வாழ்க்கையின் நோக்கம் என்ன ?
The meaning of settled life
நகர்புறங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு வார்த்தை
“settled (செட்டில்ட்)”. பயங்கரமா செட்டில்டு, ஃபுல் லைஃப் செட்டில்டு, ஒன் டைம் செட்டில்டுங்க என அடிக்கடி பேசப்படுவதுண்டு.
இந்த வார்த்தைப்பிரயோகம்
எப்போது தோன்றியது என்றால், நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கேம்பஸ் இண்டர்வியூ வரும். அந்த இண்டர்வியூவில் யாராவது வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த நபரைப்பற்றி பேசும்போது, “அவன் செட்டிலாயிட்டாம்பா” என்பர். அதாவது, வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படாதவர்கள் செட்டிலாகவில்லை என்கிற பொருளும் அதற்குள் மறைந்து நிற்கும்.
செட்டிலானதாக கருதப்படுபவன் அடுத்த ஓராண்டில் வேறு கம்பெனியில் வேலைக்குச் சென்றுவிடுவதுண்டு. டாடா குழும்ம், கோத்ரெஜ் போன்ற நிறுவனங்களின் வேலையை உதறிவிட்டு வேறு நிறுவனங்களுக்குச்
செல்ல வேண்டிய சூழ்நிலை வந்துவிடுவதுண்டு.
ஆக, வேலைக்கென சென்றபிறகு “செட்டில்டு” என்றால் கல்யாணம் செய்துகொண்டுவிடுவது, குழந்தை பிறந்துவிடுவது என்றாகிவிடுகிறது.
உண்மையிலேயே செட்டில்டா? இல்லையா? என சம்பந்தப்பட்டவரிடம்தான் கேட்க வேண்டும்!
அடுத்த நிலையில் என்ன பேசத்தொடங்குகிறார்கள்?
வீடு வாங்கிவிட்டான் அல்லது ஒரு வீட்டை வாங்கிவிட்டான். பிள்ளைகள் டிகிரி படிப்பு முடித்துவிட்டனர். அதனால் அவர் சுதந்திரமாகி விட்டார். ஆக, கல்லூரி வாழ்வின் இறுதியில் கிடைக்கும் வேலைவாய்ப்பில் (Placement) ஆரம்பித்த “செட்டில்ட்” என்கிற வார்த்தையில் தொடங்கி அவரின் அடுத்த தலைமுறைக்கு வேலைவாய்ப்பு கிட்டி, ஒரு தந்தையாக சுதந்திரத்தை சுவாசிப்பதுவரைக்கும் சென்று விடுகிறது. இந்த ”செட்டில்ட்” என்பது, ”இன்னும் வாழ்வில் செட்டிலாகவில்லையே” என்று கருதுவோருக்கு ”அவன் செட்டிலாயிட்டான்.. ஆனா.. நான் செட்டிலாகவில்லை”
என்கிற ஒரு அழுத்தம் தருகிறது. உண்மையில், வாழ்வில் யாருமே, எப்பொழுதுமே செட்டிலாவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான பயணம். அவரவர் வாழ்வில் அந்தந்த நிலைகளில், தங்களின் முந்தையநிலையை விட உயர்வு (Upgrade) பெறுகிறார்கள்.
அவரவரின் வாழ்வியல் கடமைகளைச் செய்துமுடிக்கிறார்கள். இன்னொருவர் தனது வேலையை(கடமையை) வேகமாகச் செய்துவிடுவதால், நாமும் அப்படியே செய்துவிட வேண்டுமென்கிற அவசியமில்லை. இன்றைய தலைமுறையின் அணுகுமுறையைப் பார்த்தால், அவர்கள் இவ்விஷயத்தில் தங்களைத் தாங்களே அதிகம் குழப்பிக்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ”வேலை வாங்கிட்டுதாங்க
கல்யாணம்” என்று தீர்க்கமாக இருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் ”குழந்தை பருவத்திருமணம் கூடாது” என அரசாங்கம் வலியுறுத்தின் திருமணத்தை தள்ளிப்போட்டதெல்லாம் கடந்து… 21, 22 வயதில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமணங்கள் இன்று எந்த ஒரு வற்புறுத்தலோ,
சட்டத்தின் கட்டுப்பாடோ இன்றி, 32,33,35 வயதையும் தாண்டிச் செல்கின்றன. உண்மையில் எனக்கு இதுபற்றி ஒன்றும் புரியவில்லை. இளம் பருவவயதில் உள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மெல்லிய பரவச உணர்வானது, 27 வயதிற்கு மேற்பட்டு அவர்களுக்கு இருக்குமா? என்று தெரியவில்லை. இதைப்பற்றி மருத்துவர்களே விளக்கம் தரவேண்டும். 30, 32 வயதில் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த அணுக்கும் பென்ணுக்கும் என்ன மாதிரியான பிணைப்பு (Bond) இருக்கும் என்று நினைத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இதுமட்டுமின்றி
30 வயதிற்கும் மேற்பட்டு திருமணம் செய்துகொள்ளும்போது
அவர்களுக்கு குழந்தைப்பேறு தாமதமாகிறது. அதுமட்டுமின்றி அதற்கான வாய்ப்பே குறைந்துவிடுகிறது என்கிறார்கள்.
ஆக, தம்பதிக்கிடையில்
பிணைப்பு குறைந்துவிடுகிறது, குழந்தைப்பேறு கேள்விக் குறியாகிறது. அதுமட்டுமின்றி, ஒருவேளை 35 வயதில் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு 25 வயதாகும்போது,
பெற்றோருக்கு 60 வயதாகிவிடும்.
அப்போது தங்கள் பேரக்குழந்தையைத் தூக்கிச் செல்லக்கூட முடியாது. அந்த 25 ஆண்டுகளில் இவர்கள் ஓய்வுபெற்று விடுவர். அதுவரையிலும் அவர்கள் மகனுக்கு வேலைக்கு போகாமல் இருந்து விட்டால், அது சம்பந்தமாக உண்டாகும் அழுத்தம் மிகவும் பெரியதாகிவிடும்.
எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். அவருக்கு 19 வயதில் திருமணமானது. தனது உழைப்பினால் ஐ.ஆர்.எஸ் பணிக்கு வந்து விட்டார். அவருக்கு 45 வயது ஆன போது, அவர் மகனுக்கு 25 வயது ஆனது. அவனுக்கு திருமணம் செய்வித்து அவனை செட்டில் செய்துவிட்டார்.
அதற்குப்பிறகும் என் நண்பருக்கு மேலும் 15 ஆண்டுகள் இருந்தன. வருமானம் தொடர்ந்தது. ஒருவேளை தன் மகனுக்கே ஏதேனும் பிரச்சினை என்றால் அதை எதிர்கொள்ளக்கூடிய
நிலையில் இருந்தார். அதுவே தனக்கு 60 வயதாகும் நிலையில் தன் மகனுக்கு திருமணம் செய்வித்தால்,
எப்படி தன் மகனின் பிரச்சினையைத் தீர்க்க துணை செய்ய முடியும்? அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்களுக்கு அபோர்ட் செய்ய நகர வாழ்வியலில் இன்றைக்கு ஆட்களே இல்லை. காரணம், அவரவர்களுக்கு ஆயிரமாயிரம் சவால்கள் இருக்கின்றன. கிராமப்புறங்களைப்
போல, இங்கே மற்றவர் பிரச்சினைகளை தூக்கிச் சுமக்க ஒருவரும் இல்லை. ஆக, செட்டில்ட் என்பதில் சில குழப்பங்கள் இருக்கின்றன. அதனால், இதனை மனதில் போட்டு இளைஞர்கள் மேலும் குழம்பிவிடக் கூடாது. அந்தந்த வயதில் நடக்க வேண்டியவை அந்தந்த வயதில் நடந்துவிட வேண்டும். குறைந்த சம்பளத்தில் வேலை கிடைத்தாலும்கூட,
அதை ஏற்றுக்கொண்டு,
திருமணமும் செய்துகொள்ளவேண்டும். இதனை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது ஆண்களுக்கு மட்டு அல்ல. பெண்களுக்கும் பொருந்தும். 20 வயது பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தை நல்ல திட காத்திரமாகவும், 33 வயது பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தை சற்று ஆரோக்கியத்தில் சற்று குறைபாடாகவும் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தனக்கு வயது அதிகமான பின் ஒரு பெண்ணால் பிரசவிக்கப்படும்
குழந்தையானது, எதிர்கால சமுதாயத்திற்கே குறைபாடாகும்.
ஏனெனில் அரசாங்கத்திற்கு
இதில் ஏதும் பங்களிப்பு இருக்கமுடியாது.
இது சம்பந்தமான விஷயங்களை அந்தந்த சமுதாயங்களும், சமுதாயக் கூட்டமைப்புகளுமே முன்னெடுக்க வேண்டும். இறுதியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்,
செட்டில்ட் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அது ஒருநாள் தானாக செட்டிலாகும்.
----------------------------------------------------------
No comments:
Post a Comment