கலாச்சாரம் என்றால் என்ன?
கலாச்சாரம் என்றால் என்ன? அதை எப்படி வகைப்படுத்திப்பார்ப்பது? என்றெல்லாம் மக்கள் கேட்கிறார்கள்.
ஒரு சிலர் கலாச்சாரம் என்பது போலியானது. இன்றைக்கு பேசுவதுதான் நாளை கலாச்சாரம் என்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு பேசுபவர்கள் சுயச்சிந்தனையுடன்
உருவாக்க முடியாது என்பதே உண்மை. நூறுகோடி மக்களும் என்ன பேசுகிறார்களோ அதுவே நாளை கலாச்சாரமாக வரப்போகிறது. தமிழ் நாட்டில் 7 கோடி மக்களும் இன்று என்ன நினைக்கிறார்கள்? யோசிக்கிறார்கள்?
எப்படி நடக்கிறார்கள்?
எவ்வாறு செய்கிறார்கள்?
என்பதெல்லாம் தான் நாளை தமிழ்நாட்டின் கலாச்சாரமாக மாறப் போகிறது. அந்த கலாச்சாரமே அடுத்து வரப்போகிற தலைமுறையை ஆட்கொள்ளப்போகிறது. ஆனால், அவர்றை தனித்தனியாக பிரித்துப்பார்ப்பதோ, அல்லது எடுத்துப்பார்ப்பதோ அவ்வளவு எளிதான விளையாட்டல்ல.
”கலாச்சாரத்தை புரிந்து கொள்வதும், கடவுளை அறிந்து கொள்வதும் ஒன்றுதான்” என சில நண்பர்கள் கூறுவதுண்டு. இதை புரிந்துகொள்வதற்கு இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. அதில் சில முக்கியமான விஷயங்களைக் கூறுகிறேன். 1980 களில் இந்தியா முழுமையுமே “எய்ட்ஸ்”நோய் குறித்த விளம்பரங்கள் வரும். குறிப்பாக தமிழகத்திலும் வரும். அதில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்று வாசகம் இடம்பெற்றிருக்கும். இதில் என்னுடைய கேள்வி. இங்கே “ஒருவனுக்கு ஒருத்தி” என்று வெளியிடுகிறோம். உலகம் முழுக்க இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இதே வாசகத்தை சவுதி அரேபியாவில் வெளியிடமுடியுமா?
அங்கே ஒரு ஆணுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம். இதே போல் அதே வாசகத்தை அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வெளியிட முடியாது. ஏனென்றால் அங்கெல்லாம் “ஒருவனுக்கு ஒருத்தி” என்கிற விஷயம் கலாச்சாரரீதியில்
மதிப்புமிகுந்த இடத்தில் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான அந்தரங்க ஒப்பந்தம். ஆனால், இந்தியாவில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது கலாச்சார ரீதியிலான உறவுமுறை. நான் சரி, தவறு என்பவற்றிற்குள்
நுழையப்போவதில்லை. நம் நாட்டில் 1956
–இல் வந்த இந்துமதம் சார்ந்த சட்டமாக சொல்லப்படுகிறது.
இந்து மதத்திலோ, இந்து வாழ்வியல் முறையிலோ “ஒருவனுக்கு ஒருத்தி”என்கிற கருத்தியல் இல்லை. இராமாயண இதிகாசத்தில் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி
அப்படி இருந்தார் என்றாலும், அதன்பின் வந்த எவற்றிலும் அது போன்ற கருத்தியல் கிடையாது. அது ஒரு மதிப்பு. அந்த மதிப்பினை வைத்து கலாச்சாரத்தின் உள்ளே தள்ள முடியுமென எண்ணுகிறார்கள் அல்லவா? இதன் மூலமாகவும் எய்ட்ஸை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள் அல்லவா? அதுதான் கலாச்சாரம். அந்த கருத்து மக்களிடம் எளிதில் சென்றடைந்தது. இது வேறு எந்த தேசத்திலும் நடப்பதற்கு சாத்தியம் இல்லாதது. இதன் பெயர்தான் கலாச்சாரம். இன்னொரு எடுத்துக்காட்டும் சொல்லமுடியும்.
“Forrest Gump” என்னும் ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் இந்தி மொழியாக்கமானது அமீர்கான் நடித்து ”லால்சிங் சத்தா”வெளியானது. அதன் மூலமான ஆங்கிலப் படத்தில் அந்த ஹீரோவிற்கு புத்திக்கூர்மை குறைவாக இருப்பதால் பள்ளியிலே சேர்த்துக்கொள்ள
மாட்டார்கள். அவரின் தாய் பள்ளிக்குச் சென்று பிரின்ஸ்பாலை சந்தித்து நீண்ட நேரம் பேசுவார். ஆனாலும், பிரின்ஸ்பால் ஒத்துக்கொள்ளவே மாட்டார். ” நீங்கள் சரியென்றால், இந்த வாரம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்” என்று கேட்க, “ம்.. வரலாமே.. நான் வீட்டில்தான் இருப்பேன். என் மனைவி கூட வீட்டில் இருக்கமாடட்டாள்”என்பார். அதேபோல் அந்த ஹீரோவின் அம்மா பிரின்ஸ்பால் வீட்டின் மாடிக்குச் செல்வாள். ஹீரோ கீழே நிற்பார். மேலிருந்து ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும் ஓசை வீட்டின் கீழ் கேட்கும். படம் பார்ப்பவர்களுக்கு
அந்த ஓசையின் மூலம் நடந்தது என்ன? என்பது புரிந்துவிடும். சிறிது நேரத்தில் அந்த தாய் கீழே வந்து,”உனக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது”என்பார். அதேபோல் மறுநாளிலிருந்து அந்த ஹீரோ பள்ளிக்கூடம் செல்வார். அந்த படத்தின் உண்மையான கதை இதுதான்.
அதே
“Forrest Gump” ஆங்கிலப்படம் இந்தியாவில் இந்திமொழியில் அமீர்கான் நடித்த படத்தில், அமீர்கானின் தாய் (கதாபாத்திரம்) பிரின்ஸ்பாலை சந்திப்பார். அவருடைய வீட்டுவேலைகளை எல்லாம் செய்துதருவதாக வாக்களிப்பார்.
அதனால், பள்ளியில் சேர்க்கை நடைபெற்று, அமீர்கான் கதாபாத்திரம் வாழ்வில் அடுத்தடுத்த உயரங்களை எட்டுவதாக காட்டப்படும்.
ஒரே கதைதான். எவ்வளவு முக்கியமான மாற்றம் கையாளப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். தயாரிப்பாளர்,
இயக்குனர், நடிகர் என அனைவருமே ஏன் அப்படிப்பட்ட மாறுதலை யோசிக்கிறார்கள்?
ஏன் இந்திய மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்களா? ஏன் அவர்கள் கலாச்சத்திற்கும்,
நம் கலாச்சாரத்திற்குமிடையே உள்ள முரண்பாட்டை ஒத்துக்கொள்ள மாட்டார்களா? இந்திய கலாச்சாரத்திற்கென ஒரு தனித்துவமான ஒருமகத்துவம் உள்ளதென ஒரு சூழல் நிலவுகிறது. அதனால் நம் இந்தியாவில் உள்ள கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றினார்கள். இதுபோன்ற ஒரு கலாச்சாரத்தை நாம் தனிப்பட்ட முறையில் உருவாக்க முடியாது. மக்கள் சமுதாயம்தான் உருவாக்க இயலும். ஏழுகோடி தமிழ்மக்களும் சேர்ந்துதான் ஒரு நல்ல கலாச்சாரத்தை உருவாக்க முடியும். 140 கோடி இந்திய மக்களும் சேர்ந்து இந்திய கலாச்சாரத்தினை உருவாக்கலாம்.
அதனுடன் ஆங்காங்குள்ள துணை கலாச்சாரவாதிகள்
இணைந்து இணைந்து உருவாக்கலாம். ஆனால், அதை ஒருமுகமான உணர்வுள்ளதாக உருவாக்குவது மிகவும் கடினம். அதில் ஏகப்பட்ட இழுபறி இருக்கும். இருந்தாலும், ஆதிக்கம் செலுத்த ஒரு குரூப் வேலைசெய்வதால் ஒரு நல்ல கலாச்சாரம் உருவாகினால், அதனால் பயன்பெறப்போவது இந்த கலாச்சாரத்தின் நாளைய தலைமுறையே. நாம் பசுமாட்டை அரும்பாடுபட்டு வளர்த்தால் அது பால தரப்போகிறது. அதுதான் கலாச்சாரம். ஒரு தனி மனிதனாக அல்லாமல், ஒரு குழுவாக மக்கள் உருவாக்கும்போது அந்த கலாச்சாரத்தினால், சாதிக்க முடியும். அது அவர்களின் வாழ்வை எளிதாக்கும். அதிலிருக்கும் வித்தியாசங்களை மக்கள் புரிந்துகொள்ள மறுப்பதால் இந்த கலாச்சார சீரழிவு வரும்போதெல்லாம்,
இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகும். உடல் ஆரோக்கியம் ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூகரீதியில் பிணக்குகள், சாதிய, மத மோதல்கள் ஆகியன வருவது எல்லாமே நாம் கலாச்சாரத்தை ஒழுங்காக உருவாக்கத் தவறுவதால்தான். இதை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான் கலாச்சாரத்தை அவரவர்கள் தன்போக்கில் பயன்படுத்த முனைவார்கள். ஆகவே, உணர்வோடு ஒரு அழுத்தம் தரவேண்டும். இவற்றை ஒருமுகப்படுத்துவதற்காக நான் முயற்சிக்கிறேன். அதற்காக அப்படியே எதுவும் நடந்துவிடாது. சிறுதூண்டுதலைத்தான்
செய்ய விழைகிறோம். அது எப்படி ஆக வேண்டும் என்பதை இயற்கையும், இறைவனுமே முடிவெடுக்கட்டும்.
-----------------------------------------------------
No comments:
Post a Comment