LAW படிக்க ஆசையா ?
Law- சட்டம். நானும் சட்டம் படித்தவன்தான். தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்துறைதான். அதுமட்டுமின்றி நீண்டகாலத்திற்கு வருவாய் ஈட்டக்கூடிய துறையும் அதுதான். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முன்னணியில் இருக்கக்கூடிய துறைகள் எவை என்று பார்த்தால், அவை நிதித்துறையும், சட்டத்துறையும் தான்! இவற்றிற்கு அடுத்த இரு இடங்களில் மருத்துவம் மற்றும் பொறியியற்துறையும்! வளரும் நாடுகளில் முதலிடம் வகிப்பது மருத்துவத்துறை.
இரண்டாம் இடத்தில் பொறியியற்துறை, நிதித்துறை மூன்றாவது இடத்திலும், சட்டத்துறை நான்காம் இடத்திலும் அணிவகுக்கின்றன.
இங்கே அதிகமான கிரிமினல் வழக்குகளும் அமெரிக்காவில் அதிகமான சிவில் வழக்குகளும் நடக்கின்றன. நம் இந்தியாவில் அதிகமாக விபத்துசம்பந்தமான வழக்குகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் ’ஆக்கிரமிப்பு நிதி’ என்று சொல்லப்படக்கூடிய ‘Aggressive Finance Planning’ அதிகப்படியான வழக்குகள் நக்க்கின்றன. இதனால் அங்கு தொகை அதிகமாக ஈட்டப்படுகின்றன.
அமெரிக்காவில் பெரும்பாலான மாணவ, மாணவியர்
‘Aggressive Finance Planning’ பக்கமாக சென்றுவிடுதான் மருத்துவம் போன்ற பிற துறைகள் பக்கமாகத் திரும்புவர். Dynamic of Time (நேரம் இயங்குதன்மை) என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவும் அத்தக்கைய நிலையை நோக்கிச் செல்லக்கூடும். இன்று தனியார் நடத்தக்கூடிய சட்டக்கல்லூரிகள் வந்துவிட்டன. அவற்றிற்கிடையே ஆரோக்கியமான போட்டிகளும் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கும் முன் சட்டம் படித்தவர்களைவிட தற்போது சட்டம் படித்தவர்கள்,
படித்துக்கொண்டிருப்பவர்கள், வருங்காலத்தில் படிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் நேரம் நன்றாக உள்ளதென்றே கூறலாம். அதிக காலத்திற்கு ஜூனியர் வழக்கறிஞர்களாகப் பணியாற்றி அல்ல்ல்பட வேண்டுமென்கிற நிலை தற்காலத்தில் இல்லை. கார்பரேட் வழக்குகள் கிடைக்கின்றன.
வருவாயும் கணிசமாக கூடிவிட்டன. ஆகவே, தற்போது இன்ஜினியரிங் முடித்தபின்னரும் கூட சட்டத்துறையில் கால்பதிப்பவர் எண்ணிக்கை அதிகம். ஆகவே, சட்டத்துறை ஒரு நிறைவான துறை என்பதில் சந்தேகமில்லை.
--------------------------------------------------------------
No comments:
Post a Comment