Friday, June 12, 2026

12. WHAT IS CADRE MARRIAGE | A Officers Love Story

                12.WHAT IS CADRE MARRIAGE | A Officers Love Story

CADRE MARRIAGE (கேடர் திருமணம்) என்கிற பிரபலமான ஒரு கருத்தியல் உயர் அதிகாரிகள் மத்தியில் உண்டு. சிவில் சர்வீற் (UPSC)தேர்வில் வெற்றி பெற்று ..எஸ், .பி.எஸ், .ஆர்.எஸ். அதிகாரிகள் இதேபோல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனிலும் எப்போதாவது உண்டு. முக்கியமாக சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மத்தியில் இந்த CADRE MARRIAGE கருத்தியல் நடைமுறையில் உண்டு. தேர்வில் வெற்றிபெற்ற ஒரு I.A.S., I.P.S, I.R.S, I.F.S அதிகாரிகள் தங்கள் வட்டத்திற்குள் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால், அதுவே CADRE MARRIAGE. முன்பெல்லாம் Cadre allotment (கேடர் நியமனம்) மிகவும் இறுக்கமாக இருந்தன. இப்போது வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன. பொதுவாக பணி உறுதிசெய்யப்பட்ட்துமே ஒரு Cadre வந்துரும். உதாரணமாக ஒருவருக்கு உத்திரபிரதேசம் Cadre வந்திருக்கும். இன்னொருவருக்கு குஜராத் Cadre வந்திருக்கும். அவர்கள் இரண்டுபேரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் இரண்டு மாநிலங்களில் இருக்க முடியாது. ஏதோ ஒரு மாநிலத்துக்கு மாறுவார்கள். இதுபோன்று Cadre Cross என்கிற நிலைவந்தால் இதுதான் Cadre marriage. முன்பு ஒருமுறை ஆணவக்கொலை சம்பந்தமாக பேசும்போது, “காதல் பலமுறை வரும். மனசில ஒரு பார்ட்னர் இல்லேன்னா காதல் வரலாம். காதல் தெய்வீகமானதில்லை. ஆனால், காதல் என்கிற உணர்வு தெய்வீகமானது. அதில் உள்ள தூய்மைக்காக அதை நாம் தெய்வீகத்திற்குள் கொண்டு போகிறோம்என விளக்கம் கொடுத்திருந்தேன். (”அப்படியெல்லாம் இல்லையென்று நிறைய நண்பர்கள் கருத்துகளைக் கூறினர். அவற்றில் சில நண்பர்கள் அப்படியெல்லாம் இல்லையென்றும், நிறைய நண்பர்கள்ஆம்என ஒத்துக்கொண்டனர்)

ஒரு சிறிய கதை சொல்கிறேன். கதைப்படி ஹீரோ டெல்லியிலேருந்து மஸோரியில (mussoorie) இருக்கும் lbsnaa I.A.S Academy க்கு ரயிலில் போகிறார். அந்த பயணத்தின்போது தான் பயணிக்கும் அதே  ரயில்பெட்டியில் ஒரு பெண்ணை பாக்கிறார். பயிற்சிக்கு செல்பவர்களுக்கு Training, corid ன்னா தெரியும். அதாவது தேர்வில் வெற்றிபெற்ற அதிகாரிகள்தான் வருவார்களென்று. அந்த பெண்ணைப்பார்த்தவுடனே காதல் வந்துவிட்டது. அந்த பெண்ணிற்கும் ஹீரோவைப் பிடித்துவிட்டது. அந்த இருவரில் ஆண் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்றும், பெண் ஒடிஸாவைச் சேர்ந்தவர் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். இருவருமே பயிற்சி அதிகாரிகள் என்கிற வகையில் அவர்கள் சந்தித்துக்கொண்ட உடனே அவர்களுக்குள் ஒரு புரிதல் மற்றும் பிடித்தம் உண்டாகிறது. அந்த புரிதல் உணர்வினால் ஒருவித நம்பிக்கை வருகிறது. உடனே, “என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்று ஒரு பாட்டு. சென்று சேர வேண்டிய நிலையம் வந்தவுடன் புன்னகைப் பரிமாற்றத்துடன் அவரவர் தங்குமிடத்திற்கு சென்று விடுகிறார்கள். அந்த அகாடமிக்கு சென்றதும்தான் அவர்கள் பேசிக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும். யாரும் போனவுடனேஹாய்சொல்லிக் கொள்ளப் போவதில்லை. முதல்நாளில் அகாடமியில் தங்கள் குழு சார்ந்தவர்களின் சந்திப்பு நிகழும். அங்கே அவரவர் பெயர் தெரியும். “ஹாய்சொல்வதற்கும், சகஜமாக பேசிக்கொள்வதற்கும் நேரம் கிடைக்கும். ஹீரோ- ஹீரோயின் இருவருக்குமிடையே ரயில்சிநேகம் இருந்ததால் அவர்களுக்கிடையே பிரியம் இருக்கும். அதை காதலர்களின் முதல் அதிர்வு என்று கொள்ளலாம். (Lovers First shake) அவர்களின் உரையாடலின்போது, ஹீரோநான் ..எஸ். மகாராஷ்டிரா கேடர்என்கிறார். ஹீரோயின்நான் .பி.எஸ். ஒடிஸா கேடர்என்று சொல்கிறார். காதலர்கள் முதல்பார்வையிலேயே இலகுவாக இருக்கலாம். அவர்கள் திருமணம் செய்துகொண்டால் ஏதாவது ஒரு கேடருக்குத்தான் போகமுடியும். அந்த ஹீரோவிற்கு மகாராஷ்டிரா Home Cadre. அந்த ஹீரோயினுக்கு ஒடிஸா Home Cadre. தங்கள் காதலுக்காக Home Cadre – தியாகம் செய்வார்களா? என்பதே முதல் கேள்வி. ஆக, ஹீரோயின் ஒடிஸாவை விட்டு மகாராஷ்டிராவிற்குச் செல்லவேண்டும். இல்லையென்றால், ஹீரோ மகாராஷ்டிராவை விட்டுவிட்டு ஒடிஸாவிற்குச் செல்ல வேண்டும். நான் பார்த்தவரையில், அந்த நிமிடமே அவர்கள் இருவருமே நண்பர்களாக மாறிவிடுவார்கள். ஏன் அப்படி? முப்பது வருஷம் அவர்களின் சொந்த மாநிலம் என்பது அவர்களுக்கு ஒரு முக்கிய பகுதியாகத்தான் இருக்கும். இரண்டு பேருக்கும் பிடித்திருப்பதாலேயே இவ்வளவு பெரிய தியாகத்தைப் தியாகத்தைச் செய்ய முடியுமா? இதுதான் நான் கூறிய சமூக கருத்தியல் (Social Context). இதனால்தான்ஆணவக்கொலைசம்பந்தமாக Social Context –ஐ கவனியுங்கள் என்கிறேன்.இந்த காதல் ஒத்துவருமா? மேலும் தொடரலாமா? அல்லது நட்புடன் மட்டும் நிறுத்திக்கொள்வோமா?” என்று பரிசீலிக்க வேண்டும். 1950 இல் இருந்து நம்மிடம் இருக்கும் புள்ளிவிவரங்களைப்பார்த்தால் 90% அவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். பயிற்சியின் போது அவர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்கு போன்றவற்றின்போது அவர்களுக்கிடையில் அற்புதமான புரிதல் மேம்படும். ஹீரோவிற்கு ஒடிஸா கேடர்ல ஒரு நண்பன் இருப்பான். அதேபோல அந்த பொண்ணுக்கும் மகாராஷ்டிரா கேடர்ல .பி.எஸ், .எஃப்.எஸ், .பி.எஸ் .ஆர்.எஸ் நண்பர்கள் இருக்கலாம். அப்போது இவர்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். “அந்த குடும்பம் உங்களுக்கு சரியாக இருக்குமேஎன்று. அதே மாநில கேடர் உள்ளவர்களை திருமணம் செய்துகொள்வதால் ஒரு பயன். அவர்கள் தங்களுக்குள் பிடித்தம் இல்லாமலா திருமணம் செய்யப்போகிறார்கள்? அதுவும் காதல் திருமணமே. ”என்ன சார் நீங்க சொல்வதைப்பார்த்தால்.. அங்கே போனால் திருமனம் செய்துகொள்வதுதன் ஒரே வேலையா? என்றால்..உண்மையில் பெண்களுக்கு அதுபோன்ற ஒரு விஷயம் இருக்கிறது. இந்த சிவில் சர்வீஸ் துறைக்கு வருபவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றூம் உயர் நடுத்தர வகையினர்தான்.  அபூர்வமாகத்தான் பெரிய பணக்காரர்கள் வருவர். குடும்ப ரீதியாக அல்லாமல் பொருளாதார ரீதியாக நடுத்தர வகுப்பிற்கும் கீழேயிருந்து வருபவர்களும் மிகமிகக் குறைவு. ஒருவன் சிவில் சர்வீஸ் பணிக்காக தேர்ச்சி பெற்றுவிட்டால், பெரும் எதிர்பார்ப்புடன் அவனுடைய மதிப்பானது சமுதாயத்தில் கூடிவிடும். ஏகப்பட்ட பணம், அது, இதுன்னு எல்லாம் வந்துரும். பெண்களுக்கும் சரிநிகர் சமமாக ஒரு மாப்பிள்ளை கிடைப்பது மிகவும் கஷ்டம். ஒரு ..எஸ் பெண்ணிற்கு என்ன மாதிரியான மாப்பிள்ளை எளிதாக கிடைத்துவிடும்? வேறு வகையான மாப்பிள்ளை அமைந்தால், அவர்களுக்குள் ஈகோ மோதல் வந்துவிடும். பெண் அதிகாரிகள் தங்களுக்கு சமமாக ..எஸ் வட்டத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று பார்ப்பார்கள். அவர்களுக்கான முடிவினை அவர்கள்தான் எடுப்பார்கள். அவர்களின் அம்மா, அப்பாவிற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்காது. அவர்களுக்கு மகளின் புதிய உலகமே தெரியாது. சிவில் சர்வீஸ் பணி கிடைத்துவிட்டது. அடுத்து புதிய வாழ்வைத் தொடங்கப்போகிறார்கள். அதன்பின் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவர்களே மிகவும் போராடி தேர்வெழுதி வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த பெண்களுக்குஇது நம் வாழ்க்கைக்கு சரியாக வரும்என்கிற அறிவு முதிர்ச்சி இருக்கும். இங்கேதான் நான் சொன்ன ஹீரோவும், ஹீரோயினும் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அகாடமியில் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால்கூட அந்த காதல் சரியான காதல்தான். அவர்களுக்கு முதன்முதலில் வந்த காதல் உண்மையான காதல். இரண்டாவதாக வந்த காதல் உண்மையானதில்லை என்பதல்ல. இரண்டாவதாக வந்த காதல் சமூக கருத்தியலுடன் ஏற்பட்ட அனுபவப்பட்ட காதல். ஒருவருக்கொருவர் பிடிக்காமல் நீண்ட காலத்திற்கு ஒன்றாக வாழ்க்கையை நடத்த முடியாது. அதுவும் இருபது, முப்பது ஆண்டுகளெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. ஒரு ஆறுமாதம், ஒருவருடம் இருக்கலாமே தவிர, அதற்கு மேல் மனிதனால் நடிக்க முடியாது. இன்றைக்கும் முப்பது வருடங்களாக குடும்பம் நடத்தும் வெற்றிகரமான தம்பதிகளைப் பார்க்கிறோம். இதுதான் நான் சொல்லும் Cadre marriage. சமூக கருத்தியலை கவனத்தில் கொண்டு சரியான புரிதலுடன் காதலிக்கும்போது, அதுவும் காதல் திருமணம் தான். பிடிக்காமல் வெறுமனே ஒரு Cadre க்காக எவரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்குள் நிச்சயமாக பிடித்திருக்கும். அதுவும் 90% வெற்றிக்கதையாக இருக்கும். பெற்றோர் பார்த்து முடிவுசெய்யும் திருமணங்கள் கூட இந்தளவிற்கு வெற்றிகரமாக ஆவதில்லை. இதைத்தான் புரிதல் மிகுந்த காதல்கூறுகிறோம். அதை நோக்கித்தான் நம்ம சமுதாயம் நகரவேண்டும் என்பதுதான் என் ஆர்வமும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.

No comments:

Post a Comment

15.கலாச்சாரம் என்றால் என்ன?

  கலாச்சாரம் என்றால் என்ன ? கலாச்சாரம் என்றால் என்ன ? அதை எப்படி வகைப்படுத்திப்பார்ப்பது ? என்றெல்லாம் மக்கள் கேட்கிறார்கள் . ஒரு ...