Thursday, July 23, 2026

33.அலெக்சாண்டர் வழிபட்ட கடவுள் யார்?

 

அலெக்சாண்டர் வழிபட்ட கடவுள் யார்? 


உலகம் முழுக்க நிறைய மதங்கள் இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. அவற்றில் கடவுளர்களும் வழிபடப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், ’உலகின் மாவீரன்’ என போற்றப்படும்  அலெக்ஸாண்டர் எந்த கடவுளை வணங்கினார்? அந்தந்த கடவுளுக்கு இருந்த கோவில் எது? அந்த கடவுளும் எந்தளவிற்கு பிரபலமாக இருந்தார்? உலகத்தின் ஒரு பெரிய பேரரசை உருவாக்கியவர் அலெக்ஸாண்டர். உதாரணமாக அவரவர் தேசத்தி எல்லைக்குள்  இருக்கும் நகரங்களுக்குத்தான் அவரவர் பெயரை சூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மாவீரன் அலெக்ஸாண்டரின் தாய்மண்ணான கிரேக்கத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கும் எகிப்து நாட்டில் தான் வாழ்ந்த காலத்தில் அலெக்ஸாண்டர் உருவாக்கிய துறைமுகத்திற்கு ‘அலெக்ஸாண்டரியா’ என்ற பெயர் இன்றளவும் நிலைத்திருக்கிறது.  அவர் வாழ்ந்தது வெறும் 32 வயது வரைதான். அந்த 32 வயசதிற்குள் அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். னாலும் அவர் இறக்கும் தருவாயில் தன் கைகள் இரண்டையும் வெளியில் தெரிவதுபோல் வைத்து தன்னை புதைக்கும்படி சொன்னார் என்பதை வரலாறு கூறுகிறது. அவர் ஏன் அப்படிச் சொன்னார்? ” வாழ்வின் இறுதியில் கொண்டு போவதற்கு ஏதுமில்லை எனும் கருத்து உலக மக்களுக்குப் புரிய வேண்டும்’  என்பதற்காக அப்படி கூறியிருக்கிறார். அவர் இந்தியாவிற்கு வந்ததுக்குக் காரணம்  என்ன? அவர் காலத்தில் இங்கே இருந்த அபிரிதமான தங்கம்! அந்த நேரத்தில் இந்தியா உலகத்திலேயே மிகவும் செழிப்பான நாடு என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும். இரண்டாவது காரணம், ”இந்தியாவில் ஒரு ஒரு தெய்வீகத்தன்மை இருப்பதாகச் சொல்கிறார்களே.. அதைப்பற்றி என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்’ என்கிற ஆசைதான் அது. அவரோட குருவானஅரிஸ்டாட்டில்என்பவரிடம் அதிகம் முறை இந்த கேள்வியைக் கேட்டுள்ளாதாகக் கூறுகிறார்கள். அந்த கேள்விக்கான தேடுதலுடன் இந்தியாவிற்கு வந்த அவருக்கு   அதற்கான பதில் கிடைத்ததான்னு தெரியலை. ஆனால், இந்தியாவிலிருந்து திரும்பிப் போகும்போது விஷக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போகிறார். (இந்தியாவில் அவருக்கு பெரும் எதிரியாபருவகால தட்பவெப்பநிலை இருந்தது.) அப்படிப்பட்ட மாபெரும் பேரரசர் வணங்கிய கடவுளின் பெயர் கிரேக்க கடவுளான அப்பலோ. ஆனால்.. அந்த கடவுள் இப்போது வணங்கப்படுவதில்லை. இன்றைக்கு பெரும்பாலானவர்கள் நம்புவது என்ன? ஒரு கடவுளின் பெயர், எவ்வளவு பெரிய Material achievement கொடுக்கிறது? அது எந்த அளவிற்குன் என்றால், அரசியலில் ஒரு பதவியோ, ஒரு தொழிலின் வரவு செலவு குறித்த பணத்தின் சுழற்சியோ, ஒரு வீடு, கார் என்கிற ரீதியில்தான் மக்கள் பார்க்கிறார்கள். நிறைய பேரு தங்களின் குலதெய்வக்கோவிலில் கும்பிடுவதை விட்டுவிட்டு திருப்பதி, திருச்செந்தூருன்னு கும்பிட்டுக்கிறார்கள். னென்றால்.. குலதெய்வம் நூறு கோடிபண சுழற்சியைத்தரமாட்டார். ஆனால், திருப்பதி பாலாஜி கொடுப்பார் என நம்மில் பெரும்பாலானவர்கள் நம்புகிறோம். ஆனால், அப்படிப்பட்ட  Material achievement கொடுத்த கடவுள் ஏன் இன்னைக்கு அலமாரியில் இருக்கிறார்? நான் யோசிக்கிறேன். நீங்களும் யோசியுங்கள்.

--------------------------------------------------------    

No comments:

Post a Comment

43.LAW படிக்க ஆசையா ?

  LAW படிக்க ஆசையா ? Law- சட்டம் . நானும் சட்டம் படித்தவன்தான் . தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்...