Wednesday, July 22, 2026

28. A New Beginning: Unlocking the Power of Fresh Perspective

 

                                                     A New Beginning: 

                                    Unlocking the Power of Fresh Perspective


         நான் இரண்டு organization –இல் பணி செய்துவருகிறேன். அரசியல் அல்லாமல், அதைத்தாண்டி EETY Foundation (Education, Employment, Transformation For Youth) . இதன் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், கல்வி, வேலை வாய்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வு தருதல் ஆகும். Transformation என்பது ஒரு இந்துவாக நம் மதத்தினைப் பற்றி விவாதங்களுக்குரிய விஷயங்களாக இருந்து வருகின்றன. ஒரு தீவிரவாதிஇந்துஎன்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு சில விஷயங்களை அவர்கள் புரிந்து கொண்டதனால் இந்த மதத்தை பாதுகாக்க (Defend) அவர்கள் செய்யும் பணி அது.

 Transformation பொறுத்தவரை “Modern Hindu” என்பதைத்தான் முன்னெடுக்கிறேன். தன் மதத்தைப் பொறுத்தமட்டில், இன்றைய நவீன காலச்சூழலுக்கு பழமையான இந்துமதத்தின்ஞானம்ஏற்புடையதாக இருக்குமா? இவ்வளவு காலமாக பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில் மூடத் தனமான அம்சங்கள் உள்ளனவா? அப்படியெனில் அதை கண்ணைமூடிக் கொண்டு பின்பற்ற வேண்டுமா?  ஜோதிடம், வாஸ்து ஆகியவை விஞ்ஞானமா? இல்லையா? இந்த மதத்தில் உள்ள விஷயங்கள் சரியா? தவறா? இதை பின்பற்றத்தான் வேண்டுமா? என்றெல்லாம் ஒரு சராசரியான இந்து குழப்பநிலையில் இருக்கிறான். ஏனெனில் இந்துமதத்தைப் பற்றிய விமர்சனங்கள், தாக்குதல்கள் அதிகமாக உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் சற்றும் கூடுதலாகவே நடக்கி மற்ற மதங்களைப் பற்றி நாம் அதிகளவில் வீடியோ பதிவுகளை காண முடியாது.  இதனால் இந்து மதத்தைச் சேர்ந்த சராசரியான ஒரு நபருக்குநாம்தான் ஒரு தவறான மூடநம்பிக்கை மிகுந்த காலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ? மற்றவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள் போல. பிற மதங்களில் விஞ்ஞானம் இருக்கிறது. நம் இந்து மதத்தில் விஞ்ஞானம் இல்லை.” என்றெல்லாம் எண்ணற்ற குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.  இவை போன்ற விவாதங்களுக்கெல்லாம் இப்போது பதில் தரப்போவதில்லை. மிகவும் பழமையான இந்து மதத்தில் நிறைந்திருக்கின்றஞானத்தைவேதம், உபநிஷத்துகள், பகவத்கீதை, திருக்குறள், யோக சூத்திரங்கள், பிரம்ம சூத்திரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற அனைத்திலும் எனக்குத்தெரிந்த விஷயங்கள், என் வாழ்வியல் நடைமுறையில் நான் அனுபவித்து வரும், பயன்படுத்தி வரும் விஷயங்களை தொடர்ந்து நாம் காண இருக்கிறோம். அவற்றில் இருக்கிற பகுத்தறிவுக்கூறுகள் (Rational Components) பற்றி கூறவிழைகிறேன். இன்றைக்கு நிலவும் அனுமானத்தில் சிலவற்றிற்கு நாம் பதில் சொல்ல இயலாமல் இருக்கலாம். ஏற்கனவே நான் கூறியதுபோல்நம் இந்துமதம் என்றால் அதன் சிறப்புகள் எவை?” என்று புரிந்து கொள்ளமுடியாமல் குழம்பி நிற்கும் ஒரு சராசரி இந்துவிற்கு அவ்வப்போது தெளிவுபடுத்த வேண்டியது என் கடமையாகும்.

மதம்” (Religion) என்பதே இல்லாமல் வாழமுடியுமா? என்றால்முடியும்.” ஆனால், அது அவரவரின் தனிப்பட்ட விஷயமாகும். “நான் அதைப் பின்பற்றுகிறேன். ஆனால், சற்று குழப்பமாக உள்ளதுஎன்றால், ஓரு சுவாமிஜியாக இல்லாமல், குருஜியாக இல்லாமல், நகர்புறத்தில் வாழும் ஒரு பொதுமனிதனாக, நண்பனாக இந்த மதத்தை நான் எப்படி பார்க்கிறேன்? அதில் என்னென்ன செய்யலாம்? இது சம்பந்தமாக என்னுடைய அனுபவம் என்னென்ன? என்பன போன்றவற்றை பகிர்ந்து கொள்வதுதான் ‘Transform”என்கிற மூன்றாவது அம்சம். எனது EETY Foundation வழியாக கல்வி, வேலைவாய்ப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை Online, Offline ஆகிய இரண்டின் மூலமாகவும் தந்து வருகிறோம். மூன்றாவதாக Transformation என்பதற்கு தற்போது வீடியோக்கள் வழுயாக கருத்துகளை பகிர்ந்துவருகிறோம். இன்னும் இதற்கென ஒரு அமைப்பு அமைக்கப்படவில்லை. இந்த வீடியோக்களின் கருவாக, SLG (எஸ்.எல்.ஜி) என வைத்திருக்கிறோம். Science (அறிவியல்), Logic (தர்க்கம்), Guts (வீரம், மனவலிமை) என்பதே SLG -இன் விரிவாக்கம் ஆகும். அனைத்து விஷயங்களையுமே  SLG வழியாக அணுக முயற்சிக்கிறோம். Science என்பதன் வழியாக பார்க்கிறோம். ஆனால், எல்லாவற்றையுமே அறிவியல் மூலமாக பார்க்கும் வாய்ப்பில்லை. ஏன் பார்க்கவில்லை என்றால், மொஸைக் (Mosaic) பதிக்கப்பட்ட குளியலறையில் தண்ணீர் ஒரே பாதையில் ஓடாது. ஆறுபோல தனித்தனியாக பிரிந்துபோகும். அங்கங்கே ஒரு தீவுபோல் தனித்தனியாக நிற்கும். ஏனென்றால், அங்கே ஒரு அறிவியல் இருக்கிறது. அங்கேயும் மேடு, பள்ளம் இருக்கின்றன. அதை கண்களால் காண இயலாது. அதற்காக அதிலுள்ள அறிவியலை ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றால்முடியாதுஎன்பதே பதில். நம் நேரம்தான் விரையமாகும். அறிவியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால், அவற்றைக் காண முடியாது. கருவிகளால் அளவீடு செய்யமுடியவில்லை. உதாரணத்திற்கு, மிகவும் பிரபலமான, இந்தியாவிலேயே நெ.1 இடத்தில் உள்ள ஒரு இதய நோய் நிபுணர், ICU ( Intensive Care Unit) –விற்கு அருகில் உள்ள  அவருடைய அறையில் அவருக்கு மாரடைப்பு வருகிறது. ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை! ஒரு இதயநோய் நிபுணரால் இதை ஏன் முன்கூட்டியே கணிக்க (Predict) முடியவில்லை? முடியாதா? என்றால் முடியும். ஏன் முடியாது என்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன கருவிகளால் கணிக்க முடியவில்லை. அவற்றிற்கு பலம் கிடையாது. பிரச்சினை வந்தபின்என்ன செய்யலாம்?” என்று கணிக்க முடியுமே தவிர, அந்த பிரச்சினை ஏன் வருகிறது? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு .ஸி.ஜி (E.C.G) பார்த்தால் முடியுமா? ஆஞ்ஜியோ பண்ணினால் முடியுமா? என்றால் எது செய்தாலும் முடியவில்லை. இருக்கு ஒரு Position.. அது accidental ஆக நடப்பதில்லை. அதை கணிக்கக்கூடிய அளவிற்கு நம்மிடம் Precision (துல்லியம்) இல்லை.  Science – இல் Limitation இருப்பதால், பல நேரங்களில் நாம் Logic –இல் போக வேண்டியுள்ளது. Logic –லும் Limitation இருப்பதால் Guts – இல் நுழைகிறோம். ஆக, என்னுடையகரு (Theeme) Science, Logic, Guts. இந்த வழிமுறையில்தான் Modern இந்துமதத்தை பார்க்கிறோம். இதன் வெளிப்பாட்டையே Modern Hinduism – ஆக பார்க்கிறோம். நான் சொல்வது இந்துமதத்தை அழுத்தமான மனப்பாங்குடன், பரபரப்புகள் இல்லாமல் எளிமையாக பின்பற்றி வருகின்றவர்களுக்கு அடிப்படையில் பல சந்தேகங்கள் வந்திருக்கக்கூடும். அத சம்பந்தமான எனக்கு நிவர்த்தி கிடைத்திருக்கும். அத்தகைய சந்தேகங்களை நான் உங்களுக்கு தெளிவுபடுத்துவது போல்தான்.  கடவுளிடம் சென்றால்தான் ஜெயிக்க முடியுமா?” என்று.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அவர்கள் தன் ஆரம்பகால வாழ்கையிலிருந்தே கடவுள், பாபா, இறை நம்பிக்கை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ஜெயித்து சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

ரஜினிக்கு நேர் எதிராக கமலஹாசன். ”கடவுள் இல்லேன்னு சொல்லல. ஆனா, அவரு இருந்தா நல்லாருக்கும்என்று சொல்பவர். சினிமாவில் அவரும்உலகநாயகனாகஜெயித்திருக்கிறார்!

கலைஞர்ஒரு நாத்திகர். அவரும் ஜெயித்திருக்கிறார்!    

இங்கே வந்து முழுக்க முழுக்க கடவுளைக் கும்பிடக்கூடிய ஸ்ரீ லங்கா அதிபராக இருக்கட்டும்..

கர்நாடகாவிலிருந்து இங்கே வந்து சாமி கும்பிடக்கூடிய முதல்வராக இருக்கட்டும்..

தெலங்கானாவிலிருந்து இங்கே வந்து சாமி கும்பிடக்கூடிய சந்திரசேகர ராவ் போன்றோராக இருக்கட்டும்..

பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள். அவரும் ஜெயிக்கிறார்.

ஜெயிப்பதற்கும், தோற்பதற்கும்ஆத்திகம், நாத்திகம்என்று நான் கூற மாட்டேன்.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிரார்களா? என்பது Internal Concept (உள்கருத்துக்கள்).

நிறைய பேருக்கு ஆத்திகம் நல்லது. அதைத் தாண்ட முடிந்தவர்களுக்கு நாத்திகம் சரி. நாத்திகத்தால் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியாது. இந்த புள்ளியில்தான் நானும் திராவிடமும் வேறுபடுகிறோம். திராவிடத்தால் (நாத்திகத்தால்) ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கருதுகிறார்கள். உதாரணத்திற்கு சேலம் முழுவதையும் நாத்திகமாக மாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும், ஒருபோதும் அவ்வாறு செய்ய இயலாது. ஏனெனில் இந்த உலகத்தில் அப்படி ஒரு சமூகமே கிடையாது. ஏனெனில் எல்லா சமூகத்திற்கும் ஒரு மதமும், அதற்கென கடவுளும் இருக்கிறார். பக்தி இருக்கிறது. பெயர் வேண்டுமானால் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால், அது இல்லாமல் இருக்க முடியாது.

தனியாகப்போகும் நாத்திகத்தை ஒரு குழுவாக மாற்ற முனையும்போது, அதனால் விளையும் பலவிதமான குதர்க்கங்கள் வரலாற்று ரீதியில் பின்னாளில் பாதிக்கும் என்பது உண்மை. தனிப்பட்ட முறையில் நாத்திகமானது, Well and Good. But, நாத்திகம் at group level cannot survive for Long time.  இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு. எங்களை போன்ற நபர்கள் I.R.S முடித்து, அறிவியலையும் இவ்வளவு தூரம் பார்த்துவிட்டு, ஏன் மதத்தை தாங்கிப்பிடிக்கிறோமென்றால் ஒரு Group Level is Good. அதில் ஒரு சமநிலை (Balanced) இருக்கிறதா? என்பதை அவரவர்களே முடிவு செய்ய வேண்டும்.

-------------------------------------------------------------

 

No comments:

Post a Comment

30. வல்லபாய் பட்டேல் Vs நேரு இருவருக்கும் மோதல் ஏன்?

                                  வல்லபாய் பட்டேல் Vs நேரு                                                    இருவருக்கும் மோதல் ஏன் ?  ...