Wednesday, June 17, 2026

19.The Clash: Emotion Versus Relevance

 

                        The Clash: Emotion Versus Relevance

இராமாயணம், மகாபாரதம், உள்ளிட்ட மனித வாழ்வில் ட்ராய் மற்றும் கிரேக்க நாகரீகம் முதல் இன்றுவரையிலும் Emotion என்பது மிக முக்கியமான அங்கம் வகித்து வருகிறது.

சூர்ப்பனகை, திருதிராஷ்டிரன், பாஞ்சாலி, அர்ஜுனன், பரதன், இலக்குவன் போன்றோரின்உணர்ச்சிகள்தான்  (Emotion)” காவியங்களை உருவாக்கும் காரணிகளாக விளங்குகின்றன. இதுவே மனித வாழ்வின் சாரம்சம். ஆனால், நிறைய விஷயங்கள் எதிர்மறையான பாதிப்புகளுக்கு, எமோஷன்ஸுகளில் உள்ள தவறான புரிதல்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. மனிதர்களில் ஆணுக்கும்; ஆணுக்கும், பெண்ணுக்கும்; பெண்ணுக்கும், ஆணுக்கும்;பெண்ணுக்கும், மனிதர்களுக்கும்;கடவுளுக்குமான பிணைப்புகள் எல்லாமே நாம் +2 வில் படித்த கோவலண்ட் பிணைப்பு போல இரண்டு கூறுகள் கட்டாயம். அதில் முதலாவது எமோஷன்ஸ்! இன்னொன்று சம்பந்தம்!

எமோஷன் என்பது இருவருக்கிடையேயுள்ள காரணங்களற்ற பிணைப்பு. ரிலவன்ஸ் என்பது ஏதோ ஒரு காரண காரியத்துடன் இருக்கக்கூடிய பிணைப்பு. பொதுவாக நகர்புற வாழ்க்கையில்  ரிலவன்ஸ் அதிகமாகவும், எமோஷன் குறைவாகவும் இருக்கும். கிராமப்புறங்களில் எமோஷன் அதிகமாகவும், ரிலவன்ஸ் குறைவாகவும் இருக்கும். எனக்குத்தெரிந்தவரை உலகில் இரண்டு உறவுகளில் 100% சதவீதம் எமோஷன் உண்டு. அவை எது? ஆம். நீங்கள் நினைத்தது சரிதான். அவற்றில் ஒன்று அப்பா. இன்னொருவர் அம்மா. குழந்தைக்கும் அதன் தாயிற்கும், குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் இடையே 100 சதவீதம் எமோஷனஸ் இருக்கும் எனலாம். அந்த பிள்ளை உருப்பட்டாலும், உருப்படாவிட்டாலும் சரி, எவ்வளவுதான் தவறுகள் இழைத்தாலும் அவர்களுக்கிடையிலான எமோஷனில் எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் மகன் நன்கு படித்தால்தான் பிடிக்கும். மகள் அழகாக இருந்தால்தான் பிடிக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் பிடிக்கும் என்பவற்றையெல்லாம் கடந்து எமோஷன் என்பது மிகவும் வலுவாக இருக்கும். இந்த இரண்டு உறவுகளைத்தவிர்த்து, உலகில் உள்ள நிறைய உறவுகளில் இவை 50% சரிபாதியாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் 100% பிணைப்பு இருக்கும் என நினைப்பது உண்டு. ஆனால், 50 – 50 என்கிற அளவில்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் குறைவாகக்கூட இருக்கக்கூடும். இது அந்த கணவன் மனைவிக்கிடையே, அதிலும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். காதலிக்கும் காலகட்டத்தில் அவர்களுக்கிடையே 100% எமோஷனே இருக்கும். அங்கே ரிலவன்ஸ் 0% மட்டுமே இருக்கும். அவர்களுக்கு திருமணம் ஆனவுடனே வீடு, சம்பளம், இன்னபிற தேவைகள் என ரிலவன்ஸ் மேலே எழும்பி விடும். தன்னுடைய கடமையை சரிவர அந்த கணவன் செய்யவில்லை என்றால், அந்த பெண் கோபப்படுவாள். ”இதையெல்லாம் எதிர்பார்த்து ஏன் என்னை கல்யாணம் செய்து கொண்டு வந்தாய்?” என கணவன் எதிர்பாய்ச்சல் பாய்வான். அந்த குடும்பத்தை நடத்திச்செல்ல வேண்டிய இடத்தில் அந்த பெண் இருப்பதனால் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு எழும். அவர்கள் திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர் பார்த்து முடிவுசெய்து நடத்தி வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி.. மனைவி என்பவள் மனைவிதான். இங்கே இயல்பாகவே ரிலவன்ஸ் வந்துவிடும். அப்படி இல்லை யென்றால் குடும்பம் நடத்த முடியாது. அம்மா- அப்பாவிற்கு அடுத்து இருக்கக் கூடிய குழந்தைகளுடனான உறவு அப்வ்வாறு இல்லை. எனது பாட்டி அடிக்கடி சொல்வார்,”தண்ணியும், பாசமும் எப்போதும் கீழ்நோக்கித்தான் பாயும்என்று! குழந்தைகள் மீதான தாத்தா, பாட்டியின் பாசம் அளவிட முடியாததாக இருக்கும். அதே அளவு பாசத்தை குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் காட்டுவார்களா? என்றால் அது சந்தேகம்தான். அது குறிப்பிட்ட அளவிற்குத்தான் இருக்கும். சமவிகித அடிப்படையில் இருக்கவே இருக்காது. இது இப்படி இருக்க, கணவன் மனைவிக்குமிடையிலான எமோஷன்ரிலவன்ஸ் சரிபாதியாக வந்துவிடுகின்றன. 

வர்த்தகத்தைப் பொறுத்தவரை பங்குதார்ரகளுக்கிடையே நிறைய தவறான புரிதல்களும், மனஸ்தாபமும் வரும். அவர்களின் வர்த்தகத்தில் இலாபம் ஈட்டினாலும் சரி, நஷ்டத்தை அடைந்தாலும் சரி இத்தகைய நிலை வரலாம். இந்த நிலை 50% த்திற்கும் மேல்தான்! இங்கு இரண்டு அல்லது மூன்று பங்குதாரர்களுக்கிடையே எமோஷன் அதிகமாக இருக்கும். ஆக இப்படியும் நடைபோடும் பங்குதாரர்களும் மிகவும் குறைவுதான். ஆரம்பத்தில் இரண்டு, மூன்ரூ பங்குதாரர்களிடையேஅட.. என் நண்பன் தானே..”என்று எமோஷன் அதிகமாக இருக்கும். அதேநேரம் நஷ்டம் வந்துவிட்டால், எமோஷன் குறைந்து ரிலவன்ஸ் அதிகமாகிவிடும். இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இரண்டு பேருக்குள் என்னவிதமாக தொடர விரும்புகிறார்கள் என்பதே. ஒருவர்நான் 100% எமோஷனாக இருந்தேன். அவனுக்காக என்ன வேண்டுமானாலும் தரலாம் என்று இருந்தேன். ஆனால், அவன் இப்படி ரிலவண்ட்டாக இருக்கிறானேஎன்பர். அவருடைய எதிர்தரப்பும் இதையே கூறி வருந்துவர். இருவருடைய உணர்தலிலும் தவறான புரிதல் இருக்க வாய்ப்பிருக்கிறது. உலக வரலாற்றில் தொடர்ந்து வரக்கூடிய தனித்துவமான வாதம் இதுதான். எமோஷன் எவ்வளவு? ரிலவன்ஸ் எவ்வளவு? இந்த இரண்டைத்தவிர புதுகூறு ஏது இருப்பதில்லை.

இரண்டு உறவுகளுக்குள் இருக்கக்கூடிய எமோஷன் மற்றும் ரிலவன்ஸ்ஸையும் புரிந்துகொண்டு பங்குதாரரகளாக தொழில் தொடங்கும்போது அனைத்தையும் புள்ளிவரத்துடன் குறிப்பிட வேண்டும். ரிலவன்ஸ்ஸை முழுமையாக விளக்கி விட்டால், இலாபம் வந்துவிட்டால் இயல்பாகவே எமோஷன் வந்துவிடும். ரிலவன்ஸ் கேள்விக்குறியாகி விட்டால் எமோஷன் அடிபடத் தொடங்கிவிடும். இப்படித்தான் குடும்பமாக இருக்கட்டும், தொழிலாக இருக்கட்டும் இவற்றில் எமோஷனையும், ரிலவன்ஸையும் சரிவர கையாளத் தெரிந்துகொண்டால், வாழ்வில் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து விடலாம். இது என்னுடைய தனிப்பட்ட கண்டு பிடிப்பல. என்னுடைய குருநாதர் கூறியவையே.

ஆக, ஒவ்வொரு உறவுகளுக்கிடையிலும் எமோஷனையும், ரிலவன்ஸையும் பிரித்துப்பார்க்க தெரிய வேண்டும். இதைவைத்துதான்குற்றம் பார்க்கின் சுற்றமில்லைஎன்கிற வாக்கியம் பொன்னொளியாக மின்னுகிறது. ஏனெனில் ரிலவன்ஸை தூக்கிப்பிடித்தால் குற்றங்கள் தெரியும். இதற்கு நாம்உங்களுக்கு சம்பந்தப்பட்டவர் ரிலவன்ஸாக இருந்தால்கூட, பொருளாதார ரீதியில் உங்களுக்கு இழப்பு என்பது இல்லையென்றால் நீங்கள் எமோஷனாக இருந்துவிடுங்கள்என்கிறோம். இப்படி வாழக்கூடியவர்களைத்தான் நாம்நல்லவர்என்று அழைக்கிறோம். ”அவர் ரிலவண்ட்டாக இருக்கிறார். நானும் ரிலவண்ட்டாக இருக்கிறேன். நான் நல்லவன் கிடையாது”, அவன் எமோஷனாலாக இருக்கிறார். நான் ரிலவண்ட்டாக இருக்கிறேன். நான் கெட்டவனாகிவிடுகிறேன், அவர் ரிலவண்ட்டாக இருக்கிறார், நான் எமோஷனலாக இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால், நீங்கள்நல்லவனுக்கு நல்லவன்ஆகிவிடுகிறீர்கள். நான் சொல்ல வருவது என்னவெனில், நம் சமுதாயத்தில் அனைவரும் செயல்பட வேண்டியது இப்படித்தான் என்பதே.

கலியுகத்தில் அதிகம் கெட்டவர்கள் இருக்கிறார்களெனில், அதிகமாக ரிலவன்ஸ் கோட்பாட்டில் வாழ்கிறார்களென்றால், எமோஷன் அடிவாங்கிவிடும். ஆனால், உடலில் இருக்கும் வெப்பம் போல் எல்லோருக்கும் எமோஷன் தேவை. அதேபோல் சமுதாயத்திற்கும் எமோஷன்தான் வெப்பமாகும். கூட்டுக்குடும்ப வாழ்வியல் பற்றி மம்மூட்டி, முரளி, தேவயானி நடித்தஆனந்தம்திரைப்படத்தை நாம் ரசித்துப் பார்க்கிறோம் அல்லவா? கூட்டுக்குடும்ப வாழ்வில் ஒரு எமோஷன் இருக்கிறது. அது எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அத்தகைய சூழலை உருவாக்கத்தான் யாருக்கும் பொறுமை இல்லை. ஆகவே தனியாகி ரிலவண்ட் ஆகி விடுகிறார்கள். நியூக்ளியர் குடும்பமாகி விடுகிறார்கள். ஒரு சமுதாயத்திற்கும், கூட்டுக்குடும்பத்திற்கும்  எமோஷன் தேவையாயுள்ளது. ஆனால், ரிலவன்ஸிற்கு அதிக முக்கியத்துவம் தந்து, எமோஷனை தவற விடுகிறார்கள். எமோஷனுக்கு பற்றாக்குறை ஏற்படும்பொழுது, குடும்பம், சமுதாயம் ஆகிய அனைத்தும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.

சரி.. எமோஷனை எப்படி மறு கட்டமைப்பு செய்வது? அதிலும், இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்மயமான, கார்பரேட் உலகியலில், மிகவும் வேகமான ஓட்டத்தில் அதை எப்படி செய்யப்போகிறோம் என்பதே மிகப்பெரிய சவால். நான் சொல்வது ஒரு சிறிய விதைதான். நான் கூறிய விஷயத்தை எத்தனைபேர் ஏற்பீர்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவரவர் வட்டத்தில் இந்த எமோஷனை அதிகரிக்கச் செய்வது எப்படி? என்பதை நீங்கள் செய்யும் பணிகளில்தான் உள்ளது. காதல் திருமணம், பெற்றோர் முடிவு செய்யும் திருமணம், தொழில் பங்குதார்ர்கள், நக்சலைட்ஸ், தீவிரவாதம், அரசியல் போன்ற அனைத்திலும் எமோஷனல் ரிலவன்ஸ் என்கிற கூற்று வரும்.

 

 

No comments:

Post a Comment

25.பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா?

  " பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா ?