Wednesday, June 17, 2026

23.குஜராத்திகளின் வியாபார வரலாறு

 

குஜராத்திகளின் வியாபார வரலாறு


History of the Gujarat Business Community


            நெடுங்காலத்திற்கும் முன்னர் இவ்வுலகில் நடைபெற்ற மனித குடியேற்றங்கள் (Migration) அனைத்துமே குழுவாகத்தான் (Group) நிகழ்ந்திருக்கின்றன. அனைத்து செயலாக்கங்களும் குழுவாக இயங்கிய ஒரு சமூகங்களால்தான் அலங்கரிக்கப்பட்டன. இன்றைக்கு ஒரே தெருவில் பலரும் பல வேலைகளைப் செய்துவருகின்றனர் . ஒரு காலத்தில் ஒரு குழுவாக இயங்கியவர்கள் அனைவரும் ஒரே வேலையை மட்டும் செய்தனர். இல்லையென்றால் எல்லோருமே எல்லா வேலைகளையுமே செய்தனர். இவ்வகையில்தான் சமூகங்களின் பரிணாம வளர்ச்சி நடைபெற்றன. இதற்கு இரண்டு உதாரணங்களை மேற்கோளாக எடுத்துக்கொள்ளலாம். குஜராத்திமக்கள் எப்படி வணிகர்கள் ஆனார்கள்? தமிழகத்தில் நாடார்கள் அதிக அளவிலான எண்ணிக்கையில் வணிகர்களாக இருக்கின்றனர்? இதேபோல் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகமானதுதிரைக்கடலோடியும் திரவியம் தேடுஎன்பதை மெய்ப்பிக்கும் வகையில் கடல் கடந்து சென்று வர்த்தகம் செய்து பொருளீட்டினர். இவற்றில் ஒரு சமுதாயம் ஒரே வேலையை அதிகமான எண்ணிக்கையில் செய்கின்றனர். எல்லா சமூகங்களுக்கும் பொதுவான ஒரு வேலை என்றால்விவசாயம்’. உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் போன்ற சமுதாயத்தினர் பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாக செய்து வந்தனர். உலகம் முழுவதிலுமே பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தினர் விவசாயத்தையே செய்து வந்திருந்தனர். யாதவர் என்று அழைக்கப்படும்கோனார்சமுதாயத்தினர் சுமார் 5000 எண்ணிக்கையிலான மாடுகளை ஊர்விட்டு ஊராக வழி நடத்தியபடி சென்று கொண்டேயிருப்பர்.  உதாரணமாக மதுரையிலிருந்து புறப்பட்டு இராமநாதபுரம் வரை செல்வர். பின் மீண்டும் மதுரைக்குத் திரும்புவர். இதுபோன்று அந்த சமூகத்தில் பெரும்பான்மையாக அந்த பணியை மட்டுமே செய்து வருவர்.

சரி. குஜராத்திகள் ஆகச்சிறந்த வர்த்தகர்களாக உருவெடுத்தது எப்படி? என்று கேட்டால், இதற்காக விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளையும், தொல்லியல் ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியாது. பொதுவான லாஜிக் எப்படி இருக்கிறதென்றால், கிறிஸ்து பிறப்பிற்கு சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்தியாவில் சமண மதம் பரவத் தொடங்கியதுமே, மிக வலுவாக காலூன்றியது தற்போதைய குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில்தான். ”வன்முறையே கூடாதுஎன்பதுதான் சமணத்தின் தலையாய கோட்பாடு ஆகும். இப்போதும்கூட நாம் சாலையில் செல்லும்போது சமணத்துறவிகள் அவர்கள் வெண்மையான ஆடை அணிந்துகொண்டு, தங்கள் வாயில்மாஸ்க்போன்று வாயையும், மூக்கையும் துணியால் கட்டி மறைத்தவண்ணம் சென்றுகொண்டிருப்பதைக் காணலாம். இவர்கள் பெரும்பாலும் நடந்தே பயணிப்பர். அவர்கள் ஏன் தங்கள் வாயில் துணியைக்கட்டிக் கொள்கிறார்கள் என்றால், ’ஒருவேளை திறந்த நிலையில் வாய் இருந்தால், எதேச்சையாக ஏதோ ஒரு பூச்சி வாயினுள் நுழைந்துவிட்டால் அது இறந்துவிடுமேஎன்பதற்காகத்தான் என்று கூறுவர். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவர்கள் மதம் சொல்லும் கோட்பாடு இதைத்தான். பொதுவாக இந்துமதத்தினைச் சேர்ந்த மடாதிபதிகள் பருவமழைக்காலமான (சதுர்மாஸ்ய) ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 4 மாதகாலத்திற்கு வெளியில் நடக்கமாட்டார்கள். அந்த பருவம் தொடங்கும்போது எந்த இட்த்தில் முகாமிட்டிருக்கிறார்களோ அதே இடத்தில் தங்கி விடுவர். நான்காம் மாத முடிவில்தான் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்குவர். இது பெரும் மழை, வெள்ள அபாயம் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான காரணமாக இருக்கலாம்.  இதற்கும் ஒரு படி மேலேசென்று, தாங்கள் யாத்திரையைத் தவிர்ப்பதற்கான காரணமாகஜெயினர்கள்  கூறுவது என்னவெனில்,   அந்த பருவக்காலத்தில் பூச்சிகள், புழுக்கள் அதிகமாக வெள்யில் நடமாடிக்கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். ஆகையால் நடை யாத்திரையைத் தவிர்க்கிறோம்என்கிறார்கள். அந்த அளவிற்கு வன்முறையற்ற (Non-violence) அணுகுமுறை அவர்களிடம் இருந்ததனால் விவசாயத்தொழிலில் கால்பதிக்கவில்லை. ஏனெனில் விவசாயம் செய்ய நிலத்தை பண்படுத்தும்போது உழவு செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு செய்யும்போது, ’நிலத்தினுள் வாழும் மண்புழு இனம் மற்றும் இன்னபிற புழு பூச்சிகள் போன்றவை இறந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட விவசாயத்தொழிலை செய்ய வேண்டாம்என்று அவர்கள் ஒரு முக்கியமான முடிவெடுத்திருக்கிறார்கள். விவசாயம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தபின் அவர்களுக்கு இருந்த ஒரே பிரதானமான வாய்ப்பு என்றால், அது வர்த்தகம் செய்வது மட்டும்தான். அன்றைய காலத்தில் வர்த்தகம் என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லை. சந்தை பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால், ஒரு காலத்தில் GDP யில் விவசாயமும், தொழிற்துறையும் 80% ஆக்கிரமித்திருந்தன. ஆனால், இன்று அது 50%க்கும் கீழே போய்விட்டன. முந்தைய காலகட்டத்தில் 10% என்கிற அளவிலே இருந்த வர்த்தகத்துறையானது 50% க்கும் மேலேறிவிட்டது. இன்றைக்கு பெருகிய அளவில் தோற்றமளிக்கும் வர்த்தகத்துறையானது, அன்றைக்கு குறுகிய அளவிலேயே இருந்தது. ஆகவே, குஜராத்திகள் தங்களின் பிரதான துறையாக வர்த்தகத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த துறையைத் தேர்ந்தெடுத்ததும் அவர்களுக்கு ஆங்காங்கு குஜராத், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்னாடகா, பல துறைமுகங்கள் என பல்வேறு ஊர்களில் மட்டுமல்லாது உலகெங்கிலும் அவர்களுக்கு பிரதிநிதிகள் தேவைப்பட்டனர். அதற்காக விவசாயத்தில் நாம் நிலங்களைப் பிரித்துத் தருவதுபோல் ஆங்காங்கு ஏரியாக்களை பிரித்துத்தருவர். பெல்ஜியம் நாட்டைப்பொறுத்தவரை வைர வியாபாரத்தில் குஜராத்திகள், மார்வாரிஸ், மேவாரிஸ் ஆகியோர் பெரும்பங்கு வகிக்கின்றனர். ராஜஸ்தானில் மார்வாரி, மேவாரிகள் ஆகிய இரு பிரிவினர் மிகவும் பிரதானமாக இருக்கின்றனர். இந்த வர்த்தகத்தொடர்பிற்காக அவர்களுடைய சொந்த சமுதாயத்தினரே எல்லா திசைகளிலும் பரவத்தொடங்கினர். இது முழுமையாக ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இன்றைக்கு காசோலை, வரைவோலை, வங்கியின் வழியே நேரடி பணபரிமாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் பணப்பரிமாற்றம் மட்டுமே நடந்தன. இதனால் சொந்த சமுதாயத்தை நம்பினர். அதனால் பணத்திற்கு பாதுகாப்பு, பொருட்களுக்கு பாதுகாப்பு கிட்டியது. இதுபோக திருமண பந்தங்கள் ஏற்படுத்திக் கொண்டதால் உறவு வட்டம் விரிவடைந்தன. இவ்வட்டத்தில் வேற்று சமுதாய நபர்களை சேர்க்கமாட்டார்கள். இன்றும் தமிழகத்தில் மதுரை, பரமக்குடி ஆகிய ஊர்களில் செளராஷ்டிரா சமூகம் பெருமளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் இன்று தமிழ்ச்சமூகத்தினரைப் போலவே மாறிவிட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றால், அங்கு தமிழ்ப்பெண்களையும், செளராஷ்டிரா சமூகப்பெண்களையும் நடை, உடை, பாவனைகளில் அவ்வளவு எளிதாக இனம் பிரித்துப்பார்க்க முடியாது. ஏன் அவர்கள் செளராஷ்டிரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்? குஜராத்தின்கட்ச்பகுதியில் அமைந்திருந்த பகுதிக்குப் பெயர்செளராஷ்டிரம்செளஎன்றால்நூறுராஷ்டிரம் என்றால்நாடு’. நூறு நாடுகளைக்கொண்ட பகுதி என்பதால் அதற்கு அவ்வாறு பெயர் ஏற்பட்டது. அந்த செளராஷ்டிரப் பகுதியிலிருந்து அவர்கள் புலம் பெயர்ந்ததால் அவர்களுக்குசெளராஷ்டிரர்கள்என்று பெயர். தாங்கள் புலம்பெயரும் இடங்களில் எல்லாம் கூட்டமைப்பு ஒன்றை, அதாவதுசமாஜ் (சமாஜம்)” கட்டமைத்து அதில் அனைவரும் உறுப்பினராவர். திருமண பந்தங்களை ஏற்படுத்துவது, தாண்டியா நடத்துவது போன்ற அனைத்தையும் அந்த சமாஜமே செய்யும். அவர்களுக்குள்ளே எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கோர்ட்டுக்குச் செல்லாமல் உள்ளூர் சமாஜத்திலேயோ அல்லது அதிகபட்சமாக ராஜஸ்தானில் உள்ள சமாஜத்திலேயோ தீர்த்துக்கொள்வார்கள். இதற்காக அவர்கள் கோர்ட்டினை ஒருபோதும் நாடுவதில்லை. அந்தளவிற்கு அவர்கள் தங்களுடைய சமாஜத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உலகளாவிய வர்த்தகத்தை செய்து கொண்டிருப்பினும், தங்கள் பூர்வீகத்தின் மீது தங்கள் உயிரையையே வைத்திருக் கிறார்கள். அங்கே தொடர்பு தீவிரமாகி விட்டால் இங்கே ஒரு தனி அமைப்பு உருவாகி விடுகிறது. தமிழகத்தில் மதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் இருப்பதெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவையே. சென்னை போன்ற நகரங்களில் இருப்போர் இன்னும் பூர்வீகத்திற்கு போகவரத்தான் செய்கிறார்கள். ஆக, அவர்கள் விவசாயத்தில் மட்டுமே இருந்திருந்தால் தங்கள் பூர்வீக வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்திருப்பர். வர்த்தகத்தில் ஈடுபட்டதனால், இன்று உலகம் முழுக்க பரவியிருக்கிறார்கள். இந்தியாவின் முதல் வர்த்தக சமூகத்தினராக குஜராத்தியினர் கோலோச்சுகிறார்கள். ஒரு காலத்தில் அரேபியா, காபூல், ஆப்கானிஸ்தான் போன்ற அந்நியநாடுகளிலிருந்து படையெடுத்து வந்தபோது இஸ்லாமிய அரசர்கள் எல்லோருமே ஏன் அவர்கள் குஜராத்தையே பெரும்பாலும் தாக்கினார்கள் என்றால், வரலாற்றுப்படி வர்த்தகத்துறையில் எப்போதுமே குஜராத் செல்வச்செழிப்பு ஓங்கிய பகுதியாகும். அவர்கள் மிகவும் திறமையான வர்த்தகர்கள் மற்றும் நிதி முதலீட்டாளர்கள். அவர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி அவர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் இந்தியாவிற்கே அதிக பலன்கிட்டி வருகிறது. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பருவமழை பொய்த்துப்போனாலும் கூட, விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து அவர்களின் விவசாயத்தை மேற்கொள்ளச் செய்திருக்கிறார்கள். பல நேரங்களில் சண்டைகள் மூண்டிருக்கின்றன. சச்சரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. குஜராத்தி நிதிமுதலீட்டாளர்களுடன் நேரிடையாக மராத்தியர்களின் கிளர்ச்சிகள் நடந்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இதுபோன்ற பதிவுகள் இருப்பினும் விவசாயத்தைக் காத்து தக்க வைத்த பெருமை குஜராத்திகளுக்கு உண்டு. இது போன்று உலகத்திற்கு யூதர்கள் இருந்தனர். இத்தகைய வர்த்தக மாடலானது இன்றைக்கு வரைக்கும் நிதித்தலைநகராக அறியப்படும் மும்பைச் சந்தையில் அம்பானி, அதானி போன்ற 80% குஜராத்திகள் இடம் பிடித்திருக்கின்றனர். இத்தகைய நிலைக்கு காரணமாக விளங்குவது சமண மதம் (ஜெயினிஸம்) ஆகும். இந்தியா முழுமையுமே ஜெயினஸமாக இருந்திருப்பின், இந்தியா முழுமையுமே சிங்கப்பூர் போன்று உலகின் வர்த்தக மையமாக விளங்கியிருக்கும்! விவசாய மையமாக இருந்திருக்காது. அதனால், உணவிற்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆக, இறைவன் அந்த மூன்று மாநிலங்களை மட்டும் வர்த்தக மையமாக வைத்துவிட்டான்! 

--------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment

25.பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா?

  " பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா ?