உள்ளதைச் சொல்கிறேன் (சமூகம் பகுதி-3)
குஜராத் ’கர்பா’ நடனத்தின் பழமை!
இந்த கர்பா நடனம் 4000 ஆண்டுகள் பழமையானது
என்பது சரியா? தவறா? என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரைக்கும் அது சரி. எப்படி? இதற்காக நெடிய உலக வரலாற்றினைப் பார்ப்போம். ஒரு க்ரோனாலஜி (Cronology).
இந்த சூரியக் குடும்பம் (solar system) வந்து 5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு
1 பில்லியன் ஆண்டுகள், அதாவது ‘fungai’ இன்றைக்கு சொல்லப்படும் fungus (பூஞ்சை) எல்லாம் வந்துவிட்டது.
40 லட்சம்
ஆண்டுகளாக மனிதர்கள் பல்வேறு வடிவங்களில் ஹோமோ எரெக்டர்கள் (Homo Erectors), நியாண்டர்தால் (Neondardal),
தனோஷிவியன்ஸ் (Thanoshivians) என்றெல்லாம் வருகிறார்கள்.
நவீன ஹோமோ சேபியன்ஸ் (homo sapiens) 1, 1 ½ , 2 லட்சம் ஆண்டுகள் என்று கொள்ளலாம்.
இவர்கள் எல்லாருக்குமே உலகத்தில் ------???----- (2:57) ஹோமோ சேபியன்ஸ் மற்ற எல்லாரும் அழிந்து விட்டனர். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள்தான். எல்லாருக்குமே அவரவர் பூர்வீக முகவரி எது? என ஆய்வு செய்தால், சீனர்கள், அமெரிக்கர்கள் என அனைவருக்குமே ஆப்பிரிக்காதான்
பூர்வீகமாக இருக்கும். இன்றைக்கு நிலத்திற்காக சண்டைபோடும் நம் பக்கத்து வீட்டுக்கார்ர்களுக்குக்கூட ஆப்பிரிக்காதான்
பூர்வீகம். ஆப்பிரிக்காவிலிருந்து வந்து பல்வேறு இடம்பெயர்வு முறை (various migrate pattern) –இல் பல்வேறு நாடுகளுக்கு வருகிறார்கள்.
இந்தியாவிலேயேகூட பல்வேறு
இடம்பெயர்வு முறை இருக்கிறது. அதில் 12,500 ஆண்டுகளில்
critical point halo scene effect (முக்கிய புள்ளி ஒளிவட்ட காட்சி விளைவு) சொல்கிறோம். அங்கேதான் ஒரு நிலையான வானிலை, காலநிலை (Stable
weather, Climate) எல்லாம் ஒத்துப்போகிறது. மனிதர்களின் இடம்பெயர்வு தீர்வு (Migration settlement) – அந்த காலகட்டத்திற்குப்
பிறகுதான். விவசாயம் மற்றும் வீட்டுவசதி எல்லாம் அதே காலகட்டம்தான். நம் இராமாயணம், மகாபாரதம் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு (B.C.) முன்பு
8000, 5000 ஆண்டுகள் எனக்கூறும் ஒரு சில (கணிப்புகள்) Predictions
இருக்கின்றன. இதில் கர்பா நடனம் எப்படி 4000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறோம் என்றால், இன்று அதாவது கிறிஸ்துவிற்குப் பின் (A.D.) 2000 ஆண்டுகளைக் கழித்து விட்டால் கிறிஸ்துவிற்கு முன்
2000 ஆண்டுகள். நம் சங்கால இலக்கியங்களின் காலகட்டமானது கிறிஸ்துவிற்கு முன் 300 ஆண்டுகள். நடனத்தில் பரதநாட்டியத்தின் நாட்டிய சாஸ்திரங்களைப் பார்த்தால் பரத முனிவர் எழுதியது. இது 2 A.D. அதாவது 2000
ஆண்டுகள் பழமையானது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. பரதநாட்டியம் எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்ட நடனம் (organized dance). இந்த கர்பா நடனமானது இயற்கையான நடனம் ஆகும். இதற்கென ஆசிரியர் என எவரும் கிடையாது.
இதற்கென ஒரு புத்தகம் கிடையாது. முதலில் வந்தது இலக்கணமா? அல்லது இலக்கியமா? என்று கேட்டால், இலக்கணம் வந்த பிறகுதானே இலக்கியம் வருமென்று கருதுவார்கள். ஆனால்.. உண்மை அதுவல்ல. இலக்கியம்தான் முதலில் தோன்றுகிறது. அதன்பிறகுதான் இலக்கணம் வருகிறது. இலக்கணம் வந்த பிறகு இலக்கியங்கள் எல்லாம் இலக்கணத்தின் அடிப்படையில் வரும். ஆக, முதலில் இயற்கையான நடனம். அதன்பிறகுதான் ஒழுங்கமைக்கப்பட்ட நடனம் (organized dance). இயற்கை நடன வடிவம் (Natural dance Format) எங்கே என்று பார்த்தால் 8000
B.C இல் சிசிலி நாட்டில் அடவுரா (Addaura) என்கிற குகையில்தான் அது குறித்த வேலைப்பாடு (Engraving)
உள்ளது. நடுவில் இரண்டு பேர், அவர்களைச் சுற்றிலும் பத்துபேர் நடனம் ஆடுகிறார்கள். ஆக, நடனத்தின் பழமை 10,000 ஆண்டுகள். எல்லா சமூகத்திலுமே ஒரு நடன வடிவம் (Form
of Dance) வைத்திருந்தனர். அதில் அந்த பழமையை தக்க வைத்துக்கொள்பவர்கள்
சிலர். நம் ஊரில் அடிக்கும்
கும்மிக்கு நீங்க
2000, அல்லது 3000 ஆண்டுகள் பழமையானது என்னும் பெருமையை எளிதாக தந்துவிடலாம். அதற்கும் முன் எப்படி என்று நமக்குத் தெரியவில்லை. குஜராத்தின் கர்பா நடனத்தை அவர்கள் குஜராத், ராஜஸ்தானில் நன்கு தக்க வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் 4000
ஆண்டுகளுக்கும் முன்பு (அதாவது 2000 கி.பி. + 2000 கி.மு) என்று தெரியவருகிறது. இந்த அடிப்படையில்தான் கர்பா நடனமானது தோரயமாக 4000
ஆண்டுகள் பழமையானது என முடிவிற்கு வருகிறோம்.
-----------------------------------------------