Friday, June 12, 2026

10. Rejecting Valentine's Day In India: Freedom or Folly?

 

 

10 . Rejecting Valentine's Day In India

           :Freedom or Folly?

பிப்ரவரி 14. உலக காதலர்கள் தினம். இது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், அதில் அரசியல் எப்படி உள்நுழைகிறது என்று பார்த்தோமானால், இந்து மதத்தில்காதல் இல்லை. அதனால் காதலர் தினத்தை கொண்டாடக்கூடாது. நாம் கற்பு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று காதலர்களுக்கு எதிரான விஷயங்களைச் சொல்கிறார்கள்என வட இந்தியாவிலிருந்து அடிக்கடி செய்திகள் வருவதைப் பார்த்திருக்கிறோம்.

தமிழகத்தில் சுப.வீரபாண்டியன் போன்றோர் ஒரு சில வீடியோக்களை பதிவிடுகிறார்கள். அதில், “உலகம் முழுக்க காதலர் தினத்தை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்திய சமூகம் மட்டும் கொண்டாடுவதில்லைஎன்று சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். ஏன் இந்திய சமூகம் கொண்டாடுவதில்லை? என்றால், அதற்கான முக்கிய காரணம் ஜாதி. ஏனென்றால் ஜாதி என்பது ஒரு செயற்கைஎன்று கொண்டு செல்கிறார். ஏன் இந்த இயற்கை, செயற்கை என்றெல்லாம் வருகிறது? என்று பார்க்க வேண்டும்.

முதலில் இந்து மதத்தில், இந்து கலாச்சாரத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியதுகாதல்என்பது ஒரு தவறா விஷயமல்ல. இது ஏற்கனவே பெரும்பாலும் ஒத்துக்கொள்ளப்பட்ட விஷயம்தான். கிருஷ்ணரின்ராதாஎனும் கதாபாத்திரமே காதல் சம்பந்தமானதுதான். இன்றைய சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் காதல் குறித்து செய்யும் விஷயங்களை 3000, 4000 ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழ்க்கடவுள் முருகன்வள்ளி காதல் புராணமாக வந்துவிட்டது. விநாயகரை யானையாக வரவழைத்து அதன் மூலம் வள்ளியை பயமுறுத்தி, பின் திருமணம் செய்துகொள்கிற அமைப்பு அது. ஏன் அத்தகைய திருமணம்? என்பதற்கு அவதாரத்தில் வேறு காரணங்கள் வரும். ஆக, இந்திய சமுதாயமோ, தமிழர் வாழ்வியலோ ஒருபோதும் காதலுக்கு எதிரானது அல்ல.

சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கீழ்க்காணும் வகையில் ஒரு காட்சி அமைப்பு உண்டு. அதில் ஒரு தலைவன் - தலைவி. தலைவி தன் வீட்டில் இல்லை. அவளின் தாய், தலைவி (அவள் மகள்) காணாமல் போகவே, அவள் தன் வீட்டை விட்டு வெளியேறி காதலனைச் சென்று சேர்ந்து விட்டாளோ.. என சந்தேகமடைகிறாள். அதனால், அவள் சென்ற பாதையின் வழியாக தேடிச்செல்கிறாள். அந்த ஊரின் வெளிப்புறத்தின் (எல்லையில்) ஒரு ஆலமரம் இருக்கிறது. அங்கே சென்று அந்த மரத்தடியில் நிற்கும்போது, அடுத்த கிராமத்திலிருந்து திருமண நிகழ்விற்கான மேளச்சத்தம் கேட்கிறது. அதைக்கேட்ட அந்த தாய், “என் மகள் திருமணம் செய்துகொண்டு விட்டாள்என்று முடிவிற்கு வருகிறாள். முதல்நாள் இரவோ அல்லது திருமணநாளின் அதிகாலையிலோ தலைவி தன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள். அருகில் உள்ள கிராமத்தைச்சேர்ந்த மக்கள் அவளை வரவேற்று, ஆதரித்து, அவளின் தலைவனுடன் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அந்த சத்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே, அந்த தாய் தான் வந்த வழியே திரும்பி விடுகிறாள். நடைபெற்ற நிகழ்ச்சியை இப்படித்தான் அந்த பாடலின் காட்சி விவரிக்கிறது.

சரி.. அருகில் உள்ள கிராமத்திலேயே ஏன் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டும்? சங்க இலக்கியத்தில் அகநானூறு, புறநானூறு ஆகிய இரண்டில் அகநானூறு முழுமையுமே காதலைத்தானே விவரிக்கிறது?! அன்றைய காலகட்டத்தில் காதலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்திருக்கின்றன. இன்றுபோல் அன்றைய கால கட்டத்தில் ஜாதிகளே கிடையாதுஇன்றைக்கு நிலவும் ஜாதிய அமைப்புகள் எல்லாம் இடைப்பட்ட காலத்தில் தோன்றியவையே. இவையும் பின்னாளில் போகலாம். புதுவகையான சமூக கட்டமைப்பு மலரலாம். இது நிரந்தரமானது அல்ல. ஆனால், இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்பது போன்றும், அதை வைத்துக்கொண்டு அடக்குமுறை செய்வதாகவும் ஒரு தவறான பிம்பத்தைக் காட்டுகிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.

உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள மனித சமூகத்தில் தனித்தனி குரூப்பாகத்தான் (குழுவாக) வாழ்ந்திருக்கின்றனர். ஒரு குழு இன்னொரு குழு மீது அடக்குமுறையை கையாண்டிருக்கின்றன. அவையெல்லாம், அரசாங்கம், சர்ச், மதம், சமுதாயம், பொருளாதாரம்என பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நடந்திருக்கின்றன என்பதெல்லாம் வரலாற்றில் பரவியிருக்கின்றன. இது இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டும் காணப்படும் விஷயமல்ல. (அந்த வேறுபாடுகளைக் களையவேண்டியது நம் கடமையே.) ஆனாலும், தற்காலத்தில் திராவிட இயக்கம் (திராவிடர் கழகம்) சார்ந்த சுப.வீரபாண்டியன் போன்றோர் ஏன் அப்படி ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள் எனில், காதலை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியும் என்று நம்புகிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை, பல்வேறு இடங்களில் மக்களுடன் பேசியதையும், காணொலியாக பதிவு செய்ததையையே மீண்டும் இங்கே பதிவிடுகிறேன். அதாவது, காதலால் மட்டும் ஜாதியை ஒழித்துவிட முடியாது. அத்தகைய நம்பிக்கையை ஒரு இளைஞனுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கு கொடுக்கும்போது, ”ஜாதியை ஒழிக்கணும்.. அதற்காக நான் காதலிக்கிறேன்என்ற போக்கில் ஜாதியை ஒழிப்பதற்காக மட்டுமே காதலிக்கத் தொடங்குவதே பிரச்சினையாகிறது என்று சொல்கிறேன்

ஒவ்வொரு இளைஞர், இளைஞியருக்கும் ஒரு ideology (சிந்தனை) வரக்கூடியது மிகவும் இயல்பான ஒன்று. அதில் அரசியலை உள் நுழைத்தால், அது ஆணவக்காதலாக மாறுகிறது. இதெல்லாம் அவர்கள் வேலை கிடையாது. ஒரு பெண்ணும் பையனும் தங்களுக்குள் பிடித்துப்போய்விட்டால், காதலித்து , கல்யாணம் செய்துகொண்டு, அவர்கள் தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள வழிவகை காணவேண்டும். ”அரசியலால் ஜாதியை அழிக்க முடியவில்லை என்றால், இந்த பஞ்சாயத்தை ஏன் இளைய சமுதாயத்திடம் இறக்குகிறீர்கள்?” என்பதுதான் இவ்விஷயத்தில் என்னுடைய தீர்க்கமான கேள்வி. இது குறித்து SLG –யின் மூலமாகவே ஆணவக்காதல் என்றால் என்ன? ஆணவக்கொலை என்றால் என்ன? காதலால் ஏன் ஜாதியை அழிக்க முடியாது? வேறுபாடுகளை எப்படி போக்க முடியும்? அதற்காக சமுதாயம் எவ்வகையில் முன்னேற்பாடாக இருக்க வேண்டும்? ஜாதியை அழிக்க காதல் என்பதெல்லாம் ஒரு காரணமா? பல வீடியோக்களை பதிவிட்டுள்ளோம். காதல் என்பது இயல்பான ஒரு விஷயம். உலகம் உள்ளவரை அது இருக்கப்போகிற ஒன்றுதான். காதல் என்றால் என்னஅதில் தெய்வீகம் எந்தளவிற்கு உள்ளது? உண்மைக்காதலுக்கும் போலியான காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள் எவை? என்றெல்லாம் நிறைய பேசியாகிவிட்டது.

ஆக, காதலால்தான் ஜாதியை ஒழிக்கமுடியும் என்கிற விஷயத்தை மீண்டும், மீண்டும் எடுத்து கையாளாமல், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப.வீரபாண்டியன் போன்றோர் இன்றைய ஜாதிகளுக்கான உண்மையான காரணம் என்ன? என விடைதேட முயற்சிக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச்சமூகத்தில், நாகரீகத்தில் இத்தனை ஜாதிகளை கல்வெட்டுகளிலோ அல்லது வேறெந்த வகையிலுமோ காண முடியாது. இன்றைய ஜாதிகளின் பெயர்களில் ஒன்றையேனும் அவற்றில் காண முடியாதுஅந்தந்த காலகட்டங்களில் சில பெயர்கள் வருவதும், போவதுமாக இருக்கின்றன. சில சமூகங்கள் உருவாகின்றன. மாற்றமடைகின்றன. ஒரு சமுதாயம் உருவானால் அவர்கள் அனைத்து வகையிலும் தங்களுடைய வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.

ஆக, இவை அனைத்தையும் சீர்தூக்கிப்பார்த்த வகையில், “ஜாதியை ஒழித்தே தீருவோம்என்று முழங்கும் ஜாதிக்கட்சிகளே (!) அவர்கள் தங்கள் ஜாதியை கட்டிக்காப்பாற்றி, வளர்க்கிறார்களே தவிர, உண்மையில் அவர்கள் ஜாதியை ஒழிக்க முனையவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. அப்படி இல்லையென அவர்கள் மறுப்பார்களாயின், ஜாதிப்பெயர் மாற்றத்திற்காக போராட வேண்டிய அவசியமே இராது. இளைய தலைமுறையிடம் பரிசுத்தமான, தெய்வீகமான அம்சமாக கொஞ்சமாக இருக்கக்கூடியதேகாதல்”. அதிலும் அரசியலை ஏன் கலக்க வேண்டும்? என்பதே என் நிலைப்பாடு.

காதல்என்கிற உணர்வு சுத்தமான தெய்வீகமானது (purely divine). வேறு எந்த மாசுமருவும் இல்லாமல் ஆழ்ந்த விருப்பத்தின் பேரில் வரக்கூடியது. ”அந்த பெண் அழகாக இருக்கிறாள்.. நன்கு படித்திருக்கிறாள்அரசு வேலையில் இருக்கிறாள்என்பதாலோ..”அந்த பையனிடம் பணம் அதிகமாக இருக்கிறது.. கார் இருக்கிறது.. பைக் இருக்கிறதுஎன்பதாலோ ஒருகாதல்ஏற்படுமென்றால் நிச்சயம் அது தவறுஇவை போன்றவை எல்லாமே எதையோ சம்பந்தப்படுத்தி (Love with relevance) வரக்கூடிய காதல். அது Love with Emotion அல்ல. இதைப்புரிந்துகொள்ள வேண்டிய பக்குவம் ஆணுக்கும் தேவை. பெண்ணுக்கும் தேவை. இன்றைக்கு இருக்கூடிய சமூக அமைப்பில் ஒரு ஆண் இதனை தவறாக புரிந்து கொண்டால் அவனுக்கு பாதிப்பு குறைவு. அமெரிக்கா மற்றும் சீனாவில் பிரச்சினை கிடையாது. ஆனால், பெண் தவறாக புரிந்து கொண்டால் நிச்சயம் பாதிப்பு அதிகமாகும். அதனால்தான், காதலை ஒரு கடவுள் அளவிற்கு உயர்த்திப்பிடிக்காமல் மானிடத்தின் எதார்த்தமான உணர்வாக கருதும் அணுகுமுறையையோடு காதலை கொண்டாடுங்கள்.

உண்மையான காதல் என்பதே தாம்பத்ய வாழ்வின் 25 ஆண்டுகளுக்குப் பின்னரே தெரியும் என்று சமீபத்தில் ஒரு நண்பரின் பதிவைக் கண்டேன். அதை நானும் நம்புகிறேன். அப்படிப்பட்ட காதல் உண்மையான காதல் மட்டும்தான். அதுவன்றி வேறு இருக்க முடியாது. நம் கலாச்சாரத்தில் 60 ஆம் கல்யாணம், 80 ஆம் கல்யாணம் என்றெல்லாம் நடத்தப்படுவதே அந்த தாம்பதியரின் காதலைப் பாராட்டுவதற்குத்தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, இதன் மூலம் இந்த கட்டுரையானது காதலுக்கு ஆதரவாகவும், சுப.வீரபாண்டியன் போன்றோருக்கு எதிராகவும்தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  


No comments:

Post a Comment

15.கலாச்சாரம் என்றால் என்ன?

  கலாச்சாரம் என்றால் என்ன ? கலாச்சாரம் என்றால் என்ன ? அதை எப்படி வகைப்படுத்திப்பார்ப்பது ? என்றெல்லாம் மக்கள் கேட்கிறார்கள் . ஒரு ...