ஜோதிடம் ஒரு அறிவியல் என்பது
உண்மையா ?
சமூக வலைதளங்களில்
அதிக பிரபலமாக
உலாவரும் ஒரு விஷயம் எதுவென்றால், அது ”ஜோதிடம்” பற்றியே என்பது கண்கூடான
உண்மை. இது அனைவரின் ஆர்வத்தையும்
தூண்டக்கூடிய ஒரு முக்கிய அம்சமாகும். ”ஜோதிடம் என்பது அறிவியலா?
அல்லது அறிவியல்
இல்லையா? உண்மையில்
ஜோதிடத்தால் எதையும் கணிக்க முடியுமா?”
என்றெல்லாம் இன்னும்கூட தேடலுடன் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக
மனிதர்களின் வாழ்வியலோடு
நெருங்கி பின்னிப்
பிணைந்திருக்கிறது. மெத்த படித்தவர்கள், விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்றவர்கள், ஆய்வுகளின்
மூலம் பி.ஹெச்.டி பட்டம் பெற்றோர்
கூட மிகச்சாதாரணமான ஜோதிடர்களிடம் சென்று அமர்ந்து, “சார்.. எனக்கு இப்ப நேரம் எப்படி இருக்கு?” அப்படின்னு
கேட்பதுண்டு. அதேபோல் மக்கள் செல்வாக்கு
பெற்ற பெரும் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வேட்பாளராக
ஒருவரை அறிவிப்பதற்குகூட ”அவருக்கு
நேரம் நன்றாக இருக்கிறதா?” என்று தெரிந்து கொள்ள முனைவதுண்டு. இதனாலேயே
சில வேட்பாளர்கள்
தங்கள் ஜாதகத்தையே
மாற்றிக்கொடுத்து போட்டியிட
வாய்ப்புகளைப் பெற்றதுண்டு
என்பதையும் நம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆக, இத்தனைபேரு தேடியும்
அது ஒரு முடிவிற்கு வராத விஷயமாகவே இருக்கின்றது! நாமும் எஸ்.எல்.ஜி. மூலமாக
”ஜோதிடம் என்பது அறிவியலா?” என்று ஆய்வு செய்துவருகிறோம். ஜோதிடத்தின்
அடிப்படையைத் தெரிந்தவர்களுக்கு இப்போது நான் கூற இருப்பது நன்கு தெரியும். மனிதர்களுடைய
வாழ்க்கையை 12 கட்டங்களாக
பிரித்திருப்பர். சூரியன்,
சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன்
(குரு), வெள்ளி
(சுக்கிரன்), சனிபகவான்
மற்றும் நிழல் கிரகங்களான ராகு, கேது என 9 கிரகங்களாக வகைபடுத்தியிருப்பார்கள். ஒருவர் பிறக்கும் நேரத்தில்
மேற்கூறிய 9 கிரகங்களும்
எந்தெந்த இடத்தில்
இருக்கின்றன? என்பதை குறிப்பிட்டு வரையறுப்பதே
ஜனன ஜாதகம்.
இதை அடிப்படையாக
கொண்டே அவரது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கணித்து கூறுகின்றனர். இதற்கடுத்து
கோச்சாரம். கோச்சாரம்
என்றால், பொதுவாக ஒரே இடத்தில்
நிலையாக இல்லாமல்
சுற்றி வரக்கூடிய
தன்மையுடையன. ஆக, ஜனஅவ்வாறு
வலம் வரும்போது
குறிப்பிட்ட ஆண்டில் சனி பெயர்ச்சி,
குரு பெயர்ச்சி,
ராகு- கேது பெயர்ச்சி போன்று நடைபெறும் பெயர்ச்சிகளின் போது யார் யாருக்கு
என்னென்ன பலன்? யருக்கெல்லாம் ராஜயோகம்?
என்றெல்லாம் பலரும் பலன்களை அனுமானிப்பது
குறித்து நீங்கள் அறிவீர்கள். கிரங்கள்
தங்கள் பாதையில்
சுற்றிவரும்போது வெவ்வேறு
விதமான காலகிரமத்தைப் பின்பற்றுகின்றன. சூரியகிரகத்தைப் பொறுத்த வரையில் ஒரு கட்டத்தில் ஒரு மாதம் என, 12 கட்டங்களையும் சுற்றி முடிக்க 12 மாதங்கள்
(1 வருடம்). சந்திரன்
கிரகமோ ஒரே மாதத்தில் தன் ஒரு சுற்றினை
முடித்துவிடும். தனக்கான பாதையில் ஒரு சுற்று பயணிக்க அதிகப்படியான காலத்தை எடுத்துக்கொள்ளக் கூடிய கிரகம் “சனிகிரகம்”
ஆகும். அதாவது
12 கட்டங்களை ஒருமுறை சுற்றி வருவதற்கு
சரியாக 30 ஆண்டுகள்
எடுத்துக்கொள்கிறது. ஒரு மனிதனின் வாழ்நாள்
90 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வகையில்
அம்மனிதனின் வாழ்நாளில்
சனி 3 முறை (30
X 3) முழுமையாக சுற்றி வருகிறது. அந்த 12 கட்டங்களில் ஒரு கட்டத்திற்கு 2 ½ ஆண்டுகள்
வீதம் சனிபகவான்
இருப்பார். பிரபலமான
ஒரு எண்ணை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதுண்டு. அதுதான்
7 ½ . கிராமங்களில் சர்ச்சையான
ஒரு நபர் வந்துவிட்டால் “ஏழரை வந்துட்டாம்பா” என்று குறிப்பிடுவர். ஜோதிடத்தில்
அவரவர் ராசியிலிருந்து 11 ஆவது கட்டம், 12 ஆம் கட்டம், 1 ஆவது கட்டம் ஆகிய இடங்களுக்கு சனி கிரகம் வந்து விட்டால் அதையே
”ஏழரைச் சனி” என்று கூறுவர்.
அப்படி பெயர்ச்சியாகி வரும் சனிபகவான் அந்த 3 கட்டங்களிலும் தலா 2 ½ ஆண்டுகள் சஞ்சாரம்
செய்யும். அந்த காலகட்டம் மிகவும் கடுமையாக இருக்கும்
என்கிற கூற்றினை எல்லா ஜோதிடர்களாலும் சொல்லப்படும். சனி கிரகம் சஞ்சாரம் செய்வதால்
வரக்கூடிய வேறுசில கடுமையான காலகட்டங்கள்
என்று பார்த்தோமானால், ஒருவரின்
ராசிக்கு 4 ஆம் இடத்தில் சனி சஞ்சரிக்கும்போது அது அர்த்தாஷ்டம சனி (2 ½
வருடம்), அதேபோல்
8 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்தால்
அது அஷ்டமச்சனி (2 ½ வருடம்).
ஆக, ஏற்கனவே நாம் பார்த்த
7 ½ சனியுடன் அர்த்தாஷ்டம
சனி மற்றும் அஷ்டமச் சனி ஆகியவற்றின் 2 ½ வருடங்களையும் கூட்டினால்
மொத்தம் 12 ½ வருடங்கள்.
இந்த 12 ½ வருடங்களும்
ஒருவர் வாழ்வின்
மிகவும் கடுமையான
காலகட்டங்களாக கணிக்கப்படுகிறது. இந்த கணக்கின்படி ஒருவர்
90 ஆண்டுகள் உயிர்வாழ்கிறாரெனில் அவர் சனியால் மட்டும்
37 ½ ஆண்டுகள் (7 ½ * 3 + அர்த்தாஷ்டமம் 2 ½ *3 + அஷ்டமச்சனி 2 ½ * 3) கடுமையான காலகட்டத்தை
கடக்க வேண்டியுள்ளது. இது அவரது வாழ்வில்
சுமார் 40% ஆகும்.
அடுத்ததாக குருபகவான். அடிப்படையில்
குரு மிகவும் நல்லவர். அவரே கூட ஒருவரின்
ராசியிலேயே (முதல் இடம்) இருக்கிறாரென்றால், அந்த ஜாதகருக்கு எவ்வித நன்மையும் தருவதில்லை. மேலும்
4, 6, 8 மற்றும் 10 ஆகிய கட்டங்களில் சஞ்சாரம்
செய்யும்போது நன்மைகளைத்
தருவதில்லை. இது 7 ஆண்டுகள். இந்த 7 வருடங்களையும் ஏற்கனவே நாம் கணக்கிட்ட
சனியின் சஞ்சார காலமான 37 ½ வருடங்களுடன்
சேர்த்தால் மொத்தம்
(37 ½ + 7) 44 ½ வருடங்கள். இந்த கணக்கினை
எந்த ஒரு ஜோதிடரும் இல்லையென
கூறமுடிவதில்லை. எப்படியாயினும் இந்த காலகட்டம் மிகவும் கடுமையானது என்பதை அவர்கள் ஒருபோதும்
மறுப்பதுமில்லை. அவரவர் ஜனன காலத்தின்
லக்ன
அமைப்பு,
கட்டங்களின்
கிரகநிலைகளால் ஒரு சில சாதகங்கள் இருக்கலாம். அவருக்கு நடைபெஏறும் தசாகாலம், புக்தி,
கரணம் ஆகியவற்றின்படியும், சிற்சில மாறுதல்கள், நிவாரணம்
போன்றவை கிட்டலாம்.
ஆனால் பொதுப்படையாக
பார்த்தோமானால் ஏற்கனவே கூறியிருப்பதுபோல் 90 வயது நடைபெறும் ஒரு மனிதரின் வாழ்வில்
45 வருடங்கள் சற்று கடுமையான காலங்கள்
என கொள்ளலாம்.
ஆக ”மீதியிருக்கும் 45 வருடங்களில்
அவர் என்ன சந்தோஷ பலன்களை அனுபவிக்கப் போகிறார்?”
என்கிற கேள்வி எழலாம். ஏதோ 20 அல்லது 25 சதவீத கஷ்டங்கள் இருந்தால்
பரவாயில்லை. அதுவே
50% என்றால்?.. இது முதல் கேள்வி!
இதற்குபின் அந்தந்த கிரகங்கள் தரக்கூடிய
பலன்கள், கிரகங்களின்
நிலைப்பாட்டில் உச்சம்,
நீச்சம், கிரகங்கள்
மறைவு, அவற்றின்
பார்வைகள் இதுபோன்று
ஏராளமான குறைபாடுகள்
உள்ளன. ஒரு ஜாதகத்தின் தசா காலங்களாக 120 வருடங்களை
கணக்கிடுகின்றனர். அதற்குள்
ஒவ்வொரு கிரகங்களின்
புக்தி (உதாரணமாக
சுக்கிரன் 20 வருடங்கள்,
சூரியன் என்றால்
7 ஆண்டுகள்…) என அதையும் கணக்கிட்டால், ஒவ்வொரு தசைக்கு ஏற்றார்போலவும், அந்த தசைக்குள் நடைபெறும்
கிரகங்களின் புக்தி காலங்களிலும் சில கடுமைகளை எதிர்கொள்ள
நேரலாம். ஆக, மனித வாழ்வில்
ஜோதிடத்தின் அடிப்படையில்
சுமார் 75% காலம் மிகவும் கடுமியான
காலங்களே ஆகும்.
இதுபோன்ற சேர்க்கைகளில் ஜோதிட்த்தை
வைக்க முடியுமா?
ஒரு குழந்தை பிறக்கும் காலத்திலேயே, அது பின்னாளில் சுமார்
75% கஷ்டப்பட போகிறது என்று ஜோதிட நூலில் கூற முடியுமா? ஒருவேளை அப்படி இருந்தால்
அதில் அறிவியல்
எப்படி இருக்கும்?
அதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்? இதையே
25% கஷ்டம், மீதி 75% சுப பலன்கள் என்றால் யாராக இருந்தாலும் சந்தோஷம்
கொள்வர். 75% கஷ்டம் மீதி 25% மட்டுமே சந்தோஷம் என்றால்,
யாராவது அதை பார்ப்பார்களா? ---------------------------
No comments:
Post a Comment