Wednesday, June 17, 2026

24.நாடார் வியாபார வரலாறு & வளர்ச்சி | Part 2

 

நாடார் வியாபார வரலாறு & வளர்ச்சி | Part 2 


                1800 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே நாடார் சமுதாயமானது சமூக விழிப்புணர்வு கொண்டிருந்த சமுதாயமாக நான் கருதுகிறேன். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கும் முன்பே சாத்தூர், கமுதி போன்ற தென் தமிழகத்தைச் சேர்ந்த ஊர்களில் ஆலய நுழைவுப்போராட்டங்களையும், சமுதாயம் சார்ந்த மேம்பாட்டிற்கான விஷயங்கள் பலவற்றையும் நாடார்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆறு பிரிவுகளைக்கொண்டிருந்த அந்த சமுதாயமானதுநாடார்என்கிற ஒற்றைப் பொதுப்பெயருடன் 1890 களிலேயே இயங்கத்தொடங்கியதை வரலாற்றுக்குறிப்புகள் மூலம் அறிய வருகிறோம். ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், ஒரு தனிமனித வளர்ச்சியைவிட, ஒரு குடும்பத்தின் வளர்ச்சியைவிட, விழிப்புணர்வுடன் கூடிய ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி மிக முக்கியமானதாகும். வியாபார ரீதியிலான விதிமுறைகளுக்குட்பட்டு, அரசியலமைப்பிற்குட் பட்டு தனிமனித, சமுதாயங்கள் எல்லாமே போட்டியிடத்தான் செய்யும். இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதை யாரெல்லாம் செய்கிறார்களோ.. வெற்றி பெறுகிறார்களோ.. அவர்களுக்கான உதாரணம்தான்நாடார்கள்’. 1900 – த்திற்கு முன்புவரைபனை மரம், குறுகிய அளவிலான விவசாய நிலங்கள்என திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர் போன்ற ஊர்களில் வாழ்ந்தனர். நகர்புற விரிவாக்கம், குடியேற்றம் ஏற்படத்தொடங்கியபோது, சென்னையிலும் கால்பதிக்கத் தொடங்கினர்.  தங்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னையில் நாடார்கள் கடைகள் வைத்து வியாபராம் செய்யத்தொடங்கினர். நாடார்களின் கடைஅண்ணாச்சிக் கடை’, ‘நாட்டார் கடைஎன்று மக்களால் வழங்கப்பட்டன. சென்னை பெருமாநகரை இன்றைய சென்னையை, 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருந்த அந்த காலத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள்! திருவான்மியூர், அண்ணாநகர் போன்ற பகுதிகள் எல்லாம் புறநகர்களாக விளங்கின. கோடம்பாக்கம்அண்ணாநகருக்கு இடையில்சீமைக்கருவேலம்இருந்ததாகக் கூறுவர். அப்படிப்பட்ட இடத்தில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மளிகை வியாபாரத்தை செய்வதற்காக கடையை நிறுவுவார். புறநகர் வளரத்தொடங்கும்போது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அவரே மளிகைப்பொருட்களை வியாபாரம் செய்வார். அந்த சமயத்தில், புதிதாக குடியேறுபவர்களுக்கு பொருளாதாரப்பிரச்சினைகள் இருக்கக்கூடும். அத்தகைய சமயத்தில், குஜராத்தி வணிகர்கள் விவசாயத்திற்காக ஆதரவளித்து காத்தனரோ.. அதேபோல் நாடார்களும் செய்து மக்களுக்கு வியாபாரத்தில் கடனுதவி தந்து ஆதரவளித்தனர். அவ்வாறு செய்யும் நாடார்களுக்கு ஸ்ரீ வில்லிப்புத்தூர், ராஜபாளையம், விருதுநகர் போன்ற ஊர்களில் வசித்து வந்த நாடார்கள் உணவுப்பொருட்களை நம்பிக்கையின் பேரில் கடனாக தந்து, மெல்ல, மெல்ல வசூல் செய்துகொண்டனர். இதனால்நம் தேவைக்கு நாட்டார்களிடம் வாங்கிகொள்ளலாம். பின் கடனை அடைத்துக்கொள்ளலாம்என்கிற மனோபாவம் மக்களிடையே நிலவத்தொடங்கியதால், நாட்டார் கடைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், அபிமானமும் ஏற்பட்டது. இதை தாங்கிக்கொள்ளும்வியாபார பிணைப்புச் சங்கிலிநாடார்களிடத்தில் இருந்தது. ஆக, கோடம்பாக்கம்- அண்ணாநகருக்கு இடையில் வியாபாரம் செய்த நாடாருக்கு வேண்டப்பட்டவரே அடுத்து வளர்ந்து கொண்டிருந்த அண்ணாநகர், பின் அவருக்கு வேண்டப்பட்டவர் அம்பத்தூர், அதேபோல் ஆவடி, திருமழிசை பல இடங்களிலும் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கி, தங்கள் வட்ட்த்தி விரிவுபடுத்துவர்.  அவர்கள் வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து கொண்டேபோகும். முதலீடே இல்லாமல் ஒரு நாடார் தன் கடையை எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்க முடியும்.  நடிகர் மம்மூட்டி, தேவயானி, முரளி, ரம்பா போன்றோர் நடித்தஆனந்தம்திரைப்படத்தில், நடிகர் முரளி காலையில் தொடங்கி பின்னிரவு வரை ஒரு மஞ்சள் பனியனை அணிந்தபடி வியாபாரம் செய்வாரோ.. அதேபோல், அவர்கள் தங்களின் கடும் உழைப்பை மேற்கொள்வர். இடையில் மதியவேளையில் அவர் உணவருந்தி, இளைப்பாறும் இரண்டு மணிநேரத்திற்கு, அவருடைய இடத்தில் நின்று வியாபரத்தைக் கவனிக்க, அவருடைய மனைவி வந்துவிடுவார். பிறகு இரவு 11 மணி அளவில், கடையை பூட்டிவிட்டு, வாசலில் திருஷ்டி கழிக்க சூடம் ஏற்றி வழிபட்டுவிட்டு புறப்பட்டு விடுவார். வியாபாரத்திற்கான பொருட்கள் முதலீடு இல்லாமல் வந்தபோதும், அதை கட்டிக்காத்து, முறைப்படி வியாபாரம் செய்வர். இவர்கள் வியாபாரத்தைக் கற்றுக்கொண்டது சுமார் 100 வருட காலத்திற்குள்தான்! ஆனால், 2000 ஆண்டுகளாக குஜராத்திகள் வர்த்தகத்தினை நிர்வகித்த முறையை, பெற்ற பலனை, நாடார்கள்  இந்த 100 வருடங்களுக்குள் பெற்றுவிட்டனர் என்றே கூறலாம். இது நாடார்கள் வியாபார ரீதியில் பெற்ற வெற்றி என்றே கூறலாம்.

--------------------------------------------------------------------------     

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

25.பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா?

  " பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா ?