+2-க்கு பிறகு என்ன படிக்கலாம்?
பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டுதோறும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. உச்ச மதிப்பெண், ரேங்க் எடுத்தவர்களைப்பற்றிய பட்டியல் வெளியீட்டில் சிற்சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால், மொட்டிவேஷன் தவிர்க்கப்படுகிறது. அதேவேளையில் தேர்வில் தோல்வியடந்த ஒரே காரணத்திற்காக குழந்தைகள் தற்கொலையை நாடுவது நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் என்றால், அதில் தோல்வியுற்றவர்களின் சோகம் மறுபுறம் தாக்குகிறது. இந்த சோகத்தை தவிர்ப்பதற்காக அரசாங்கம் எவ்வளவோ முயற்சி எடுத்துவருகிறபோதிலும் இதனை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. இவ்விஷயத்தில் அந்த குழந்தைகளின் குடும்பம் பெரும் பங்களிப்பு செய்கின்றன என்றே கருதுகிறேன். அவர்கள் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொள்ள அவர்களின் குடும்பத்தினரைத்தவிர வேறு யாராலும் இயலாது. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் பணி புரிபவர்கள் தங்களிடம் படிக்கும் குழந்தைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் ஆசிரியர்- மாணவ, மாணவியருக்கிடையில்
கலந்துரையாடல் செய்வதற்கு அதிக நேரம் கிடைத்தது. ஆனால், இன்றைக்கு அந்தச் சூழல் இல்லை. என்னைப்போன்றவர்கள் படித்த காலத்தில்கூட இயந்திரத்தனமான கல்விச்சூழல் இருந்ததில்லை.
குருகுலக்கல்விமுறையில் ஒரு மாணவரை 360 டிகிரியிலும் புரிந்து கொண்டிருந்தனர்.
குருவிடம் சீடன் கேள்வி கேட்பதும், அதற்கு குரு பதிலுரைக்கும் விதமும் மிகவும் சிறப்பாக நிகழ்ந்திருக்கின்றன. அத்தகைய ஆரோக்கியமான கல்விச்சூழல் இன்று இல்லை. இயந்திரத்தனமான செயல்பாடுகளால் அரசாங்கம், பள்ளி மற்றும் பிற கல்வி நிறுவனங்களால் போன்றவற்றால் முழுமையான பங்களிப்பைத்தர இயலாது. குடும்பங்கள் பெரும் பங்காற்ற முடியும். இருந்தபோதிலும் நடைபெறக்கூடிய அசம்பாவிதங்களை முழுமையாக தவிர்க்க முடியுமா? என்ரால் அதுவும் கேள்விக்குறியே. ஆனால், அந்த அசம்பாவிதங்களை தவிர்க்க குடும்பங்கள் முழுமையாக பங்காற்ற வேண்டுமென்று நான் கோரிக்கையாக வைக்கிறேன்.
மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை இன்றைய தலைமுறைபோல் கல்வி கற்றதில்லை என்றெ சொல்ல வேண்டும். மெரிட், மதிப்பெண்கள் ஆகியவற்றிற்கான போட்டிகள் இன்றைக்கு போல் முன்பு ஒருபோதும் இருந்ததில்லை.
2000 ஆமாவது ஆண்டிற்குப்பிறகு
மிகவும் நெரிசல்மிகுந்த போட்டி இருந்துவருகின்றது. 1980 –க்குப்பிறகு ஓரளவு நடுத்தரமான போட்டிகள் இருந்திருக்கின்றன. 1970-களில் ஊருக்கு ஒருசில பேர் கல்வி கற்றவர்களாக இருந்ததினால் பள்ளி, கல்லூரிகளில் சேர்வது சற்று எளிமையாகவே இருந்தது. இன்றைக்கோ தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 10 லட்சம் மாணவ, மாணவியர் தங்கள் பள்ளிக்கல்வியை முடித்து வெளியேறி வருகின்றனர். மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் சுமார் 10 ஆயிரம் மட்டுமே உள்ளன. தரமான பொறியியற் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதனால் கடுமையான போட்டி நிலவுகின்றது.
வணிகவியல், சட்டம் போன்ற பிற பாடப்பிரிவுகளுக்கும் முதல் நூறு இடங்களுக்கு பெரும் போட்டி தான். இதுபோன்ற விவரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் பெற்றோர் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, ’நீ எப்படியாவது அந்த கல்லூரியில், இன்ன படிப்பில் சேர்ந்துவிட்டால்
எதிர்காலம் நன்றாக இருக்கும். எப்படியாவது செட்டிலாகி விடலாம்’ என்றெல்லாம் தங்கள் மனச்சுமையை தங்கள் குழந்தைகள் மீது சுமத்துகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு இந்த நெருக்கடிகளும், பிரச்சினைகளும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர்களின் மனோநிலை இருக்கிறதென்றால், அவர்கள் மிகவும் பதற்றமாகி, குழப்பங்களுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.
பொதுவாக குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான படிப்பினைப் படிப்பதா? அல்லது தங்கள் பெற்றோர் சொல்லும் படிப்பினைப் படிப்பதா? என்கிற விவாதம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. குழந்தைகளுக்குப் பித்தமானகவும் அதேபடிப்பு பெற்றோர்களுக்கும்
பிடித்தமானதாக இருந்துவிட்டால்
அங்கு பிரச்சினைகள் எழ வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. ஒருவேலை இப்படி அமையாவிட்டால் அதை எப்படி சரிசெய்வது? இதில் குழந்தைகளுக்கு நான் கூறக்கூடியது என்னவென்றால், ‘இந்த படிப்பினால் நம் குழந்தைக்கான எதிர்காலத்தில் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமுதாயத்தின் பார்வையில் வாழ்வியல் முன்னேற்றம்’ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் பெற்றோர் முடிவெடுக்கிறார்கள். இதுநாள்வரை பெற்றோர் சமுதாயத்தில் இத்தனை ஆண்டுகாலம் கண்டது, கேட்டது அல்லது அவர்களின் சொந்த மற்றும் சுற்றப்புறங்களில் நிகழ்ந்தவற்றை அறிந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றாலும், தங்கள் குழந்தைகளின் திறன், இயல்பு ஆகியவற்றை ஓரளவேனும் அறிந்திருப்பதாலும்
அதை தெரிவித்து தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறார்கள். அவற்றை கேட்டுக்கொள்வதால் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? காதல் திருமனத்தைவிட பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமண ஏற்பாடு நல்லதாகவே இருக்கும் என்கிறோமே, அது ஏன்? அவர்கள் மணமகன்/மணமகள் ஆகிய இருபாலரின் இயல்புகள், படிப்பு, பழக்க,வழக்கங்கள் இருதரப்பின் குடும்ப மதிப்புகள் போன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, சுமுகமான ஒரு நிலையை ஏற்படுத்திக்கொண்டு திருமணம் செய்விக்கிறார்கள். அனால், காதல் திருமணத்தில் இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ‘எனக்கு அந்தப் பெண்ணியோ அல்லது ஆணையோ பிடித்திருக்கிறது’ என்கிற ஒற்றைக்காரணம் மட்டுமே! அப்படியானால், மேலே கூறிய அனைத்தையும் யார் பரிசீலித்து முடிவெடுப்பது? இதேபோல் வேலைவாய்ப்பு விஷயமும்! பெற்றோர் கூறும் சிற்சில விஷயங்களில் புரிதலோ அல்லது அறியாமையோ இருக்கக்கூடும்.
ஆனாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக
அதீத அக்கறை கொண்டு முயற்சியும் செய்துவருவதை நான் காண்கிறேன். பெற்றோர்கள் என்னதான் வெளியுல அனுபவங்கள் போன்றவற்றால்,
வேலை வாய்ப்புகள் சம்பந்தமான புரிதல்கள் கொண்டிருந்தபோதும், தங்கள் குழந்தைகளின் இயல்பையும், விருப்பத்தையும் சரிவர புரிந்து கொள்ளாமல், குழந்தைகளுக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர்கள் மீது திணிப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் மேலிடுகிறது. அதனால் அந்தக்குழந்தைகளிடத்தில் பொதிந்திருக்கும்
திறமை, அறிவு, இயல்பு ஆகிய எதையுமே வெளிகொண்டுவர முடியாது. பொதுவாக கோபித்து சண்டைபோடுபவனைவிட,
சிரித்துக்கொண்டே சண்டை போடுபவனுக்கு பலம் அதிகம். ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு தன்னுடைய அறிவைச் செலவிடுபவரால் நிச்சயம் சாதனை படைக்க முடியும். இவையிரண்டும் இல்லாமல் ’ஏனோதானோ’ என செயல்படுவரால் எதையுமே சதிக்க முடியாது. எந்த ஒரு துறையிலும் தன் திரமையால் உச்சநிலையில் இருப்பவருக்குத்தான் அதிகப்படியான பொருளாதார பலம் கிடைக்கும். சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்தாலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தால் பெரிதாக என்ன சம்பளம் வந்துவிடப் போகிறது? இன்னும் சொல்லப் போனால் அந்த சாஃப்ட்வேர் இன்ஜிமியரைவிட மெக்கானிக்கல் இன்ஜினியராக இருப்பவர் அதிக சம்பளம் பெற்றுக்கொண்டிருப்பார். ஆக, எல்லா இடத்தில் போட்டி இருக்கத்தான் செய்கிறது. அவரவர் குழந்தைகள் நீண்ட காலத்திற்கு ஒரு துறையில் நிலைத்து நிற்க வேண்டும். அதற்கேற்றாற்போன்ற துறையை அதுவும் குழந்தைகளின் இயல்புகளுக்கு ஏற்றவாறு இருக்குமா? என்பதையிம் பரிசீலிக்க வேண்டும். கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே சைகோமேட்ரிக் மிகச்சிறந்த Eye Opener தான். தன் குழந்தி எது பிடிக்கும்? பிடிக்காது? என்பதைப் பற்றிய உங்கள் அனுமானத்தை அதன் மூலம் ச செய்ய முடியும். ஆண்குழந்தையோ அல்லது பெண்குழந்தையோ சிலர் உள்முகச் சிந்தனையாளராக (Introvert) இருப்பார்கள்.
வேறு சிலர் வெளிமுகச் (Extrovert) இருப்பார்கள்.
உள்முகச்சிந்தனையாளர் ஒருவரை மார்க்கெட்டிங் துறையில் பணியமர்த்தினால் அடுத்த மூன்றுமாத காலத்தில் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவார். அதேநேரம் வெளிமுகச்சிந்தனையாளரை அதே மார்க்கெட்டிங் துறையில் பணியமர்த்தினால், அடுத்தடுத்து சாதித்தவண்ணம் மேலேறிப் போய்க்கொண்டே இருப்பார். அதேபோல் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர்கள் பெரும்பாலும் உள்முகச்சிந்தனையாளராகவே இருப்பர். அவர்கலால் ஒரே இட்த்தில் அதிக நேரம் செலவிட்டு பணியாற்ற முடியும். மிகவும் கலகலப்பாக இருக்கக்கூடிய, சுறுசுறுப்பாக வெளியிடங்களில் சுற்றிச்சுற்றி வருபவரை ஒரே இட்த்தில் அமரவைத்து பணிபுரிய வைத்தால் அவர் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? இதுதான் மேஜை வேலை மற்றும் களப்பணிக்கும் உள்ள வேறுபாடாகும்.
ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டால் சிற்சில விமர்சன்ங்கள், கேலி கிண்டல்கள், வதந்திகள், மீம்ஸ்கள் போன்றவற்றிற்கெல்லாம் சட்டென பயந்துவிடக்கூடியவராக இருந்தால், ஃபேஷன் டிஸைன் மற்றும் மீடியா போன்ற துறைகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. காரணம், அங்குள்ள மார்க்கெட்டிங் சூழலின் நெருக்கடி அப்படித்தான். சற்று வெப்பச்சூழலை விரும்பக்கூடிய ஒருவரை மிகவும் குளிரான சூழலில் இருக்கவைத்தால் என்னவாகும்? அரசுத்துறைகளில் அதிக வெப்பம், தண்ணீர் கிடைக்காத அளவிற்கு வறட்சி, போக்குவரத்து வசதிக்குறைவு, போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவது ’தண்டனைக்குரிய பணியிடம்’ என்பர். போலீஸ் துறை, வருமான வரி இலாகா போன்றவற்றில் சில தண்டனை பணியிடங்கள் என்பவை உண்டு! அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிரான மலைப்பிரதேசங்களில் பணியமர்த்தப்படுவதுண்டு. இதெல்லாம் ஒரு தண்டனையா? என்றால், சமவெளிகளில் பிறந்து வாழ்ந்து பழகியவர்களுக்கு, தொடர்ந்து குளிரான பிரதேசங்களில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று என்பதை அனுபவப்பட்டவர்கள்
நிச்சயம் புரிந்து கொள்வர். சில துறைகளில் அல்லது பணிகளில் சம்பளம் அதிகமாக இருக்கலாம். ஆனால், சமுதாயத்தில் மதிப்பு மரியாதை மிகவும் குறைவாகவே இருக்கும். ஒரு ஸ்டார் ஹோட்டலில் சர்வராக பண்புரிபவருக்கு ஒரு இன்ஜினியருக்கு கிடைக்கும் சம்பளத்தை விட கூடுதலாக கிடைக்கிறது. ஆனாலும், அவர் தன்னை ‘சர்வர்’ என்று சொல்லிக்கொள்வதில்
ஒரு பெரிய பெருமை இருப்பதில்லை.
ஆக பணம் முக்கியமா? அந்தஸ்து முக்கியமா? என்பது தீர்மானிப்பதில் சிரமமும் உள்ளது.
அடுத்ததாக ‘திருமணம்’. ஒருவரின் செய்யும் ’வேலைக்கும்’ திருமணத்திற்கும் மிகநெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. பெண்களாக இருந்தால் வாழ்வில் விரைவாக செட்டிலாக வேண்டுமென எண்ணுவார்கள். அதற்கேற்ப தங்கள் படிப்பினைத் தேர்வு செய்ய வேண்டும். மருத்துவத்துறை மிக நல்ல துறைதான் என்றாலும் இளநிலை, 2 முதுநிலை ஆகிய படிப்புகலைப் படித்து முடித்து அவர்கள் செட்டிலாவதற்கு
27 வயதாகிவிடும். ஆகவே, நிறைய பெண்கள் இன்றைக்கு அதனைத் தவிர்க்கிறார்கள். இதில் செலவு ஒருபுறம், செட்டில்மெண்ட் மறுபுறம் என காரணிகள் கூடுகின்றன. ஒரு சிலர் தானே தனியாக ஒரு வேலையை நல்ல முறையில் செய்துவிடுவார்.
ஆனால், பிறரை தன் கீழ் பணியமர்த்தி மேற்பார்வை செய்யும் திறன் இருக்காது. திரைப்படத்துறையில்
ஒரு இசையமைப்பாளர் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திவிட்டுப்போய்விடுவார். ஆனால், பட்த்தின் இயக்குனர் தன்னுடன் பணிபுரியும் ஹீரோ முதல் லைட்பாய் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து தன் ரசனைக்கேற்றார்போல்
வேலை வாங்க வேண்டும். ’நான் மட்டும் சிறப்பாக வேலை செய்வேன்’ என்பவர் சூப்பர்வைசர் வேலைக்கு சரிப்பட மாட்டார். இது போன்ற அம்சங்களையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கருத்தையும் முடிவையும் கண்டிப்பாக கேட்டுத்தெரிந்து
கொள்ள வேண்டும். அதில் விவரமான அலசல்கள் நிச்சயம் இருக்கும். அது உங்களுக்கு சில பிரிதல்களை அளிக்கும். இதேபோல் நான் மேலே கூறியவற்றைக் கொண்டு உங்கள் குழந்தைக்கு எது ஏதுவாக இருக்கும் என்பதை நன்குணர்ந்து அதற்கேற்றார் போல் படிப்பு, கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment