போதையால் சிறுமி படுகொலை செய்யப்படுவது தொடர்கிறதே?
21 ஆம் நூற்றாண்டில் நாம் விஞ்ஞனத்தில், மருத்துவத்தில் பெருமளவு முன்னேறி விட்டோம். நிலாவிற்கே சென்றுவிட்டோம். இவையெல்லாம் எவ்வளவு பெரிய சாதனைகள் என்று நாம் பெருமைப்படுகிறோமோ, அந்த பெருமைகளை எல்லாம் அசிங்கப்படுத்தக் கூடிய நிகழ்வாகத்தான் போதையின் விளைவால் ”ஆரத்தி” என்னும் சிறுமி பாலியல் பலாத்காரத்தில் சிக்கியதை நாம் பார்க்க வேண்டும். முன்பு டெல்லியில் “நிர்பயா” விஷயம் நிகழ்ந்தது. அதன் பிறகு பல சம்பவங்கள் நடந்தன. இப்போது இந்த சிறுமி “ஆரத்தி”. சமூகத்தின் வேகம் தலைவிரித்து ஓடிக்கொண்டிருக்கிறது. தொழில்துறை, தனிமனிதர்கள், சமூகம் இன்னும் சொல்லப்போனால் அரசாங்கமாக இருக்கட்டும். இப்போது எல்லோரும் எதிர்பார்ப்பது உடனடித்தீர்வு. ஆஸ்பத்திரியில் கூட பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர் கூட “எப்போது நான் வீட்டிற்குப் போகமுடியும்?” என்று தான். அதற்காக மருத்துவம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற விஷயங்களுக்கு உடனடித்தீர்வினை அளிக்கமுடியாது. அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதி ”இதற்கு நான் உடனடித்தீர்வைத் தருகிறேன்” என்றால், அவர்கள் பொய் சொல்வதாகத்தான் பொருள். ஏனென்றால், இதற்கு எப்படி உடனடியாக தீர்வைத் தரமுடியும்? நான் சமூகத்தையும் அரசாங்கத்தையும் பெரிதாக நம்புவதேயில்லை. ஆகவேதான் பெண்கள் சம்பந்தமாக நான் சொல்லும்போது ’அவன் சொல்கிறான். இவன் சொல்கிறான்” என்று எதையும் செய்யாதீர்கள். எல்லோரும் பேசுவதைப்பேசிவிட்டு அவரவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உங்களுக்கு வந்த சோகம் உங்கள் குடும்பத்திற்கானது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட இழப்பு உங்களுக்கானது. இப்போது பாதிக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தை. இதுவே ஒரு பெண்ணாக இருந்திருந்தால், “இந்த பெண் உடையை மிகவும் குறைவாக அணிந்துகொண்டு செல்வாள். பல பசங்களுடன் சுற்றுவாள்.” என்றெல்லாம் சொல்வார்கள். ஒருவேளை அப்படிச் சென்றபோது நடந்திருந்தால்கூட தவறு தவறுதான். இதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு என்ன செய்வது? யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை. இங்கே பாதிக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தை. அதற்கு நிகழ்ந்தது மிகவும் கொடூரம். அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு என்னவென்று அதற்கே தெரியாது. பக்கத்தில் உல்ள வீடுகளில் வசிப்பவர்கள்தானே என்று அறியாமையால் அந்த இரு கயவர்களிடம் சிக்கிவிட்டது. பொதுவாக மது அருந்துபவர்கள் ஒத்த வயதுடையவர்களாகத்தான் இருப்பர். 18 வயதுடைய ஒருவனும், 55 வயதுடைய பெரியவரும் சேர்ந்து மது அருந்துவது மிகவும் அபூர்வமான ஒன்று. Drug மிகவும் அபயாகரமானது. அதில் ஒரு சொட்டு இருந்தால்கூட நாட்டிற்கு நல்லதல்ல. பலரு சொல்வார்கள். “அவன் தணி அடிக்கிறான். நான் Drug அடிக்கிறேன்” என்பர். ஒன்று மோசம் என்றால் இன்னொன்று படுமோசம் ஆகும். Drug-ஐ பயன்படுத்துபவன் மோசம். அதை ஆதரிப்பவனும் மோசம். அதன் பின்னணி சார்ந்த அனைவரும் மோசமே. இதில் எந்தவித மாற்றுக்கருத்துகளுமில்லை.
மது அருந்துவது நிச்சயமாக தீயப்பழக்கம் தான். மேற்படியான கொடூர சம்பவங்களுக்கு அதிகமான காரணமாக அமைவதில்லை. அதில் கொஞ்சமாவது சுயநினைவு இருக்கும். ஆனால், ஒரு ஓரமாக நிச்சயம் சிறிது இருக்கலாம். “மனம்” என்பது மதம், தத்துவம் ஆகிய கண்ணோட்டங்களில் மனிதர்களுக்கு மூன்றுவித கோணங்களில் வேலைசெய்யும். முதலில் நல்லது; கெட்டது, வேண்டியது; வேண்டாதது என. காலையில் இராமன், மாலையில் இராவணன் என்றெல்லாம் சொல்வதுண்டு. நேரமும் காலமும் தவறாக இருக்கும்போது, சந்தர்ப்ப சூழலால் இது பலவீனமாக்க்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் மனித மனதின் சபலத்தன்மை என்கிறோம். ”நான் அனைத்தையும் கடந்தவன்” என தன்னைப்பற்றியே ஒருவர் கருதுகிறார் என்றால், அவர் தன்னைப்பற்றியே சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள். தனக்கு எவ்வளவு சபலம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அத்தகைய சூழலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம் ஆகும். சபலத்தையும் வக்கிரத்தையும் அதிகப்படுத்தக்கூடிய தன்மை மதுபானத்திற்கு உண்டு. மது அருந்தாமல் ஒருவன் இரவு நேரத்தில் செய்யக்கூடிய தவறை மது அருந்திவிட்டால் செய்துவிடுவான். இது மனிதமனம். இதைத்தாண்டிய ஒன்றுதான் Divine. அந்தநிலையில் வேறெந்த கூறுகளும் அவனை ஒன்றும் செய்யமுடியாது. இந்நிலையில் இருப்பவர்கள் அநேகமாக 1 சதவீதத்திற்கு ஈழே என்றே கூறமுடியும். ஆக தெய்வ மனதும் இல்லை. மனித மனதும் இல்லை. மிருகமனம் மட்டுமே எஞ்சுகிறது. சிலருக்கு மிருகமனமானது மது அருந்தினாலே வந்து விடுகிறது. வேறு சிலருக்கு தனிமையில் இருந்தால் மிருகமனம் வந்து விடுகிறது.
பெரும்பாலும் வட இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்துவந்த இத்தகைய சம்பவங்கள் இப்போது தமிழ்நாட்டிலும் பரவலாக வந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வட இந்தியாவில்
நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் அனைத்துமே கூட்டு பலாத்காரமாகத் தான் இருக்கும். காரணம்,
Inferiority Cmpolex. நான்குபேர் சேர்ந்து மது அருந்தியவுடனே ஒரு பெண் சிக்கிவிட்டால் அவ்வளவுதான். ”நிர்பயா” சம்பவத்தில் என்ன நடந்தது? இரவு நேரத்தில் பேருந்தில் ஏறினாள். அப்போது மது அருந்தியிருந்த நான்கு நபர்கள் சேர்ந்துதான் நிர்பயாவை பலாத்காரம் செய்தனர். கடந்த 20 ஆண்டுகால குற்ற வழக்குகளை எடுத்து நோக்குங்கள். அவற்றில் கூட்டு பலாத்காரமானது நிச்சயமாக இல்லை. ஆனால் இப்போது இங்கே நடக்கத் தொடங்கிவிட்டன.
மதுவைப் பொறுத்தவரையில் இரவில்தான் மிருகமாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். Drug –இன் பிரச்சினை என்னவென்றால், அதை எடுத்துக் கொள்வோர் பகல் 11 மணிக்கே மிருகமாக இருப்பார்கள். அந்த மாதிரியான சூழலில் அப்பாவிப்பெண்கள் அவர்களிடம் சிக்கும்போது, அதன் விளைவுகள் மிகவும் கொடூரமாக மாறிவிடுகிறது. அந்த பென்ணைப் பெற்றவர்களின் மனதில் ஏற்படும் ரணமானது இந்த பிறவி முழுவதும் ஆறாது. அவர்களுக்கு தரப்படும் இழப்பீடுகள் எதுவும் அவர்கலை கரைதேற்றாது. அந்த நபர்கலை தூக்கில் போட்டால்கூட அந்த ரணம் ஆறாது. இழப்பு இழப்புதான். ஆனால், அவர்களை தூக்கில் போட வேண்டிய கட்டாயம் அரசிற்கு இருக்கிறது. ஆனால்.. ”தெய்வம் நின்று கொல்லும்” என்பர். எனக்கு 47 வயதாகிறது. என்னுடைய அனுபவத்தில் கடவுள் இதுபோன்ற வழக்குகளில் காத்திருப்பதுபோல் தெரியவில்லை. அவர்கள் கதையை முடித்துவிடுகிறது. நிறைய விஷயங்களில் 30 ஆண்டுகள் காத்திருக்கும் கடவுள் இதுபோன்ற குற்றங்களை தண்டிக்காமல் விடுவதில்லை. கடவுள் என்பவர் இருக்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறது. அதுபோல் ஆரத்தி வழக்கிலும் நடக்கலாம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மது, Drug சார்ந்த குற்றங்களைப் பொறுத்தவரை பொதுவாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதில்லை. ஆனாலும் மெக்கானிஸம் என்கிற ஒன்று உள்ளது. எல்லா இடங்களிலும் ஒரு தவறான நபர் இருக்கக் கூடும். இவ்விஷயத்தில் ”தீயவனாகக்கூட இருக்கலாம். ஆனால், பௌமோசமாக இருக்காதே” என்பேன். கணக்கு வழக்கு இல்லாத அளவிற்கு, பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பணபலத்தை ஆயுதமாக பயன்படுத்துவத்துவதே Drug ற்கு அடிமையாக இருக்கக்கூடிய சிலர்தான். நான் இவ்வளவு தருகிறேன். நீ இன்னாரை கொன்றுவிட்டு வா”என்று கூறினால், எதைப்பற்றியும் சிந்திக்காமல் செய்யக்கூடிய அமைப்பு கஞ்சாவை உபயோகிப்பவனுக்கு இருக்கிறது. ஒரு பிரபலமான வழக்கு. கஞ்சாவை நுகர்ந்து, சுயநினைவே இல்லாமல் கொல்கிறான். அவனுக்கு ஒரு நோக்கத்தை (Motive) தந்துவிட்டால் போதும், அவன் செய்து முடிக்கிறான். தனிப்பட்ட முறையில் அந்த வழக்கு முடிந்துவிடுகிறது. அதை செய்யச்சொன்னவன் வெளியில் சுதந்திரமாக உலவுகிறான். கஞ்சாவினால் வருமானம் பெறுகிறார்கள். ஆனால், அந்த செல்வம் நிலைக்காது. கஞ்சாவைத்தொட்டவன் மட்டுமின்றி, அவன் குடும்பத்தைச்சார்ந்த எவருமே உருப்பட்டதில்லை. நிச்சயம் அழிந்துபோகிறார்கள். ஆனாலும் இதை ஏன் தொடர்கிறார்கள்? ”பணம்” என்பது வேறு. ”செல்வம்” என்பது வேறு. பணம் என்பது நிலையாமை. செல்வம் என்பது நிலைத்து நிற்கக்கூடியது. இதை நன்கு புரிந்துகொண்டாலும் தொடர்ந்து இப்படித்தான் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் இரும்புக்கரம் கொண்டுதான் அடக்க வேண்டும்.
E.D. எதற்காக தொடங்கப்பட்டது?
அரசாங்கத்தில் E.D யின் பங்களிப்பே இது போன்ற கடத்தல்காரர்களை ஒடுக்குவதுதான். CP, CCR, PC, Court, Proceeding போன்ற தனி மனித சட்டங்களால் இவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. அவன்தான் மனிதனாகவே இல்லையே.. அப்படிப்பட்டவனை கட்டுப்படுத்தவே Drugodian
Provision-ஐ கொண்டுவந்தார்கள். Traffickers (கடத்தல்காரர்கள்), woman
Traffickers (பெண்களைக் கடத்துவோர்), Child Traffickers (குழந்தைகளைக் கடத்துவோர்) போன்றோரை தண்டிக்க கொண்டுவரப்பட்டது தான் E.D. ஆனால், எதற்காக தொடங்கப்பட்டதோ அதைவிட்டுவிட்டு, இன்று வர்த்தகம், சிவில் குற்றங்களைச் செய்வோரை சுற்றி சுற்றி வருகிறது! உண்மையில் தீவிரவாதிகளுக்கும், போதைப்பொருட்களை கடத்துவோருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. அந்த இரு குழுக்களுக்குமே பணம் ஒரே வழியில்தான் வருகிறது. தீவிரவாதத்திற்கான பணமே போதைப்பொருள் கடத்துவதன் மூலமாகவே வருகிறது. இவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட E.D, C.B.I, N.I.A போன்ற அமைப்புகள் அனைத்துமே போதைப்பொருள் கடத்துவோரை சிவில் வழக்கு போன்று அணுகுவதே தவறு. நிச்சயமாக தீவிரவாத குற்றம், கடத்தல் குற்றம் ஆகியவற்றில் நிதி சம்பந்தப்பட்டுதான் இருக்கிறது. ஆகவே அவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படவேண்டும். Drug –ற்கு அடிமையாகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை மீட்டெடுப்பது மிகவும் கடினம். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, அவர்கள் அதுவரை பயன்படுத்திய அளவீட்டிலிருந்து, சிறிது சிறிதாக குறைக்கும் முறையைப் பின்பற்றி, சுமார் ஆறுமாதகாலம் வரை பெருமுயற்சிக்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். நான் இந்த அரசியலில் இருப்பதற்கு காரணமே கஞ்சாதான். நான் + 2 படித்தபோது, அன்றைக்கு இருந்த அரசாங்கம் அரசியல்வாதியான என் தந்தையின்மீது கஞ்சா வழக்கு ஒன்றை போலியாக பதிவு செய்தனர். எதற்கு அப்படிச்செய்தனர் என்றால், என் தந்தைக்கும் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் எம்.எல்.ஏவிற்கும் இடையே ஒரு தகராறு. ஒருநள் இரவு நான் வீட்டிலிருக்கும்போது, இரண்டு மூன்று போலீஸ் உயரதிகாரிகள் வந்து என் தந்தையை அழைத்துச் செல்கின்றனர். மறுநாள் காலையில் தினத்தந்தி நாளிதழில் ”கஞ்சா வழக்கில் கைது” என என் தந்தையின் புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால், என் தந்தை தேநீர்கூட அருந்தமாட்டார். என் தந்தை அரசியல் ரீதியாக மாறுப்பட்ட கருத்துடன் இருந்திருக்கலாம். அவர் அணுகுமுறை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதை அணுக வேண்டிய விதத்தில் அணுகாமல், போலியாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யும்போது, உண்மையிலேயே கஞ்சா விற்பவனும், குற்றமே செய்யாத என் தந்தையும் சமமாக அல்லவா கருதப்பட்டார்கள். உண்மையில் கஞ்சா விற்பவன எப்படி என்கவுண்டர் செய்யமுடியும்? இவ்வாறு செய்வதால் உண்மையிலேயே கஞ்சா விற்பவன் “நான் என் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால், இந்த வழக்கு போட்டு என்னை அரசியல் ரீதியாக பழிவாங்குகிறார்கள்” என்று கூறுகிறான். விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றும் ஒரு பெண்மணி. மதுரையைச் சேர்ந்தவர். அவர்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் கஞ்சா வழக்கு பதிவு செய்தார்கள். ”செரீனா கஞ்சா விற்கிறார்” என நிரூபிக்க வழக்கு நடத்தினால் என்னாவகும்? உண்மையிலேயே கஞ்சா விற்கும் இன்னொரு பெண் என் மீது அரசியல்ரீதியாக பழிவாங்குகிறார்கள் என்றுதானே சொல்வாள்? The application of section- ஐ இவ்வளவு கேவலமாக dilute செய்துவிட்டனர்?! அவர்களுக்கு வேறு செக்ஷனே இல்லை பழிபோட்டு தண்டிப்பதற்கு! ஏனெனில் இந்த வழக்கிற்கு பெயில் கிடையாது. 10 நாட்கள் ஜெயிலுக்குப் போய்விட்டு வரவேண்டும் என்பதற்காக கஞ்சாவை மையமாகக் கொண்டு, பொய்வழக்கு போட்டால், உண்மையான கஞ்சா குற்றவாளியை என்றைக்கும் பிடிக்க முடியாது. இதுபோன்ற நிலை நீடித்தால் “ஆரத்தி”என்னும் குழந்தைக்கு நடந்தது போன்று மேலும் தொடரும். ஆனால், தண்டனை கொடுக்கும் விஷயத்தில் கடவுள் காத்திருப்பதில்லை. என் அப்பாவின் மீது கஞ்சா வழக்கினை போலியாக பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு விபத்தில் மாண்டு போனார். ஒரு குடும்பத்திற்கு களங்கத்தைக் கொடுக்கிறீர்கள் அல்லவா? இதற்கெல்லாம் கடவுள் மன்னிப்புக் கொடுப்பதில்லை. ஆனாலும், இதுபோன்ற கிறுக்கர்கள் “அவர்கள் சொன்னார், இவர் சொன்னார்” என்று இதுபோன்று செயல்படுகிறார்கள். போலீஸில் SSB என்கிற அலுவலகம் இருக்கின்றது. அவர்கள் கஞ்சா பொட்டலங்களை ஆங்காங்கு வைத்திருக்கிறார்கள். யார் மீதாவது அபாண்டமாக பழிபோட வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தின் மூலமாக “வைக்க வேண்டிய இடத்தில் வைத்து பின்பு அதை கண்டுபிடித்து எடுப்பதுபோல எடுத்து” பலர் மீது பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள். அப்படியானால் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதானே? அதே கஞ்சாவை திருப்பிக்கொடுத்து பணம் பெற்றுக்கொள்கிறீர்கள். அவன் உயிரோடு இருப்பதால்தானே நீங்கள் பணம் பெறுகிறீர்கள். இதுதான் இந்த மிஷனில் உள்ள கோளாறு. இப்போது ஆரத்தி என்கிற குழந்தை இறந்துவிட்டதால், நமக்கு கஞ்சாவின் மீது கோபம் வருகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஆட்கள் மேல் அல்ல. சமூக ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். இங்கே இந்து மதத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை நவீனப்படுத்துகிறோம் என்றும், அவையெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறி உடைக்கிறார்கள். மார்டன் என்கிற பெயரால் இங்கே இருக்கும் பெண்கள் யாவரும் அமெரிக்கப்பெண்களைப்போல மாறிவிடுவார்களா? அங்கே (அமெரிக்காவில்) 5 விவாகரத்துகளை செய்துவிட்டும்கூட, சந்தோஷமாக அலுவலகம் சென்று கொண்டிருப்பாள். இங்கே ஒரு விவாகரத்து செய்துவிட்டு, மன அழுத்தம் மேலிடுவதால் 1 ½ மாதம் படுத்துவிடுகிறாள். ஆக, சமூகத்தை எதை நோக்கி வழிநடத்திச் செல்கிறீர்கள்? இந்துமதம் என்ராலே பிராமணர்கள், அவர்கள் மீதான துவேஷம் என்று கொண்டுபோய் விடுகிறார்கள். அப்படியானால், சமூகம் எதை நோக்கி போகப்போகிறது? ஒருபுறம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமாக வரும் வாழ்வியல் தேவையில்லை என்கிறார்கள். இன்னொருபுறம் அவர்கள் நினைப்பதுபோல் முழுமார்டனாகவும் முடியாது. எல்லா பெண்களும் இஷ்டத்திற்கு டூபீஸ் உடைஉடுத்திக்கொண்டு, பீச்சில் படுத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல் இந்திய பெண்களும் படுக்க வேண்டுமா? அது முடியுமா? இங்கிருக்கும் நடிகைகள் கூட அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோதான் படுத்துவிட்டு திரும்புகிறார்கள். இங்கேயே பிறந்து, வளர்ந்த ஒரு இந்தியப்பெண்ணால் நிச்சயமாக, கலாச்சார ரீதியில் அவ்வாறு மாற முடியாது. சிதைக்காமல் இருக்கலாமே.. விஞ்ஞான ரீதியாகவாவது செய்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று முழுவதுமாக புறம் தள்ளுகிறார்கள். இன்று ஆண்களுக்கு வக்கிரம் அதிகம். பெண்களுக்கு எந்த காலத்திலும் பிரச்சினையில்லை. கடந்த 2000 ஆண்டுகளில் பெண்கள் எத்தனைபேர் சாமியாராக மாறியிருக்கிறார்கள்? ஆண்களுக்கு சரி செய்ய வேண்டிய அவசியங்கள் நிறைய உள்ளன. பெண்களுக்கு அப்படி அல்ல. பெண்களுக்கு வயிற்றுப்பசி மட்டும்தான். ஆனால், ஆண்களுக்கு காமம் என்கிற ஒன்றும் சேர்ந்திருக்கிறது. அது சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குரைவாகவும் இருக்கலாம். சமூகம் அதை சரியாக கையாளவில்லையென்றால், வக்கிரமாகி விடுகிறான். அவன் வக்கிரத்திற்கு இன்னொருவன் துணையாக வருகிறான். போதைப்பொருள் துணை வருகிறது. இன்று இருக்கும் ஏழ்மை நிலையில் ஒரு பெண் இருக்கிறாள். எத்தனை பிரச்சினை? யாரை குறை சொல்வீர்கள்? போதைப்பொருளை அனுமதிக்கும் மிஷனரிகளையா? வக்கிரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் சமூகத்தையா? பொய் வழக்கு பதிந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தையா? இவ்விஷயத்தில் மூன்று குழுக்களுமே குற்றவாளிகள்தான். கோவிலில் ஒவ்வொரு நாளும் கடவுளின் கண்களையும், நமது கண்களையும் இணைத்துப்பார்க்கக்கூடிய ஒளியாக ஆரத்தி காட்டும்போது, நமக்கு “ஆரத்தி”என்கிற சிறுமி நம் கண்முன் வரவேண்டும். (ஆனால். நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறோம்) அந்த உணர்வு நமக்கு வர வேண்டும். ஒரு இயக்கமாக வளர வேண்டும். நான் மேற்கூறிய மூன்று அமைப்புகளும் செய்யவில்லையென்றால், இதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். தேவைப்பட்டால் பின்னாளில் நானே இவ்விஷயத்தினை கையில் எடுப்பேன். அரசியலில் பிரச்சினைகள் இருக்கின்றன. நானு அரசியலில் இரண்டு ஆண்டுகள் இருந்த்தினால் சொல்கிறேன். தொலைக்காட்சிகளுக்கு தினந்தோறும் டிஆர்பி முக்கியமோ, அரசியலுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை முக்கியம். ஐடியாலஜி முக்கியம். இவ்விஷயத்தில் யாரெல்லாம் பேசினார்கள்? யாரெல்லாம் பேசவில்லை? புதுச்சேரியில் ஆட்சிக்கு எதிரானவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆட்சிக்கு ஆதரவாக இருப்பவர்கள் பேசுவதில்லை. எவ்வளவு பெரிய அவலட்சமான அரசியல்? நான் அவர்களை மட்டும் குறைகூறவில்லை. இங்கேயும் அப்படித்தான். ஒரு இந்து கோவில்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு விதமாக அணுகும்போக்கு நிலவுகிறது. எல்லோரையும் ஏன் ஒன்றாக அணுகமுடியவில்லை? நான் கூறிய மூன்று அமைப்புகளும் ஒன்று சேரவில்லை என்ரால். தீர்வு கிட்டாது. இதற்கெல்லாம் குறுகிய காலத்தில் தீர்வு கிடைப்பதற்கு சாத்தியமேயில்லை. இன்னும் எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்படலாம். அந்த ரணத்திற்கு அவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லத்தான் போகிறார்கள். நானும் பதில் சொல்லத்தான் போகிறேன். அமெரிகாவில் கூட இந்தியப்பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மீடியாக்கள் எடுப்பதை தவிர்க்கிறார்கள் என்று ஒரு நண்பர் மூலமாக அறிந்தேன். அமெரிக்க பெண்கள் என்றால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், இந்தியப்பெண்கள் அடுத்த நாட்டுக்காரர்கள்தான். க்ரீன் கார்டு கொடுத்திருந்தாலும், அவர்களை ஒரு அகதிபோல் மனதில் கொண்டிருந்தால் என்ன செய்வது? அந்த மாதிரி சம்பவங்களின்போது, அவர்களை அமெரிக்கப் பெண்கள் என்று கூறுவதில்லை. இந்தியப்பெண்கள் என்றுதானே கூறுகிறார்கள். சரி.. அங்கேதான் அப்படியா? இங்கே என்ன நடக்கிறது? பெண்களுக்கான பிரச்சினையை பாதிக்கப்பட்ட பெண் என்கிற கோணத்தில் அணுக வேண்டும். அதிலும் பெண் குழந்தை. எப்படிப்பட்ட பெருமைக்குரியது நமது இந்து சமூகம்! வெள்ளலூர் என்கிற ஊரில், பூப்படைவதற்கும் முன் உள்ள சிறுமிகளை “சப்த கன்னியர்களாக” பாவித்து, அவர்களுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக வழிபட்டு, போற்றுகிறது இந்து சமூகம்! சப்த கன்னியர்கள் எல்லோருமே இதுபோன்ற விஷயங்களை எதிர்த்துப்போராடி இறந்துபோனவர்கள்தான். ஒன்றை மட்டும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் ஆண்கள் இவ்விஷயத்தில் தோற்கிறார்களோ.. அப்பொழுதெல்லாம் ஒரு பத்ரகாளியாக அவதாரமெடுக்கிறாள். ஆண் கடவுளர்களின் அவதாரத்தையும், பெண் கடவுளர்களின் அவதாரத்தையும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும். ஆண் கடவுளரைப் பொறுத்தவரையில் ஒருவன் அளவிற்கு அதிகமாக தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் ஆண் கடவுளர் அவனை அழித்தொழிப்பர். பெண் கடவுளர்களில் பத்ரகாளி, கன்னியாகுமரி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் இவர்களின் கதைகளைப் பார்த்தீர்கள் என்றால், யாராவது ஆண்கள் தவறு செய்துகொண்டேயிருப்பார்கள். ஒரு கட்டத்தில், அந்த பெண் கடவுளர்கள் ஆவேசத்துடன் எழுவார்கள். பொதுவாக அந்நிலையில் எல்லா பெண்கடவுளர்களின் முகங்களும் ஆக்ரோஷத்துடன், மிகவும் கோரமாக காணப்படும். அதாவது எந்த ஆணும் இதைக்கேட்கவில்லை. அதனால் நான் தான் செய்துமுடிக்க வேண்டும். அதை கோபத்துடன்தான் செய்து முடிக்க வேண்டும் என்று கருதுவதாக பொருள் கொள்ள வேண்டும். ஆகவே, அந்த தவறு செய்யும் ஆணை விட அதிக வல்லமை பொருந்தியதாக பெண் தெய்வம் களத்தில் இறங்கி கதையை முடிக்கிறது. இதையும் இந்த சமுதாயம் எதிர்கொள்ளப்போகிறது என்றால் அதற்கு என்ன செய்ய முடியும்? ஆனால்.. அதற்கு முன்பாகவே நாம், நமது கடமையாக எண்ணி செய்ய முனைவோம். இப்போது நியூஸ், ஹேஸ்ட்டேக், வீடியோ போன்றவற்றைதான் போட முடியும். சர்வீஸில் இருந்தால் என்கவுண்டர்கூட செய்திருக்கலாம். ஆக, போதைப்பொருட்கள் குழுவிற்கும், சமூகத்திற்கும் , அரசாங்கத்திற்கும் ஒரு நல்ல உணர்வு வரவேண்டும். மீண்டும் மீண்டும் பெண்குழந்தைகளுக்கு சொல்வது என்னவென்றால், Bad Touch, Good Touch ஆகியவற்றையும், குடும்பப்பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் வீடுகளின் கதவுகள் திறந்த வண்ணமே உள்ளன. நான் உட்பட பலரும் வீதிகளில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள்தான். நகர்புறங்களில் எந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் கதவுகள் திறந்திருப்பதே இல்லை. அவ்வீடுகளின் குழந்தைகள் கிரவுண்ட் ஃப்ளோருக்குக்கூட வருவதேயில்லை. ஏன் அப்படி? பாதுகாப்பு இல்லை. அந்த குடும்பத்தினர் எவ்வளவு பெரிய குடும்பப்பின்னணி உள்ளவர்களாக இருந்தால் என்ன? ஒரு சம்பவம் நடந்துவிட்டால், நடந்ததுதானே? கிராமங்களைப் பொறுத்தவரை மாலை 6 மணி வரையிலும் ஆண் குழந்தைகளையும் தேட மாட்டார்கள். பெண் குழந்தைகளையும் தேட மாட்டார்கள். கிராமங்களில் ஒருவர் ஒரு குழந்தையை அழத்துச்செல்வதைப்பார்த்தாலே, குறைந்தபட்சம் யார்? என்ன விஷயம்? என்று கேட்பார்கள். நகரங்களில் அப்படி இல்லை. ஆகவே, பெண் குழந்தைகளும், அவர்களைப் பெற்றவர்களுமே முன் ஜாக்கிரதையாக இருந்தாக வேண்டும். ஒவ்வொரு நிகழ்விற்கும் அரசாங்கத்தையோ, சமூகத்தையோ குறைசொல்வதால் ஒருபயனுமில்லை. ஆனால்.. கடவுள் நிச்சயம் இருக்கிறார். ஒரு பத்ரகாளி அவதாரத்தை எதிர்பார்க்கலாம்.
--------------------------------
No comments:
Post a Comment