Thursday, July 23, 2026

37.பேரரசர் செங்கிஸ்கான் வழிபட்ட கடவுள் எங்கே?

 

பேரரசர் செங்கிஸ்கான் வழிபட்ட  

கடவுள் எங்கே?


உலகம் முழுவதும் இருக்கி நிறைய மதங்கள், நம் மதத்தையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தினால், மனித வாழ்க்கைக்கான அத்தியாவசியமான விஷயங்களுக்காக, பேசிவருகிறோம். ந்த வரிசையில் இப்போது செங்கிஸ்கான் பின்பற்றிய மதம். செங்கிஸ்கான் என்கிற அவர் பெயரைக்கேட்டாலே ட இந்தியாவில் இருந்த குதிரைங்களெல்லாம் அலறும் என்கிறது ஒரு வரலாற்று ஆசிரியரின் பதிவு! மங்கோலியர்களில் செங்கிஸ்கான் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்த பேரரசர். வர் கோலோச்சிய அதே நேரத்தில் இந்தியாவில் டெல்லி சுல்தான்களின் காலம். இங்கே அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்த அந்த காலகட்டம். செங்கிஸ்கான் வழிபட்ட கடவுள் Eternal Blue Sky’. அதாவது அழகான, நிரந்தரமான, நீலநிறமான வானம். அதுதான் அவர் வழிபட்ட கடவுள். அதுவே மங்கோலியர்களின் கடவுளே அவர்தான். மங்கோலிய அரசர்கள் இந்த உலகத்தை சுமார் 300 ஆண்டுகள் வரை ஆண்டிருக்கிறார்கள். உண்மையில் ஆசிய கண்டம் முழுமையையும் ஆண்ட பேரரசர் என்றால், அவர் செங்கிஸ்கான்தான். பெரும் கொடுங்கோலர். சீனா, ரஷ்யா, அரேபியா மற்றும் இன்றைய ஆப்கானிஸ்தான் என ஒரு பெரும் நிலப்பரப்பை செங்கிஸ்கானின் ஆளுமையில் இருந்திருக்கின்றன. அந்த நேரத்துல அவர்கள் இந்தியாவை தங்கள் வசப்படுத்த முடியாமல் போனது.  மங்கோலியர்கள் வழிபட்ட கடவுள் இன்றைக்கு மங்கோலியாவிலேயே கிடையாது. இன்றைய மங்கோலியா முழுமையுமே புத்தமதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ற்றும் ஒரு மிகச்சிறிய சதவீதத்தில் மங்கோலிய பழங்குடியினர் வழிபடக்கூடிய கடவுளாக இந்த Eternal Blue Sky இருக்கிறது. அதன் சின்னமாக ஒருடும், ஓநாயும் இருக்கின்றன. அவ்வளவு பெரிய பேரரசர் உருவாக்க பின்பற்றிய மதமும் கடவுளும் ஏன் இன்று அலமாரிக்குள் அடைபட்டு விட்டது. ஏன் யாரும் அதை யாரும் வழிபடவில்லை?  இவ்வளவு பெரிய Material achievement கொடுத்த, ஒரு முந்நூறு வருஷம் இந்த உலகத்தை ஆண்ட அரச பாம்பரையைக் கொடுத்த, மன்னர்களை ஏன் மக்கள் நம்பவில்லை?  இதுவரைக்கும் அப்படி ஒரு achievement –ஐக் கொடுக்காத இந்துமதத்தை, ராஜராஜ சோழனைத் தவிர வேற யாரும் பெரிய ஆளுமையைக் காட்டவில்லை. அப்படி கொடுக்காத இந்துமதத்தை, இந்துமக்கள் இன்னும் விடாப்பிடியா வச்சிக்கிட்டுருக்காங்க. அது ஏன் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

---------------------------------------------------------

 

No comments:

Post a Comment

43.LAW படிக்க ஆசையா ?

  LAW படிக்க ஆசையா ? Law- சட்டம் . நானும் சட்டம் படித்தவன்தான் . தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்...