Friday, June 12, 2026

11 Polyandry Marriage Explain in Tamil

         11.Polyandry Marriage Explain in Tamil


நம் கலாச்சாரத்தில் திருமணம் சம்பந்தமாக பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று Polyandry Marriage என்று கூறுவதுண்டு. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்வதற்குப் பெயர்தான் Polyandry Marriage (பாலியண்ட்ரி திருமணம்). இந்த முறையானது உலகம் முழுவதிலுமே நிறைய சமுதாயங்களில், சிற்சில காலகட்டங்களில் இருந்திருக்கிறது. இந்தியாவில் மூன்று சமூகம் இந்த விஷயத்தில் மிகவும் பிரபலமானவை. முதலாவதாக கேரளாவைச்சேர்ந்தநாயர் குடும்பங்கள்”, இரண்டாவதாக ஊட்டியைச்சேர்ந்ததோடர்கள்”, மேகாலயாவைச் சேர்ந்தகாசி பழங்குடியினர்”. இவை மட்டுமின்றி பற்பல சிறு சிறு இனக்குழுக்கள் உண்டு. இநத நடைமுறை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உண்டு. தோடர்களிடையே உள்ள இத்தகைய நடைமுறை குறித்து சமூக அறிஞர்கள், “எங்கே நிலத்தொகுப்பு மிகவும் குறுகலாக உள்ளதோ, நீட்டிக்க முடியாததாக உள்ளதோ, அவ்விடங்களில் ஒரே பெண் பல ஆண்களை அதாவது சில சகோதரர்களை திருமணம் செய்துகொள்கின்றனர்என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில் மலைப்பிரதேசங்களில் நிலத்தின் எல்லையை விரிவாக்கம் செய்ய இயலாது. மேலும், நிலத்தை பலதுண்டுகளாக பிரிக்கும் நிலை வந்துவிடக்கூடாது. ஆகவே நிலத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வதற்காக, மூன்று அல்லது நான்கு சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னும் நடைமுறை உள்ளது. நான் கூறும் இந்த செய்திகளை மகாபாரதத்தின் கதையோடு ஒப்பிடக் கூடாது. ”அது ஏன் கூடாது?” என்பது குறித்து பிறகு கூறுகிறேன். அதில் நில அளவுக் கட்டுப்பாடுகளுக்காக அதுபோன்ற திருமணம் செய்துகொள்ளவில்லை. சகோதரர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக அவ்வாறு செய்தனர். இந்த Polyandry Marriage (பாலியண்ட்ரி திருமணம்) ஏன் வெற்றிபெறவில்லை என்றால் இது எளிதான காரியமல்ல.

வரலாற்றில் பெரும்பாலும் Polygamy (ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் வழக்கம்) வெற்றிகரமாக நடைமுறையில் இருந்துள்ளது.

இப்பொழுது Monogamy என்கிற வழக்கம் நடைமுறையில் உள்ளது. (ஒரு சமயத்தில் ஒருவருடன் மட்டுமே மண வாழ்க்கை நடத்தும் உண்மை நிலை அல்லது வழக்கம்).  Among the various system most successful is Polygamy system.

Polyandry Marriage (பாலியண்ட்ரி திருமணம்) குறித்து வேதங்களிலோ, பகவத் கீதையிலோ சொல்லப்படவேயில்லை. நான்கு வர்ணங்களைப் படைத்ததனால், இதையும் தானே படைத்ததாக கிருஷ்ண பரமாத்மாவும் கூறவில்லை. இந்துமதத்தின் வாழ்வியலுக்குள் ஒரு பெண் சில ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் முறை இருக்கிறதே தவிர இது இந்து மதம் கிடையாது. ஆக, அந்தந்த காலகட்டங்களில் ஒரு விஷயம் உருவாகிறது. இன்னொரு விஷயம் அழிந்து போகிறது. இதில் சிலர் பாதிக்கப்படுவர். வேறு சிலர் Tranform ஆவார்கள். இந்த System- இன் ப்ளஸ்மைனஸ் என்ன? என பார்க்க வேண்டியதுதான் சமூக அறிவியலாளர்களின் கடமை.

தோடர்களிடம் ஒரு Concept இருந்தது. நாயர்களிடம் ஒரு Concept இருந்தது. இந்த இருவேறு  Concept–களில் ஒரு வித்தியாசம் உண்டு. நாயர்களில் அவர்களின் கூட்டுக்குடும்பத்திற்குப் பெயர்தார்வார்ட்என்று கூறுவார்கள். இது Matrilineal, Matrilocal, Matriarchal என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் குடும்பத்தில் பெண் வழியில்தான் சொத்து, வாரிசு முறை, மற்றும் அதற்கான அதிகாரம் வரும். ”தார்வார்ட்குடும்பங்களில் பெண் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில்தான் இருப்பர். கணவன்மார்கள் வந்துபோகிறவர்களாவே இருப்பர். சரி.. அவர்களின் அந்தந்த கணவன்மார்கள் எங்கே இருப்பார்கள் என்றால், அவர்கள் தங்கள் சகோதரிகளுடன் வசிப்பர். அவர்கள் குடும்பத்தின் மூத்த பெண்மணியே அந்த குடும்பத்தின் தலைவியாக செயல்படுவார். இந்த முறையில் அந்த பெண்ணுக்கு இரண்டு, மூன்று கணவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு வந்து விடுகிறது. இன்றைய காலத்தில் திரைப்படங்களில் வரும் காட்சிகளில், ஒரு வீட்டு வாசலில் ஒரு ஆணின் செருப்பு தெரியும்படி வைக்கப்பட்டிருந்தால், அங்கே வரும்  ஆண் அந்த செருப்பைப்பார்த்துவிட்டு, “வேஎறு நபர் உள்ளே இருக்கிறார்என்று உணர்ந்து, வந்த வழியே திரும்பிச் செல்வது போன்று நகைச்சுவைக்காக காட்டப்படுவதுண்டு. இது போன்று செருப்பு, உடைவாளை வைப்பது, வில்-அம்பு ஆகியவற்றை வெளியே வைப்பது போன்றவையெல்லாம், ஒரு ஆண் வீட்டினுள்ளே இருக்கிறானென்றால், இன்னொரு ஆண் வரக்கூடாது என்பதற்கான குறியீடு அல்லது சமிக்ஞை ஆகும்.  இவை Polyandry Marriage (பாலியண்ட்ரி திருமணம்) –இன் நெறிமுறைகளாகும்.

மேலே கூறப்பட்டுள்ள அவசியம் Polygamy (ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் வழக்கம்)யில் கிடையாது. ஏனெனில் வீட்டினுள்ளே ஏற்கனவே ஒரு பெண் இருந்தால், அங்கே இன்னொரு பெண் உள்ளே நுழையத் தடையில்லை.  Polyandry –இல் இந்த விஷயங்கள் வந்துவிடுகின்றன. இத்தகைய முறையில் முக்கிய திருப்பம் என்னவென்றால்,”தாலிகட்டு கல்யாணம்இதைசம்பந்தம்என்று சொல்வார்கள். இந்த சம்பந்தத்துல மிகவும் வித்தியாசமாக, உலகில் எந்த ஒரு இனக்குழுக்களிலும் இல்லாத ஒரு விஷயமாக நாயர் சமூகத்தில் உண்டு. நான் ஏற்கனவே ஒருமுறை கூறியிருந்தேன். அதாவது ஒரு இனத்திற்கும் இன்னொரு இனத்திற்கும் என்ன பிரச்சினை என்றால், “நம்பிக்கைதான் பிரச்சினை.

இனம்என்பது மொழி, நிறம், ஜாதி போன்ற பல காரணங்களால் அமையலாம். ஒரே ஜாதிக்குள் பல இனங்கள் இருக்கும். ஆக, இனம் என்றால் ஒரு சமூகக்குழு. அவர்கள் (ஒவ்வொரு இனமும்) தாங்கள் இன்ன குழுவைச் சேர்ந்தவர்கள் என தங்களை கருதிக் கொள்கிறார்கள். இதுதான் அதில் பிரச்சினை. நாம் குறிப்பிட்ட இனமென்று கருதிக்கொள்வதில்கூட பிரச்சினையில்லை. அவர்கள் வேற்று இனம் என கருதுவதில்தான் பிரச்சினையே. இதில் மிகவும் ஆச்சரியமாக நாயர் இனத்துப் பெண்களின் முதல் கணவராக நம்பூதிரி ஆண்களே அமைகிறார்கள். இது எப்படி என்றால் திருமணம் செய்து கொள்வதில்லை. நாயர் பெண் வயதிற்கு வந்தவுடனே, அவர்களின் கணவனை நம்பூதிரி பிராமணர்களின் சமுதாயமே முடிவு செய்கிறது. ஆனால், இதற்கு பெரிய சடங்கு போன்ற நடைமுறைகளெல்லாம் கிடையாது. ஆனால், அந்த பெண் கருவுற்று குழந்தை பிறக்கப்போகிறது என்றால் அந்த குழந்தைக்கு நாயர் இன ஆண்மகன் கணவனாக வந்துவிடுகிறார். அதாவது Bio-logical Husband (உயிரியல் ரீதியிலான கணவர்) and Social Husband (சமூக ரீதியிலான கணவர்). இந்த முறையில்  Bio-logical Husband –ஆக நம்பூதிரி இருப்பார். Social Husband – ஆக நாயர் இனத்தவர் இருப்பார். இந்த முறை முதல் குழந்தைக்கு மட்டும். அதன் பிறகு இந்த நடைமுறை இருக்காது. இதை நாயர் சமுதாயம் ஒரு விஷயமாகவும், நம்பூதிரி சமுதாயம் ஒரு விஷயமாகவும் பார்க்கிறார்கள். நாயர் சமூகத்தில் இதை ஒரு exploitation (சுரண்டல் அல்லது தன்னலப்படுதல்) ஆக பார்க்கிறார்கள். இவ்வாறு எண்ணியதால்தான் பிற்காலத்தில் நாயர் சர்வீஸ் சொஸைட்டி (Nayar Service Society) என ஒரு குழு உருவானது.

நீதிக்கட்சி (Justice Party) யின் நிறுவனர் டி.எம். நாயர் அவர்கள் அதில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். அவரும், அவரைச் சார்ந்தோரும், அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று மேற்கூறப்பட்ட நடைமுறையை அதாவது exploitation என்பதை அறவே நீக்க வழிவகை செய்தனர். இதனால், இன்று நாயர் சமூகத்தில் பெரும்பாலானோர் Monogamy (ஒருவனுக்கு ஒருத்தி) என்னும் நடைமுறைக்கு வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஆனால், நாயர் சமூகம் exploitation என கருதிய விஷயம் [Bio-logical Husband (உயிரியல் ரீதியிலான கணவர்) and Social Husband (சமூக ரீதியிலான கணவர்)] இந்துமதம் காரணமல்ல. கிருஷ்ண பரமாத்மாவும் கூறவில்லை. வர்ணாசிரம தத்துவமும் கூறவில்லை. இப்படியெல்லாம் சொல்லித்தான் அதை உருவாக்கினார்கள் என்றும் குறிப்பிட முடியாது. ஆனால், இது ஏன் உருவானது? ஏன் இன்றைக்கு  நடைமுறையில் இல்லை? என்றெல்லாம் தெரியாது. ஆனால், இது எதார்த்தமான உண்மை. அது ஏன் உருவானது? என்பது குறித்து பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. அவையெல்லாம் வெறும் யூகங்களின் அடிப்படையில்தான் இருக்கும். (அது நமது கோட்பாடான SLG –இல் அறிவியல் (Science) பிரிவில் வராது. Logic மற்றும் Guts என்கிற பிரிவுகளில் வரலாம்.) 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த கேரளாவையே உலுக்கிய ஒரு விஷயம், இன்றைக்கு சீர்திருத்தப்படிருந்தாலும், இது ஏன் வந்தது?  எதற்கு வந்தது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தபோது வந்த முடிவுகள் இனிவரும் சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.

ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை Exploitation- க்கு (சுரண்டலுக்கு) ஆளாக்கி விடக்கூடாது. ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் பாதிப்பிற்கு ஆளானால்  Rival drive (போட்டி மனப்பான்மை) அதாவது Revenge (பழிவாங்கும் நோக்கம்) வந்துவிடும். அந்த பழிவாங்கும் மனப்பான்மை வரலாறு ரீதியாக கால்ம் காலமாக தொடரக்கூடும். அப்படியான ஒரு மனப்பான்மை தமிழகத்தில் உள்ள சில சமூகங்களில் உள்ளது. ஒவ்வொரு மூன்று சமுதாயத்திற்கும் அந்த பழிவாங்கும் எண்ணம் இருப்பதை பார்க்கிறேன். ”இவர்கள் அவர்களை சுரண்டுகிறார்கள்”. “அவர்கள் இவர்களை சுரண்டி விட்டார்கள்என்று ஒவ்வொரு சமுதாயமும் இன்னொரு சமுதாயத்தைப் பற்றி கூறுகிறார்கள். இதை நாம் ஆதாரத்துடன் வெளிப்படையாக பேசமுடியும். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. வாய்ப்பும் அதற்கான சூழலும் ஏற்படும் போது நிச்சயம் இது குறித்து பேசலாம். ஏனெனில் அத்தகைய பழிவாங்கும் மனப்பான்மை மிகவும் ஆபத்தானது. ஏன் அப்படி என்றால், நான் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதால், பழிவாங்கும் மனப்பான்மையால் நான் பாதிப்பிற்கு ஆளாகலாம். எனக்கும் வேற்று சமூகத்தைச் சேர்ந்த நபருக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனல், நான் தமிழன் என்பதாலும், அவர் வேறு மொழி சார்ந்தவராக இருப்பதாலும், வேற்று மத, இனம் சார்ந்தவராக இருப்பதாலேயும் என்மீது பழிவாங்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கலாம். அதற்கு நான் எப்படி பலிகடாவாக முடியும்? அந்த பழிவாங்கல் அதிக விலையுடையதாக இருக்கும். இந்த பழிவாங்கலை அவர்களின் Social Movement & Politics (சமுதாய இயக்கம்- அரசியல்) ஆகிய இரண்டு விஷயங்களால் மட்டுமே சீர்படுத்த முடியும்.  (இவை இரண்டிலுமே நான் பயணிப்பதால் நிச்சயம் ஒருநாள் பேசியே ஆக வேண்டிய அவசியம் வரலாம்)

ஆக, இந்த நாயர், நம்பூதிரி சம்பந்தமான விஷயங்கள் ஒரு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்று பல மாநிலங்களில் இருக்கக் கூடிய பல விஷயங்களை, பலவிதமான கலாச்சார விஷயங்களைப் பேசிவிட்டு, கடைசியாக தமிழக விஷயத்திற்குள் நுழைவோம்.  (ஏனெனில் தமிழ்நாட்டில் எதைத்தொட்டாலும் அரசியல் புகுந்துவிடுகிறது!) நாம் இதை இப்போது பேசுவதற்கான காரணம், பல்வேறு சமுதாயங்களில் நடந்த விஷயங்களைப் பார்க்கும்போது, நம் சமுதாயங்களுக்குள் இருக்கும் பல விஷயங்களை சீர் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சி செய்வதற்குதான். இந்த உலகத்தில் ஆணாகவோ, பெண்ணாகவோ, அவர்கள் எந்த வயதினராகவோ இருந்தாலும் அனைத்து மக்களும் நல்ல சுகமான அனுபவங்களுடன், மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

இதைத்தவிர வேறு விஷயங்கள் எதுவுமே கிடையாது. ஏனெனில் நாம் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போகப்போவதில்லை. வாழும் காலத்தில் நாம் எந்தளவு சுய உணர்வுடன் வாழ்கிறோம் என்பதே முக்கியம். நாம் சென்றபின், வேறு யாராவது நாம் சிந்தித்தவை, பேசியவை, செய்தவை, சாதித்தவை போன்ற நம் அனுபவங்களைப் பேசப்போகிறார்கள். அவையெல்லாம் அனுபவங்களன்றி வேறென்ன? உடல்ரீதியிலான விஷயங்கள் அனைத்துமே அவர்கள் நினைவிற்கு வரத்தான் போகின்றன.

 

No comments:

Post a Comment

15.கலாச்சாரம் என்றால் என்ன?

  கலாச்சாரம் என்றால் என்ன ? கலாச்சாரம் என்றால் என்ன ? அதை எப்படி வகைப்படுத்திப்பார்ப்பது ? என்றெல்லாம் மக்கள் கேட்கிறார்கள் . ஒரு ...