Wednesday, June 17, 2026

18.நடுத்தரக் குடும்பத்தின் போராட்ட வாழ்வு

 

The Middle Class Struggle A Real Life Perspective

நடுத்தரக் குடும்பத்தின் போராட்ட வாழ்வு

                       --------------------------------------------------------------------------

          பொதுவாக வளரும் நாடுகளில் மிகமுக்கியமான அம்சங்களைக்கொண்டது பொருளாதார ரீதியில் நடுத்தரத்தில் உள்ள குடும்பங்கள். மேட்டுக்குடியினர், பரம ஏழைகள் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் இடையிலே சின்னச் சின்ன சந்தோஷம் தரக்கூடிய நன்மைகளுடன் வாழ்ந்து வருவது நடுத்தரக்குடும்பங்கள். இந்த நடுத்தரக்குடும்பங்களே கலாச்சார ரீதியலான மரபுகளை தொடர்ந்து தாங்கிப்பிடித்து வரும் தூண்களாகும். 

            பப், ஸ்டார் ஹோட்டல்களில் வித்தியாசமான கலாச்சாரம் நிலவுகிறது. அதேவேளையில் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் கலாச்சாராமானது அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அணுகும் முறையையும் எதார்த்தநிலை கொண்டது. அசலான கலாச்சார மரபுகளைப் பின்பற்றும் அவசியம் அவர்களிடத்தில் (அடித்தட்டு மக்கள்) காணப்படுவதில்லை. ஒரிஜினலான மரபுவழி கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவசியமும், வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதேநேரம் பாரம்பரிய வழிமுறைக்கொண்டாட்டங்களில் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் ஆச்சாரமாக இருப்பர். இதனாலேயே என்னவோ தெரியவில்லை, அவர்களுக்கு அதுமுறித்த மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. நகர்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கமானது பெருத்த சேனையாக இருக்கிறார்கள். மாதாந்திரம் பெரிய சம்பளம் வாங்கக்கூடிய அரசு ஊழியர்கள், சிறு, குறுந்தொழில்களைச் செய்யக்கூடியவர்கள், தனியார்த் துறையில் இருப்போர், பன்னாட்டு நிறுவனங்களிலேயே நடுத்தர வருமானம் ஈட்டக்கூடியவர்கள், நடுத்தர நிலையில் பேக்கரி போன்ற வர்த்தகம் செய்வோர் போன்றோரெல்லாம் இந்த நடுத்தர வர்க்கப்பட்டியலில் இடம்பெறுவர். இவர்களைப் போன்றோர் தங்களுடைய நடுத்தர வருமானத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை, பிரபலமான, செலவுகளை அதிகம் பிடிக்கும் பள்ளிகளில் மட்டுமே படிப்பதற்கு அனுப்புவர். இதற்காக அவர்களுடைய ஆர்வமும், தியாகமும் அதிகம் இருக்கும். குறைந்த்து 20 ஆண்டுகளாவது போராடி வீட்டுக்கடனை அடைப்பார்கள். அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பார்கள். தங்களின் 1000 .அடி கடையை 10,000 .அடி கொண்ட கடையாக மாற்றுவதற்காக குறைந்தது 30 ஆண்டுகள் போராடுவர். இத்தகையோருக்காக அரசாங்கங்கள் என்ன செய்கின்றனர் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஏனெனில் தேர்தலின்போது இவர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கப் போவதில்லை. பணக்கார வர்க்கம் பொதுவாக வாக்களிக்காது. அரசிடமும் அவர்கள் எதையும் பெரிதாக எதிர்பார்க்கப்போவதில்லை. ஏழைகள் ஓட்டுப் போடுவார்கள். அவர்கள் ஒரே சிந்தனையுடன் ஒட்டுமொத்தமாக வாக்களிப்பர். அரசியல் கட்சிகள் இதை வேறுமாதிரி கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றன. நடுத்தர வர்க்கத்தினரை கட்டுக்குள் கொண்டுவர  இயலாது. மக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தினர் இந்தப்பிரிவிற்குள் அடங்குவர். அரசியல் உலகில் இவர்கள் எப்பொழுதுமே அனாதைகள் போல் தான் இருப்பர். இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின்  எண்ணிக்கையானது தோராயமாக 6 கோடி. அந்த 6 கோடி பேரில் இன்கம் டாக்ஸ் ரிட்டன் ஃபைல் செய்பவர்கள் 5 கோடி பேர் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான். மீதியில் அதிகபட்சமாக 1 கோடிபேர் மட்டுமே மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரும் (Upper middle class) உச்ச வருமானம் ஈட்டுவோர் (High class) ஆவர். அதாவது ரூ.1 கோடிக்கு மேல் ரிட்டன் சமர்ப்பிப்பவர்கள் 1 கோடி பேர் கொண்ட மக்கள் தொகை. மீதமுள்ள சுமார் 90 கோடி பேர் ரிட்டன் சமர்ப்பிப்பதில்லை. அப்படி ஒரு விஷயமே இல்லை. அவர்களில் நடுத்தர வர்க்கத்தினர் நிறையபேர் இருப்பார்கள். அவர்கள் ரிட்டன் சமர்ப்பிக்க வேஎண்டிய அவசியம் இருக்காது. அதற்கும் கீழே உள்ள இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவீதத்தினர் ஏழைகள் என்கிற பிரிவின் கீழ் இருக்கிறார்கள். இந்த பிரிவினர் சட்டத்தை மதிப்பவர்களாகவும், கலாச்சாரத்தை மதிப்பவர்களாகவும், ஆசைகள் மிகுந்தவர்களாகவும், அர்ப்பணிப்புத்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்விற்கு அழுத்தமும் அதிகம். இவர்களின் வருமானத்தில் பெரும்பகுதியான இவர்களின் மருத்துவச்செலவிற்கே போய்விடுகிறது. அவர்களுக்காக ஏதாவது ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. உண்மையில் எனக்குத் தெரிந்து நடந்த ஒன்றைச் சொல்கிறேன். மும்பை, சென்னை, டெல்லி கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஒரு நடைமுறை உண்டு. குறிப்பாக மும்பையில் இது அதிகம் உண்டு. வெளியூரிலிருந்து ஒருவர் அதிக பணவசதி இன்றி வருகிறார் என்றால், தாராவியில் உள்ள குடிசைப்பகுதியில் ரூ.10,000 மாதவாடகைக்கு ஒரு வீடு கிடைக்கும். அங்கே இருந்து கொண்டு அரும்பாடுபட்டு வருமானம் பார்க்கத் தொடங்கி, அடுத்த 10 ஆண்டுகளில் முப்பது லட்சம் அல்லது நாற்பது லட்சம் ரூபாய் ஈட்டுகிறார் என்றால், விக்ரோலி, நவிமும்பை போன்ற பகுதிகளில் வீடு வாங்கக் கூடும். ஆனாலும், அவர் தன் தொழிலை மும்பையிலிருந்து செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, தினந்தோறும் காலையில் மின்சார ரயிலில் குறைந்தபட்சம் ஒன்றேகால் மணிநேரம் பயணித்து வந்து, தங்கள் தொழிலை செய்தபின் மீண்டும் அதேபோல் தங்கள் வீட்டுக்குத்திரும்ப வேண்டியிருக்கும். மும்பை ரயில் பயணம் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடிதடி, உடல், மனம் ரீதியில் அதீத அழுத்தம், காயம் முதலியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த ரயிலில்தான் அவர்கள் வாழ்க்கையே பயணிக்கும். தனது 25 ஆவது வயதில் மும்பைக்கு வரும்நபர் அநேகமாக தனது 32 ஆவது வயதில் விக்ரோலியில் வீடு வாங்குவார். அதன்பின்னும் அதீத அக்கறையுடன் தொழிலை நன்கு செய்தால், பான்ராக்கொர்லாலவில் சுமார் ரூ. 1 ½ கோடி ரூபாயில் வீடு வாங்குவார். அதற்குள் அவருக்கு 45 வயது ஆகிவ்டும். மேலும் தன் தொழிலை நன்கு செய்து, அதிர்ஷ்டமும் அவருக்கு கைகொடுத்தால் மும்பை மாநகரத்திற்குள் மும்பை செண்ட்ரல், நாரிமன் பாயிண்ட், வால்கேஷ்வர், அல்ட்ரா மவுண்ட் ரோடு, அம்பானி போன்றோர் ஃபெடரர் ரோடு போன்ற பகுதிகளில் வீடு வாங்க முடியும். அவர் ஏற்கனவே குடியிருந்த விக்ரோலி ஏரியாவில் 2000 ச.அடி சுமார் 40 லட்ச ரூபாய் இருக்கலாம். மும்பை மாநகரத்திற்குள்ளோ அதே 2000 அ.சடி வீடு சுமார் 8 கோடியாக இருக்கும். ஆக, ஒரு நடுத்தர வர்க்கத்தினர் என்கிற நிலையிலிருந்து பெரும் பணக்காரர் என்னும் நிலைக்கு மாறவும், தன்னுடைய குழந்தையின் வாழ்க்கையை அடுத்த உயர்நிலைக்கு கொண்டு செல்லவும் இப்படி அடுக்கடுக்கான தாவல் தேவைப்படுகிறது. அதே போல்தான் சென்னையிலும்! இங்கே காட்டாங்குளத்தூரில் தொடங்கி, பின் தாம்பரம் வந்து, பின் கிண்டி வந்து, கிண்டியிலிருந்து போட் க்ளப், போயஸ் கார்டன் போன்ற ஏரியாக்களில் கால்பதிக்க முடியுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் ஆசைப்படும் இந்த பயணத்தில் ஒருவேளை அந்த குடும்பத்தலைவரின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட்டால் அந்தக்குடும்பம் ஒட்டுமொத்தமாக பெருமுயற்சி எடுத்து, அவரைக் காப்பாற்ற முனையும். அப்படிப்பட்ட பிரச்சினையின்போது அதுநாள் வரை உழைத்து வாங்கிய அந்த வீட்டை விற்கநேரிடும். இவர்களுக்கு இந்த நகரத்தில் யாரும் இல்லாததால், இன்ஸ்யூரன்ஸ், மருத்துவம் பற்றிய விஷயங்களை சொல்வதற்ம் கூட ஆளில்லை. கிராமப்புறம் மற்றும் நகர்புறம் இவற்றிற்கிடையேயான விஷயத்தில் நகைச்சுவையானது என்னவெனில், கிராமத்திலிருந்து நடுத்தர வர்க்கத்தினராக முதன்முதலில் வரும் ஒருவர் ஒருவேளை நகரத்தில் ஏமாந்து விட்டார் என்றால், அவரையே அடுத்து அதே கிராமத்திலிருந்து வரும் இன்னொருவர் ஏமாற்றுகிறார். இது ஒரு Vis a Cycle of treat . “நான் ஏற்கனவே ஏமாந்திருக்கிறேன். அடுத்து வருபவனுக்கு ஏதும் தெரியாது. அதனால் நான் அவனை ஏமாற்றுகிறேன்” என்று ஏமாற்றுகிறார். இப்படி ஏமாற்றப்படும் நபர், பஸ்களில் தொங்கி வாழ்க்கையில் பயணிக்கும் நபரோ,”என்னை ஒருவன் ரூ.5 லட்சம் வரை ஏமாற்றி விட்டான். அதனால் நான் இன்னொருவனை ஏமாற்றுவேன்” என்று வாழத்தொடங்குகிறான். ஆக, இவர்களுக்கு இத்தனை சிரமங்கள் இருக்கின்றன. இப்படியெல்லாம் படாதபாடு படும்போது ஏற்படும் தீத அழுத்தத்தால் அவர்களுக்கு ஆரோக்கியச்சீரழிவு ஏற்படும். இதற்குத்தேவையான மருத்துவ முக்கியத்துவத்தினை எப்படி தருவது? தன் குடும்பத்தின் வாழ்வியல் தரத்தை உயர்த்துவதற்காக போராடும்போது எதிர்பாராமல் வருகின்ற மருத்துவச்செலவுகளை சமாளிக்கவேண்டும். ஆகவே இன்ஸ்யூரன்ஸ் திட்டத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். வருமானவரி சம்பந்தமான நிதிப்பிரச்சினை எதுவும் இவர்களுக்குத் தெரிவதில்லை. பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிவைத்து, ஓடுகின்றனரே தவிர, சம்பாதிக்கும் பணத்தை எப்படி கணக்கில் வைப்பது? என்பதை செயல்படுத்த தவறி விடுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கான தேவைகளை கேட்பதில்லை. இவர்களால் கேட்கவும் முடிவதில்லை. ஏனெனில் அரசாங்கத்தால் அவர்களுக்கு (நடுத்தர வர்க்கத்தினர்) அங்கீகாரமே கிடைப்பதில்லை. Class for Exself ஆக இருக்க வேண்டும். அதாவது அவர்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிய வேண்டும். ஏனெனில் இவர்கள் புவியியல் அடிப்படையில் ஒரே இடத்தில் இருப்பதில்லை. பெருநகரத்திற்குள்ளேயே அதிக இடைவெளி விட்டு வாழ்பவர்கள். சொந்தம் சார்ந்து வேலை செய்வர். ஆகவே, அவர்கள் கேட்பதற்கான வாய்ப்பும் மிக மிகக்குறைவு. ஆகவே அரசாங்கங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்காக எதையாவது செய்தாக வேண்டும். மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ், ஹெல்த் இன்ஸுரன்ஸ், எளிதாக்கப்பட்ட எஸ்.எம்.பி கடனுதவி, போக்குவரத்து வசதி போன்றவற்றை என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்.

------------------------------------------------------------  

 

 

No comments:

Post a Comment

125.ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?

    ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?             விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகி...