3
Minutes to Start Your Day Right!
லட்சிய நெருப்பு
”Motivation” என்றால் என்ன?
இதை நான் இரண்டுவிதமாகப் பார்க்கிறேன்.
திரைப்பட நடிகர் அர்ஜுன் நடித்த ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிறபோது நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேறி, தேசபக்தி பீறிட்டு, ”தேசத்திற்காக நான் உயிரைக்கொடுப்பேன்” என்கிற முடிவுடன் வெளியே வந்து ஒரு டீ குடித்த உடனே ”டப்புன்னு” தேசபக்தியெல்லாம் போய், மனதை வேறுமாதிரி ஆக்கிக்கொண்டு
“ஓ” என்றுகூறிப் போவது
எல்லாம் Motivation இலை.
சிலநேரங்களில் நம் ’கேப்டன் விஜயகாந்த்’ நீட்டி முழங்கிடுவார்.
அந்த வசனத்தையெல்லாம்
கூறி ஒரு அஞ்சு நிமிஷம்தான் ஒரு பொண்ணுக்கோ பையனுக்கோ ஒரு Motivation –ஐக் கொடுக்க முடியுமும் என்றால், அது ஒன்றும் சிறந்த
Motivation கிடையாது. நான் கூறும் Motivation வந்து,
it’s is a part of instinct-ஆக கொடுக்கலாம். உங்கள் மனதிற்குள்ளே எரியக்கூடிய நெருப்பாக இருக்க வேண்டும். அதுவும் அனல் பறக்கும் நெருப்பு. அந்த நெருப்பானது எந்த ஒரு எமோஷனாலேயும்
(Emotional) அழிக்க முடியாததாக இருக்க வேண்டும். அது எப்படி என்றால், எந்த ஒரு சோகத்தையும் நிரப்பக்கூடாது. எந்த ஒரு மகிழ்ச்சியையும்
அழிக்கக்கூடாது. அந்த நெருப்பானது காதல், காமம், சேர்க்கை, பிரிவு போன்ற எதனாலும் அழிக்க முடியாததாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ”Burning
desire” என்று சொல்வார்.
”Burning Desire with unquenchable Spirit (தணிக்க முடியாத எரியும் நெருப்பாக விளங்கும் உத்வேகம்) கொண்டவர்களால் மட்டுமே இந்த உலகத்தில் மிகப்பெரிய செயல்களைச் செய்ய முடியும்.” என்பது மகாத்மாவின் கருத்து. சுவாமி விவேகானந்தரின் வாக்கும் இதுவே. இத்தகைய
Motivation மட்டுமே மெய்யானதாக இருக்க முடியும்.
மேலே கூறப்பட்ட Burning Desire with unquenchable Spirit என்பதை ஒரே ஒரு வீடியோவில் செய்துவிட முடியுமா? என்றால், நிச்சயமாக முடியாது. அது ஒரு கடிகாரத்தில் அலாரம் அடுத்துக்கொண்டே இருப்பது போல! வீட்டில் அலாரத்தை ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால், 24 மணி நேரமும் அலாரத்தை ஒலிக்குமாறு வைத்தால் நம் பிள்ளைகளே நம்மைப்பார்த்து
“உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?” என்று கூறுவார்கள். அதனால்
Motivation கருத்துகள் என்கிற பெயரால் நான் சொல்லப்போவது என்னவெனில், ஒரு சின்ன தீக்குச்சி. அதன் மூலம் நெருப்பை உண்டாக்கி போடுகிறேன். ஆனால், விறகு உங்களுடையதாக இருக்க வேண்டும். என்னால் தரப்படும் நெருப்பு மட்டுமே நீண்ட நெடிய நேரத்திற்கு இருக்காது. ஆகையால் உங்களின் நெருப்பு பலம்மிகுந்ததாக இருந்ததென்றால்,
உங்களுக்கு நெஞ்சுறுதி, வலுவாக இருந்ததென்றால்,
நான் போடும் தீக்குச்சிகூட மிகப்பெரிய நெருப்பை உருவாக்கி விடும். உண்மையும் இதுதான். இன்றைக்கு சிவில் சர்வீஸில் சாதித்தவர்கள், சினிமாவில் சாதித்தவர்கள், அரசியல், ஆன்மீகம், அறிவியல், ஆய்வுகள், தொழிலில் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் அனைவரிடமும் இருக்கக் கூடிய ஒரு ஒற்றுமை என்னவென்றால்,
Burning Desire with unquenchable Spirit நிச்சயமாக அவர்களுக்குள் இருந்திருக்கும்.
இது மாற்றவோ, மறுக்கவோ முடியாத ஒன்று.
Burning Desire இல்லாமல் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் கை கொடுத்தாலும்கூட, இந்த உலகத்தில் யாராலும் அரிய, பெரிய காரியங்களை ஆற்ற முடியாது. யாரையாவது ஒருவரை தூக்கிக் கொண்டுபோய் 300 மீ உயரத்திலிருந்து கீழே போட்டாலும், தூசி எப்படி செட்டிலாகிறதோ அது போலவே செட்டிலாகிவிடுவார்கள். தூசி பறக்குகுது. அது ஏன் பறக்கிறதென்றால்,
அதற்குள் ஒரு சக்தி (Energy) இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த தூசியையும், எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் விட்டுவிட முடியும். அது பறந்து கொண்டே இருக்கும். பின் மெல்ல மெல்ல தரையிறங்கி விடும். ஆக அத்தகைய சக்தி இல்லையென்றால், அத்தகைய நபர்களைப்பார்த்து, ”நீயெல்லாம் ஒரு தூசிடா” என்று ஏகடியமாக பேசிவிட்டு சமூகம் கடந்து போகிறது. அப்படி பறக்கிறவர்களைப்
பார்த்து “நீ இப்போது மேலே பறக்கிறாய். ஆனாலும், நீ ஒரு தூசிதான். நீ கருடனோ, கழுகோ, சிங்கமோ அல்ல. பெரிய சாதனையாளன் அல்ல. ஓரிரு நாள் வேண்டுமானால் நீ
பறக்கலாம். ஆனால் நீ கண்டிப்பாக கீழிறங்கி விடுவாய்.” என்கின்றனர். தூசியானது மிகவும் லேசாக(எடையின்றி) இருப்பதால்மட்டும்
அந்த கருத்து வரவில்லை. அப்படி தூசிக்கு சமமானவர்கள் மூன்று தினங்களில் கீழே விழுந்து விடுவர் என்பதால் சொல்லப்படும் வார்த்தை அது. உங்கள்
Motivation, உங்கள் Burning desire வலுவாக இருந்தால், பிறர் உங்களை தூக்கிவிடும்போது
கீழே விழ மாட்டீர்கள். ஒரு கருடன் போல் கம்பீரமாக மேலே மேலே பறக்கத்தொடங்கி விடுவீர்கள். இதற்கு நிறைய விஷயங்களை நாம் எடுத்துக்காட்டுகளாக
கூற முடியும். அதனால் நான் ஒரு சின்ன தீக்குச்சியாகத்தான் பேசப்போகிறேன்.
-----------------------------------------------------
No comments:
Post a Comment