருக்கிறோம். திட்டினால்தான் வேலை நடக்கிறது’ எனக் கூறலாம். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கவில்லை.
ஒரு சிறிய கட்டமைப்பே இருந்திருக்கும்.
அவரவர்களுக்கென தனித்தனியான பொறுப்பு அல்லது பதவி இருந்திருக்கும்.
அவர்கள் தன் பாட்டிற்கு வேலைகளைச் செய்திருப்பர். ஆனால், இப்போது H.R., எப்படி வேலை வாங்குவது?, குறைந்த சம்பளம் கொடுத்து எப்படி வேலை வாங்குவது? போன்ற பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எளிதாக வேலை வாங்குவது, கடினமான வேலைகளை அளவீடு செய்வது, குறிக்கோளை நோக்கி ஆற்றுப்படுத்துவது, ஊக்கப்படுத்துவது,
அங்கீகரிப்பது, ஊதியம் கூட்டுவது, வேலை சம்பந்தமாக உறுதுணை செய்வது, அவர்களின் பணிக்குரிய மரியாதையைக் கொடுப்பது, போன்றவையே வேலைகள் நன்கு நடப்பதற்கான சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவையெல்லாம் நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன. இதனை சரி செய்ய ஊழியர்களைத்‘திட்டுதல்’ என்பது கையாளப்படுகிறது. இதுமட்டுமின்றி சில நேரங்களில் கடுமையாகத்
திட்டுவதும் உண்டு. கடுமையாகத் திட்டுவதன் வெளிப்பாடு எப்படி? திரைப்படங்களில் ரெளடிகள், கொலைகாரர்கள் போன்றோர் தங்கள் கூட்ட்த்தைச்
சேர்ந்த ஒரு ஆள் தவறு செய்துவிட்டால், உடனே தண்டனை வழங்குவர். இந்த செயலானது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக
அமையட்டும் என அவ்வாறு செய்வர். திட்டுதலின் அடுத்த படிநிலை இது. இதிலும் முறைப்படியான வேலைகளை ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வந்து
விட்டால், திட்ட வேண்டிய அவசியமும் குறையும். சிலசமயங்களில் கடுமையான வேலைப் பளுவால்
இருதரப்பினரும் மன அழுத்தத்துடன் இருக்கும்போது, பணியாளர் வேலை செய்யாமலிருந்தாலோ அல்லது
அந்த வேலையை தவறாகச் செய்துவிட்டாலோ அப்போது திட்டுவது என்பது தவறில்லை. ஆக, நிறைய
கனிகள் இருக்குமிடத்தில் சிறிதளவு காய் இருந்துவிட்டுப்போகட்டும். இதுவே என்னுடைய பார்வை.
ஆனாலும் அப்போதும் கூட வன்சொற்களை தவிர்ப்பது நல்ல மாண்பு எனலாம்.
-----------------------------------------------------
No comments:
Post a Comment