Monday, September 7, 2026

117.ஏழு பிறவிக்கும் இன்பமா? (குறளின் குரல்- 98)

 

ஏழு பிறவிக்கும் இன்பமா? (குறளின் குரல்- 98)

 

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.   (குறள் - 98)

 

சிறுமை இல்லாத சொல்லே இன்சொல் ஆகும். சிறுமை என்பது ஒருவரின் மகிழ்ச்சியைக் குலைத்து விடும்.  அவரை வருத்தப்படச் செய்யக் கூடியதாகும். அப்படிப்பட்ட இன்சொல் பேசுபவருக்கு மறுமையும், இம்மையும் இன்பம் தரும். இந்திய தத்துவவியலின்படி ‘மறுமை’ என்பது மறுப்பிறப்பு, இந்த உலகம், அடுத்த உலகம் என்பதையெல்லாம் குறிக்கும். இது மிக விரிவாக விவாதிக்க வேண்டிய தத்துவார்த்தமாகும்.  இம்மை, மறுமை எனப்படுபவற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமெனக் கருதுகிறேன் என்றால், இங்கே வாழும் வாழ்க்கை, இங்கு வாழாத வெளியில் வாழும் வாழ்க்கை; ஏழு பிறவிகள் என்பதுவுமே இப்பொழுது இருக்கும் பிறவி இதற்கு அடுத்தடுத்து வரக்கூடியப் பிறவிகள். பொதுவாக உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட நாட்களில் தங்களைப் புதுப்பித்து கொள்கின்றன. அதுபோல் ஆறுமுறை உடல் எடுக்கும் தன்மையை ஏழு பிறவி என்கிறோம். ஆக, இன்சொல் என்பது இன்றைக்கு, நாளைக்கு என்று மட்டுமல்ல.. என்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் இன்பம் என்னும் பயன்தரக்கூடியதாகும்.

-----------------------------------------------     

 

No comments:

Post a Comment

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...